அரியலூர், திருவண்ணாமலையில் ஆச்சரியம்.. இந்த 5 ரயில்வே ஸ்டேஷனிலும் பளிச் பசுமை பூங்கா.. செம சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

அரியலூர்: சென்னை ரயில் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வரும்நிலையில், அடுத்தக்கட்ட அதிரடியை தெற்கு ரயில்வே கையில் எடுத்திருக்கிறது.

தெற்கு ரயில்வே தனியார் பங்களிப்போடு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சோலார் மின்உற்பத்தி, திடக்கழிவு மேலாண்மை, பசுமை பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ariyalur tiruvannamalai

தெற்கு ரயில்வே: அதாவது, சொந்தமான இடங்களை கண்டறிந்து, வணிக பயன்பாடு மற்றும் பயணியருக்கான வசதிகளை மேம்படுத்தும் பணிகளை தெற்கு ரயில்வே மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில், தனியாரின் பங்களிப்போடு, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஆவடி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய, 8 ரயில் நிலையங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க போவதாக கடந்த வருடம் அறிவிப்பு வெளியாகியிருந்தது.

தாம்பரம்: அதேபோல, தாம்பரம் ரயில் நிலையத்தை 1000 கோடி ரூபாய் செலவில் உலக தரத்தில் மறுசீரமைக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது..

இதன்மூலம், இந்த ரயில் நிலையத்தில் கழிவறைகள், டிஜிட்டல் பலகைகள், எஸ்கலேட்டர்கள், புதுப்பிக்கப்பட்ட இருக்கைகள், வேளச்சேரி சாலை, ஜிஎஸ்டி சாலை என 2 பக்கமும் பிரமாண்ட முகப்புகள், வாகனங்கள் வந்து செல்லும் வழி, நடை மேம்பாலங்கள், பார்க்கிங் வசதி, குடிநீர் வசதிகள், விளக்குகள், நடைமேடைகள் அனைத்தும் உலக தரத்தில் சீரமைக்கப்பட உள்ளது.

விழுப்புரம்: இதுபோலவே, அரியலூர், திருவண்ணாமலை உட்பட 5 ரயில் நிலையங்களின் வளாகங்களில் பசுமை பூங்கா அமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏற்கெனவே 30 ரயில்நிலையங்களில் பசுமை பூங்கா அமைக்கும் பணிகளுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விழுப்புரம் உட்பட 5 ரயில் நிலையங்களில் பசுமைபூங்காக்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, "ரயில்வேக்கு சொந்தமான இடங்களை கண்டறிந்து வணிகபயன்பாடு மற்றும் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இப்போதைக்கு ரயில் நிலையங்கள் மற்றும் அதன் வளாகங்களை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை போற்றும் வகையில், சிறிய பசுமை பூங்கா, பூச்செடிகள், மருத்துவ குணம் கொண்ட செடிகள், பயனுள்ள இதரதாவரங்கள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.

டெண்டர் விரைவில்: சென்னை ரயில் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருவதை போலவே, திருச்சி ரயில்கோட்டத்துக்கு உட்பட்ட விழுப்புரம், அரியலுார், திருவண்ணாமலை, போளூர், விருத்தாசலம் ஆகிய 5 ரயில் நிலையங்களின் வளாகத்தில் பசுமை பூங்காஅமைக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது..

இதில், நிறுவனங்களை தேர்வுசெய்து, பணி ஆணை வழங்கிய அடுத்த 3 மாதங்களிலேயே பணிகளை முடிக்க உள்ளோம்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+