துபாயில் தமிழ் கிராம மக்கள் ஒன்று கூடும் விழா.. வி.களத்தூர் சங்கமம் என்ற பெயரில் கொண்டாட்டம்
அபுதாபி: துபாயில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வரும் தமிழ் கிராம மக்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி துபாய் முஸ்ரிப் பாரக்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிராமத்திலிருந்து 1970 ம் வருடத்திலேயே துபாயை நோக்கி பயணம் செய்தனர்.
இந்தியாவிலிருந்து மற்ற பிற மாநிலங்களிலிருந்தும் லான்ச் எனப்படும் பெரிய படகுகளில் துபாய் நோக்கி பிழைப்பிற்காக மக்கள் பயணித்தனர்.
துபாய் வளர்ச்சியில் ஆரம்ப காலக்கட்டங்களில் இவர்களின் உழைப்பும் இன்றியமையாதது.

துபாய்
கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து துபாயில் வசிக்கும் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் மக்களின் இந்த ஒன்று கூடல் நிகழ்விற்கு "வி.களத்தூர் சங்கமம்" என்று பெயரிட்டிருந்தனர். இந்த ஒன்று கூடல் நிகழ்ச்சி துபாய் முஸ்ரிப் பூங்காவில் நடைபெற்றது. ஆரம்ப காலங்களில் துபாய் வந்திருந்தவர்கள் தாய்நாட்டிற்கு திரும்பியபோதிலும் அவர்களின் வாரிசுகள் தொடர்ந்து துபாயில் வசித்து வருகின்றனர்.

விருந்து உபசாரம்
இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பெண்களுக்கான விளையாட்டுகளும் நடைபெற்றன. பின்னர் விருந்து உபசாரம் நடைபெற்றது. துபாய் முஸ்ரிப் பார்க் களைகட்டியிருந்தது.

வருமானம் ஈட்டுதல்
நிகழ்வின் இறுதியில் 1970 காலக்கட்டத்திலேயே துபாய்க்கு வந்து உழைத்து வருமானம் ஈட்டியதோடு மட்டுமல்லாமல் நாட்டுக்காகவும் ஊருக்காகவும் உதவும் வகையில் பல்வேறு நற்காரியங்கள் செய்து இளையோருக்கு வழிகாட்டியமைக்காக, ஆரம்பம் காலம் தொட்டு செயல்பட்டு, பின்னர் அவர்களின் வழியில் செயல்பட்ட முக்கியநபர்களுக்கு அவர்களின் சேவையை நினைவுகூறும் விதமாக அவர்களுக்கு பாராட்டு விருது வழங்கப்பட்டது. பாராட்டு விருதுகளை அவரவர்களின் வாரிசுகள் மற்றும் உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.

ஏராளமானோர் பங்கேற்பு
வி.களத்தூருக்கு திரும்பியிருந்தாலும் முன்னோர்களின் சேவையை நினைவு கூர்ந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ வைத்தது. வி.களத்தூர் சங்கமம் நிகழ்ச்சியில் சுமார் 600 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி, புகைப்படம்: கமால் பாஷா, துபாய்
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications