கொரோனாவை விட மோசம்? "நிமினியோ" பாதிப்பு.. அபுதாபியில் பரவிய மெர்ஸ் கொரோனா! அலர்ட் தரும் WHO
அபுதாபி: கொரோனா பாதிப்பில் இருந்தே பெரும்பாடுபட்டு இப்போது தான் நாம் மீண்டுள்ள நிலையில், இப்போது புதிதாக மெர்ஸ் வகை கொரோனா அபுதாபியில் கண்டறியப்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் படுத்தியபாட்டை இதுவரை நாம் யாரும் மறக்கவில்லை. கடந்த 2019 இறுதியில் பரவிய கொரோனா நம்மை ஒரு வழி செய்துவிட்டது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா உலக நாடுகளைப் புரட்டிப் போட்டது.
சுமார் 2 ஆண்டுகள் எங்கே போனது என்றே தெரியாத அளவுக்கு கொரோனா காலி செய்துவிட்டது. வேக்சின் தொடங்கிப் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பிறகு கொரோனா இப்போது தான் கட்டுக்குள் வந்துள்ளது.

மெர்ஸ் கொரோனா: நாமும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறோம். இதற்கிடையே நேற்றிரவு அபுதாபியில் ஆபத்தான மிடில் ஈஸ்ட் சுவாச நோய்க்குறி கொரோனா வைரஸ் (MERS-CoV) பாதிப்பு உறுதியாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அங்குள்ள அல் ஐன் நகரில் கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 28 வயது நபர் இந்த மெர்ஸ் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது கோவிட் 19 பாதிப்பை விட மோசமானது என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக முதற்கட்டமாக அந்த நபருடன் தொடர்பில் இருந்த 108 பேரைச் சுகாதார அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். இருப்பினும், அவர்கள் யாருக்கும் மெர்ஸ் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
எப்படிப் பரவும்: பாதிக்கப்பட்ட நபர் இப்போது எந்த நிலையில் இருக்கிறார் என்பது போன்ற தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பொதுவாக இந்த மெர்ஸ் கொரோனா ட்ரோமெடரி ஒட்டகங்கள் மூலமாகவே மனிதர்களுக்குப் பரவும். ஆனால், பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் ட்ரோமெடரி ஒட்டகங்கள் அருகில் கூட சமீப காலங்களில் செல்லவில்லையாம். அப்படியிருக்கும் போது இவருக்கு எப்படி இந்த பாதிப்பு வந்தது என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
MERS-CoV என்று அழைக்கப்படும் மிடில் ஈஸ்ட் சுவாச நோய்க்குறி கொரோனா வைரஸ் சவுதி அரேபியாவில் கடந்த 2012ஆம் ஆண்டில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதன் பிறகு இது அல்ஜீரியா, ஆஸ்திரியா, பஹ்ரைன், சீனா, எகிப்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஈரான், இத்தாலி, ஜோர்டான், குவைத், லெபனான், மலேசியா, கத்தார், சவூதி அரேபியா, பிரிட்டன், ஏமன் உட்பட 27 நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மெர்ஸ் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 936 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மொத்தம் 2,605 கேஸ்கள் பதிவான நிலையில், 936 பேர் உயிரிழந்துள்ளனர். கோவிட் 19 நோயாளிகளில் 5% கீழ் மட்டுமே உயிரிழப்பு இருந்த நிலையில், மெர்ஸ் கொரோனாவால் பாதிக்கப்படும் 35% பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
அறிகுறிகள்: மெர்ஸ் என்பது விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு இடையே பரவக்கூடிய ஒரு ஜூடோனிக் வைரஸ் (zootonic virus) ஆகும். இவை பெரும்பாலும் சவூதி பாதிக்கப்பட்ட ட்ரோமெடரி ஒட்டகங்கள் மூலமாகவே மனிதர்களுக்கு வரும்..
காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாக இருக்கும். இந்த பாதிப்பு மோசமானால் சில நேரங்களில் நிமோனியா பாதிப்பு கூட ஏற்படும் அபாயம் இருக்கிறது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications