சுற்றுச்சூழல் கட்டுரைக்கு அங்கீகாரம்.. துபாய் சர்வதேச அமைதி மாநாட்டில் பங்கேற்கும் அரியலூர் சவுமியா
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வரும் சவுமியா எனும் மாணவி துபாயில் நடைபெறும் சர்வதேச அமைதி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
அபுதாபி: அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவி சவுமியா சுற்றுச்சூழல் குறித்த தனது கட்டுரைக்காக துபாயில் சர்வதேச அமைதி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
அரியலூரை சேர்ந்தவர் சவுமியா. இழர் அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது மூன்றாம் ஆண்டு பொறியியல் பட்டம் படித்து வருகிறார். இவருக்கு சுற்றுச்சூழல், இயற்கை, சுகாதாரம் உள்ளிட்டவற்றின் மீது தீராத ஆர்வம் இருந்து வருகிறது.

இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க தன் பங்கிற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்பதால் எப்போதும் அது குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட வண்ணம் இருந்தார். மின் மற்றும் மின்னணு துறையில் (EEE) பொறியியல் படித்து வரும் சவுமியா காரியம் மற்றும் மெர்குரியால் சுற்றுச்சூழலுக்கும் உடலுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு கட்டுரையை தயார் செய்தார்.
இதையடுத்து 4 மாதங்களுக்கு முன்பு அந்த கட்டுரையை அமெரிக்க நிறுவனமான உலக அமைதி மாநாட்டிற்கு சமர்ப்பித்தார். இந்த கட்டுரையில் மாணவி குறிப்பிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு அவரை சர்வதேச அமைதி மாநாட்டிற்கு அழைத்துள்ளார்கள்.

இந்த மாநாடு துபாயில் வரும் 15 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள விசா, விமான டிக்கெட் உள்ளிட்ட இதர ஆவணங்களை பெற்றுக் கொண்டார். தனது கட்டுரையையும் அமெரிக்க நிறுவனம் அளித்த அங்கீகாரத்தையும் தனது பல்கலைக்கழகத்தின் டீன், முதல்வர், பேராசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், மாணவர்களிடம் காண்பித்துள்ளார்.

அவர்கள் சவுமியாவை வெகுவாக பாராட்டியுள்ளனர். அது போல் சவுமியா அந்த மாநாட்டில் கலந்து கொள்ள தங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என அண்ணா பல்கலைக்கழகம் சான்றிதழ் அளித்துள்ளது. அரியலூரில் இருந்து சென்னை வந்து 3 ஆண்டுகள் தங்கி படித்து தற்போது தனக்கு கிடைத்த அங்கீகாரத்திற்கு கல்லூரி நிர்வாகம் பாராட்டு தெரிவித்ததோடு மாணவி துபாய் சென்று வர ஒப்புதலும் தந்துவிட்டதால் மாணவி மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

அவரது பெற்றோரும் உறவினர்களும் தனது மாணவி கடல் கடந்து போவதை எண்ணி பூரித்து போயுள்ளார்கள். வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையில் காரியம் இருக்கிறது , இது காற்று மாசை ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications