அரியலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமைதிப்பூங்கா..வயிற்றெரிச்சல்..சட்டம் ஒழுங்கை கெடுக்க சதி..அரியலூரில் சிலரை அலறவிட்ட ஸ்டாலின்

Google Oneindia Tamil News

அரியலூர்: தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது.. சட்டம் ஒழுங்கை கெடுக்கலாமா சிலர் நினைக்கிறார்கள். அமைதியாக இருக்கும் தமிழகத்தைப் பார்த்து சிலருக்கு வயிறு எரிகிறது. ஆபத்து ஆபத்து என்று அலறிக்கொண்டிருக்கின்றனர் என்று அரியலூரில் நலத்திட்ட உதவிகளை தொடக்கி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அரியலூரில் 74 முடிவுற்ற திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரியலூர் விழாவில் 57 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர். ரூ.78 கோடி மதிப்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசிய முதல்வர் ஸ்டாலின், கங்கை கொண்ட சோழபுரம் என்ற பெருமையை கொண்ட மாவட்டம் அரியலூர் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்தநாள்! அமீரகத்தில் கேக் வெட்டி களைகட்டிய கொண்டாட்டம்!உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்தநாள்! அமீரகத்தில் கேக் வெட்டி களைகட்டிய கொண்டாட்டம்!

கல்லக்குடி போராட்டம்

கல்லக்குடி போராட்டம்

டால்மியாபுரம் என்ற பெயரை கல்லக்குடி என்று மாற்ற ரயில் மறியல் போராட்டம் நடத்தி தலைவராக கலைஞர் உயர்ந்த மாவட்ட அறியலூர் என்று தெரிவித்துள்ளார். எங்கு திரும்பினாலும் பொக்கிஷமாக காணப்படும் மாவட்டம் அரியலூர் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். பெரம்பலூர் மாவட்டத்தை பிரித்து அரியலூர் மாவட்டத்தை உருவாக்கியவர் கலைஞர் என்று கூறினார்.

அரியலூர் மாவட்டம்

அரியலூர் மாவட்டம்

அரியலூர் மாவட்டம் என்பது அரிய மாவட்டம். அரியலூர் கொல்லாபுரத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். ரூ.32.94 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொல்லியல்துறையில் ஒரு மறுமலர்ச்சியையே உருவாக்கி உள்ளோம் என்று தெரிவித்தார்.

 கங்கை கொண்ட சோழபுரம்

கங்கை கொண்ட சோழபுரம்

கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். அரியலூரை சேர்ந்த ஹாக்கி வீரர் கார்த்திக்கிற்கு விடு ஒதுக்கீட்டு ஆணையை நேரில் சென்று வழங்கியுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் காரிடார் திட்டம் செயல்படுத்தப்படும். அரியலூர் - செந்துறை வரை ரூ.129 கோடி செலவில் 4 வழிச்சாலை அமைக்கப்படும். அரியலூர் மாவட்டத்தில் ரூ.10 கோடி மதிப்பில் புதை படிம பூங்கா அமைக்கப்படும்.

தொழிற்சாலைகள்

தொழிற்சாலைகள்

போட்டி போட்டு கொண்டு தொழில் நிறுவனங்கள் இன்று தமிழகத்துக்கு வருகின்றது. தமிழகத்தில் வேளாண் உற்பத்தி, பாசன பரப்பு அதிகரித்துள்ளது. கட்டணமில்லாமல் பேருந்து வசதி அளித்தன் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.900 சேமிப்பு என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.என்று முதல்வர் தெரிவித்தார்.

 எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த 10 ஆண்டாக இருந்த அதிமுக ஆட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கையில் அதிகாரம் இருந்தும் எதுவும் செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததுதான் கடந்த கால அதிமுக ஆட்சி. கடந்த 10 ஆண்டுகள் கால ஆட்சியின் சீரழிவை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கின்றனர். விமர்சனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல; அவற்றை வரவேற்கிறோம், ஆனால் விஷமத்தனம் கூடாது என கூறினார்.

சட்டம் ஒழுங்கை கெடுக்க சதி

சட்டம் ஒழுங்கை கெடுக்க சதி

இப்போது அவர்கள் கொடுக்கும் பேட்டிகளைப் பார்த்து மக்கள் கைகொட்டி சிரிக்கிறார்கள். உங்கள் யோக்கியதை எங்களுக்குத் தெரியுமே என்று ஏளனமாக சிரிக்கிறார்கள். நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை..ஆனால் கெடுக்கலாமா என சிலர் சதி செய்கிறார்கள். அய்யோ கெடவில்லையே என சிலர் வருத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் தமிழகம் அமைதியாக உள்ளது என்று வயிறு எரிகிறது. புலிக்கு பயந்தவன் என்மீது வந்து படுத்துக்கொள் என்று சொல்வதைப் போல சிலர் ஆபத்து ஆபத்து அலறிக்கொண்டிருக்கிறார்கள். இப்படிச் சொல்லும் சிலருக்கு பதவி நீடிக்குமா என்று அச்சமாக உள்ளது. மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. மக்களுக்கு ஆபத்து இல்லாத ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

English summary
Tamil Nadu is a paradise of peace. Some people feel stomach burning after seeing the peaceful Tamil Nadu. Speaking at the launch of welfare assistance in Ariyalur, Chief Minister Stalin said that they are shouting about danger.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X