Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரியலூர் குரு சென்டிமென்ட்? 2026 ஜெயங்கொண்டம் கோட்டையை காப்பாரா திமுக கண்ணன்? பாமக பாலு விடமாட்டாரே!

Subscribe to Oneindia Tamil

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி, தமிழக மக்கள் பெரிதும் எதிர்நோக்கும் தொகுதியாகும்.. தேர்தல் என்றாலே பரபரப்பும், விறுவிறுப்பும் தாண்டி, பதற்றத்தையும் தந்துவிடக்கூடிய தொகுதியாகும். அதனால்தான் அரியலூர் தொகுதி 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அரசியல் பரபரப்பில் மாறியுள்ளது... தற்போதைய கள நிலவரம் என்ன?

அரியலூர் தொகுதி அரசியல் ரீதியாக வன்னியர் சமுதாய ஆதாரத்தை பெரிதும் பொறுத்து, வெற்றி முடிவுகள் மாறிக் கொண்ட இடமாகும். கடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் ஜெயங்கொண்டத்தில் வெற்றி பெற்றார், அதே சமயம் பாமக கட்சிக்கும் இங்கு வலுவான ஆதரவு உள்ளது.

Ariyalur Jayankondam Constitution 2026 Assembly Election

அரியலூர் தொகுதி

இப்போது அதிமுக‑பாஜக கூட்டணியும் போட்டிக்கு தயாராகிவிட்டது.. கடந்த தேர்தல்களில் வாக்கு வித்தியாசம் மிகவும் நெருக்கமாக இருந்ததால், திமுக, பாமக, அதிமுக‑பாஜக கூட்டணிகள் என எல்லாமே கோதாவில் குதித்திருப்பது எதிர்பார்ப்பை பெருக்கி உள்ளது..

வன்னியர் சமூகத்தின் வாக்குகள் இங்கு வெற்றியை தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக இருந்தாலும், கடந்த காலத் தேர்தல்கள் சாதி பலத்தையும் தாண்டி கட்சி பின்னணியும், மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளும் இங்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதையே உணர்த்துகின்றன.

திமுக கண்ணன்

2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக வேட்பாளர் க.சொ.க. கண்ணன் கிட்டத்தட்ட 5000 அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வழக்கறிஞர் கே. பாலுவை வீழ்த்தி வெற்றி பெற்றார்... இது திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியாகும்.. காரணம், இது வெறும் அரசியல் வெற்றி மட்டுமல்ல, 20 வருடம் கழித்து திமுக காலூன்றியதால், கண்ணனின் வெற்றி மிக முக்கியமாக அப்போது பார்க்கப்பட்டது..

கண்ணனின் தந்தை க.சொ. கணேசன் ஏற்கனவே இங்கு 2 முறை எம்எல்ஏவாகவும் இருந்தனர்.. பாமக பாலு வலுவான வேட்பாளராக இருந்தபோதிலும், வாரிசு அரசியல் என்ற விமர்சனங்களை தாண்டி, உள்ளூர் மக்களுடனான நேரடி தொடர்புதான் கண்ணனின் வெற்றிக்கு அப்போது கை கொடுத்தது..

பாமக கோட்டை ஜெயங்கொண்டம்

எனினும் ஜெயங்கொண்டம் என்றாலே பாமகவின் கோட்டை என்ற பிம்பம் படிந்து கொண்டுதான் உள்ளது.. இதற்கு காரணம் பாமகவின் மறைந்த தலைவர் காடுவெட்டி குரு, இந்த தொகுதியின் அடையாளமாகவே திகழ்ந்தார்.

தனக்கு சீட் கிடைக்கவில்லை என்று சில நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்த நேரத்தில் பாலு வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே அக்கட்சியை சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும், முன்னாள் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவை வணங்கி பிரச்சாரத்தையும் ஆரம்பித்திருந்தது நினைவிருக்கலாம்..

ஆனால் குரு அப்போது இல்லாத சூழலில், பாமக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டும்கூட, திமுகவை அவர்களால் வெல்ல முடியவில்லை. அந்த வெற்றிக்கு விசிகவின் வாக்குகளும் ஒரு காரணமாக இருந்ததன. எனவே விட்டதை பிடிக்க அதிமுக பாமகவும், கிடைத்ததை தக்க வைக்க திமுகவும் மீண்டும் முயற்சியில் இறங்கி உள்ளன.

திமுக, பாமக வேட்பாளர்கள் யார்

அந்தவகையில் கா.சொ.க.கண்ணனையே மீண்டும் வேட்பாளராக திமுக அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. காரணம், இந்த 4 வருடங்களில் தொகுதியில் சிறப்பாக பணியாற்றியதுடன், தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து சாலை உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை மேற்கொண்டு வந்துள்ளார்..

முக்கியமாக தொகுதி மக்களின் சுக துக்க நிகழ்ச்சிகளில் முதல் நபராக பங்கேற்று வருவது, பலரது கவனத்தை பெற்று வருகிறது.. சட்டமன்றத்தில் வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் தொகுதி பிரச்னைக்காக குரல் கொடுத்து வருகிறார். அமைச்சர்களை சந்தித்தும் தொகுதி கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார்... எனவே கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் ஒதுக்கப்படாவிட்டால் மீண்டும் கா.சொ.க.கண்ணன் போட்டியிடவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்கிறார்கள்..

வழக்கறிஞர் பாலு

பாமகவில் வழக்கறிஞர் பாலுவே களமிறக்கப்படலாம் என தெரிகிறது.. களத்தில் தெரிந்த முகம், பாமக அதிமுக கூட்டணி வாக்குகள், தேசிய நெடுஞ்சாலைகளில் மது கடைகளை ஒழிக்க போராடியவர், என்ற அடிப்படையில் தனித்துவம் பெற்றவர் என்பதால், பாலுவை வேட்பாளராக அதிமுக-பாமக கூட்டணி அறிவிக்கலாம்..

இதற்கிடையே, நாம் தமிழர் கட்சி போன்ற மாற்று அரசியல் சக்திகள் பிரிக்கும் வாக்குகள், பெரும் கட்சிகளின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் ஒரு முக்கியக் காரணியாக உருவெடுத்துள்ளன.

ஜெயங்கொண்டம் தொகுதி யாருக்கு

இதற்கு நடுவில் அந்த தொகுதி மக்களின் பிரச்சனைகளும், நீண்ட கால குமுறல்களும் இப்போதே வரிசைக்கட்டி நிற்கிறது.. ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரித் திட்டம், நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு முறையான இழப்பீடு வழங்கப்படாதது, முந்திரி, மணிலா போன்ற விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததும், நவீனப் பதப்படுத்தும் ஆலைகள் இல்லாதது என பல குறைகளும், கோரிக்கைளும் இன்னும் தீர்ந்த பாடில்லை..

எனவே ஜெயங்கொண்டம் தொகுதியை பொறுத்தவரை, அது வெறும் வாக்குகளுக்கான களம் மட்டுமல்ல; அரியலூர் மாவட்டத்தின் வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் உரிமைகளுக்கான அரசியல் குரலாகவும் பார்க்கப்படுகிறது... ஜெயங்கொண்டம் மக்களின் குறைகளை யார் பெரும்பாலும் தீர்த்து வைத்துள்ளார்கள்? இனி யார் தீர்க்க போகிறார்கள், என்பதை வைத்தே ஜெயங்கொண்டம் அரசியல் நகர போகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்...!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+