உடலுறவு.. அரியலூர் வங்கி ஊழியரின் அக்கப்போரு.. மனைவியின் அந்தரங்க வீடியோவை, போனில் கண்டு கதறிய கணவர்
அரியலூர்: சேலம் தனியார் வங்கி ஊழியர் தந்த அதிர்ச்சி மறைவதற்குள், இன்னொரு ஊழியர் அட்டகாசத்தில் இறங்கியிருக்கிறார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா.. 35 வயதாகிறது.. அங்குள்ள தனியார் வங்கி ஒன்றில் இவர் வேலை பார்த்து வருகிறார்..
தவணை பணம்: இந்த வங்கி மூலம், கடனுதவி பெற்றவர்களிடமிருந்து, தவணை தொகையை மாத மாதம் நேரிலேயே சென்று வசூலித்து வருவதுதான் சிவாவின் முக்கிய பணியாகும்.. அப்படித்தான், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மருங்காலக்குறிச்சி என்ற கிராமத்தில் தவணை தொகையை பெற சென்றிருக்கிறார்.

அப்போது இந்த கிராமத்தில் வசித்து வரும் 39 வயது பெண்ணுடன், சிவாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.. இதுவே தகாத உறவாகவும் மாறியிருக்கிறது.. இத்தனைக்கும் இந்த பெண்ணுக்கு திருமணமாகிவிட்டது. ஆனால், பெண்ணின் கணவர் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறாராம்..
கள்ள ஜோடி: அதேபோல சிவாவுக்கும் கல்யாணமாகி குழந்தையும் இருக்கிறது.. இருவருக்குமே குடும்பம் உள்ளநிலையில், தகாத உறவு தொடர்ந்து வலுவாகிவந்துள்ளது.. ஒருகட்டத்தில், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக, இந்த கள்ளஜோடிக்கு இடையே தகராறு வந்துவிட்டது.. இதுதொடர்பாக சிவா மீது அந்த பெண்ணுக்கு கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
இந்நிலையில், அந்த பெண்ணை சிவா வழக்கம்போல உல்லாசத்துக்கு அழைத்தபோது, மறுத்துவிட்டாராம்.. இதனால் ஆத்திரமடைந்த சிவா, ஏற்கனவே அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்தபோது எடுத்த வீடியோக்களை தன்னுடைய நண்பர்களின் வாட்ஸ்அப்களுக்கு அனுப்பி வைத்துவிட்டாராம்..
வீடியோ: அந்த நண்பர்களில் ஒருவர், இந்த ஆபாச வீடியோவை சென்னையிலிருக்கும் அந்த பெண்ணின் கணவருக்கே அனுப்பி வைத்துவிட்டாராம்.. இந்த வீடியோவை பார்த்து அந்த பெண்ணின் கணவர் அதிர்ச்சியில் உறைந்து நின்றார். பிறகு அந்த வீடியோவுடன் ஜெயங்கொண்டம் போலீஸுக்கு ஓடிவிட்டார்.. வீடியோ ஆதாரத்தை தந்து சிவா மீது புகார் செய்தார்.
இந்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீசாரும் வழக்கு பதிவு செய்து தனியார் வங்கி ஊழியர் சிவாவை கைது செய்துள்ளனர்.. அவரிடம் விசாரணையும் நடந்து வருகிறது.. இந்த சம்பவம் அரியலூரில் அதிர்ச்சியை தந்து வருகிறது.
வாழப்பாடி வங்கி: 2 நாட்களுக்கு முன்புகூட, சேலம் வாழப்பாடியில் ஒரு கொடுமை நடந்தது.. பிரசாத் என்பவர் தவணை தொகை ரூ.770 கட்டவில்லை என்பதற்காக, அவரது மனைவியை பிணையமாக கொண்டுவந்துவிட்டார் அந்த தனியார் வங்கி ஊழியர்.. வங்கிக்கு வந்து 770 பணத்தை கட்டி விட்டு மனைவியை, கணவர் அழைத்துச்செல்லட்டும்' என்று வங்கி ஊழியர் சொன்னாராம்.
வங்கி ஊழியர்களுக்கென்று என்னமாதிரியான விதிமுறைகள், வழிவகைகளை, தனியார் வங்கிகள் வரையறுத்துள்ளன என்று தெரியவில்லை.. ஆனால், ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை ஏற்கனவே விதித்துள்ளது. இந்த வழிகாட்டுதல்களை சரிவர கடைபிடிக்காமல், வாடிக்கையாளர்களை மிரட்டுவதும், அசிங்கமாக பேசுவதும் என்ற செயல்களில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது.
ரிசர்வ் வங்கி : ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள், கடன் வசூலிக்கும் நேரத்தை தாண்டி தவறாக நடந்து கொண்டால், cms.rbi.org.in என்ற இணையதளம் வாயிலாக புகார் அளிக்கலாம் என்று ஏற்கனவே பொதுமக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருப்பதை இங்கு நாம் நினைவுகூர வேண்டியிருக்கிறது.
இந்த அரியலூர் சம்பவத்தை பொறுத்தவரை முழுக்க முழுக்க, தனிநபர் ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்றாலும், தனியார் வங்கி ஊழியர்களின் அத்துமீறல்களும், அடாவடிகளும், சம்பந்தப்பட்ட வங்கியின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் சேர்த்தே குலைத்துவிடும். எனவே, ஊழியர்கள் விஷயத்திலும் சம்பந்தப்பட்ட வங்கிகள் "கடிவாளத்தை" போட்டால், நல்லா இருக்கும்!!!












Click it and Unblock the Notifications