பள்ளியிலேயேவா? என்ன கொடுமை இது? ச்சே.. பெண் ஊழியருடன் உல்லாசமாக இருந்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

அமராவதி: ஆந்திராவில் பள்ளியில் பெண் ஊழியருடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் தலைமை ஆசிரியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தின் மசூலிப்படினம் அருகே உள்ளது சிலகலபுடி கிராமம். இங்கு அரசு சிறுபான்மையினர் உண்டு உறைவிடப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.

இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக ஆனந்த குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். ஆனால் இவர் பள்ளிக்கு சரியாக வருவதில்லை என்றும் அப்படி வந்தாலும் பெரும்பாலும் மொபைல் போனிலேயே பேசிக்கொண்டிருப்பதாகவும் மாணவர்கள் தொடர் புகார் கூறி வந்துள்ளனர்.

வீடியோ

வீடியோ

இவ்வாறு இருக்கையில்தான் அலுவலக பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பள்ளியில் இளம்பெண் ஒருவர் சேர்ந்துள்ளார். இவர் பணிக்கு சேர்ந்ததிலிருந்து தலைமையாசிரியர் ஆனந்த குமார் அடிக்கடி விடுப்பு எடுப்பதை தவிர்த்து வந்துள்ளார். பல நேரங்களில் அப்பெண்ணை தனது அறைக்கு வரச்சொல்லி தொந்தரவு செய்திருக்கிறார். இந்த பழக்கம் நாளடைவில் இருவரிடையே நட்பாக மாறி இருக்கிறது. பின்னர் இவர்கள் பள்ளிக்குள்ளேயே காதல் மொழி பேச தொடங்கியுள்ளனர். இது குறித்து மாணவர்கள் பலர் கண்டும் காணாமல் நகர்ந்து சென்றுள்ளனர். ஆனால் இச்சம்பவம் ஊர் மக்கள் காதுகளுக்கு எட்டியுள்ளது.

கைது செய்ய வலியுறுத்தல்

கைது செய்ய வலியுறுத்தல்

இந்நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்னர் இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அதில தலைமை ஆசிரியர் ஆனந்த குமார், அலுவலக பெண் பணியாளருடன் நெருங்கி பழகியுள்ளார். வீடியோவை கண்ட கிராம மக்கள் இவரை பணி நீக்கம் செய்து இவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த சம்பவம் கல்வித்துறையின் உயர் அதிகாரிகளின் காதுகளுக்கு எட்டியிருக்கிறது. எனவே இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். உத்தரவின் பேரில், குண்டூர் மண்டல துணை இயக்குனர், மாவட்ட கன்வீனர், மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விசாரணை

விசாரணை

விசாரணையில் தலைமை ஆசிரியர் ஆனந்த குமார் அலுவல பணிப்பெண்னை தன்னுடைய ஆசைக்கு இணங்க வைத்தது தெரிய வந்துள்ளது. மட்டுமல்லாது தனது ஆசைக்கு இணங்கினால் பல்வேறு சலுகைகளை பெற்று தருவதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து அப்பெண் வேறு வழியின்றி அவர் சொல்வதை கேட்டு நடந்துள்ளார். ஆனால் நாளடைவில் பள்ளி வளாகத்திலேயே அவர் அத்து மீறி நடந்துக்கொள்ள தொடங்கியதாக அப்பெண்மணி கூறியுள்ளார். இதனை பதிவு செய்த விசாரணை ஆணையம் உயர் அதிகாரிகளுக்கு அதை அனுப்பி வைத்தது.

தற்காலிக தலைமை ஆசிரியர்

தற்காலிக தலைமை ஆசிரியர்

இந்த விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் 9ம் வகுப்பு மாணவர் ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் மாணவனுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். மாணவனின் பெற்றோர் இவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் விசாரணை நிலுவையில் இருக்கிறது. அதே போல இரவு நேரங்களில் குடித்துவிட்டு பள்ளிக்கு வருவதாகவும் புகார்கள் வந்திருக்கிறது. எனவே இந்த புகார் அனைத்தையும் கருத்தில் கொண்டு இவரை பணியிடம் நீக்கம் செய்வதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய தலைமை ஆசிரியர் நியமிக்கப்படும் வரை இப்பள்ளிக்கு எலுரு மாவட்டம், முசுனூரு பகுதியில் இயங்கி வரும் பள்ளியில் பணியாற்றும் சமூக அறிவியல் ஆசிரியர் சாம்பசிவ ராவ் தற்காலிக தலைமை ஆசிரியராக நியமிக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+