மாட்டுப் பொங்கல் பசுவுக்கு மட்டும் தானா? எருமை மாடு என்ன செய்தது! அரியலூரில் திகவின் மாஸ் சம்பவம்!
அரியலூர்: தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாளான நேற்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் எருமை மாடு என்ன செய்தது? என்ற கேள்வியுடன் அரியலூரில் திராவிடர் கழகத்தினர் எருமை மாட்டுக்கும் மாட்டுப் பொங்கல் கொண்டாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை நேற்று முன் தினம் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் ஆகவும் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இன்றைய தினம் காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நேற்று மாட்டுப் பொங்கலை முன்னிட்டு விவசாயிகள் தங்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தும் கால்நடைகளுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் எருமை மாடுகளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் எருமை மாட்டுப் பொங்கலை திராவிட கழகத்தினர் கொண்டாடினர். மாட்டுப்பொங்கல் அன்று பசு மற்றும் காளை மாடுகளுக்கு மட்டுமே மரியாதை செலுத்தப்படும் நிலையில் எருமை மாடுகளை ஒதுக்கும் போக்கு கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது. எருமை மாடுகளை ஒதுக்குவதும் சாதி பேதம் பார்ப்பது போல் தான் என்றும் மக்களுக்கு பயனளிக்கும் அனைத்து கால்நடைகளையும் ஒன்றாக கருதி கொண்டாட வேண்டும் என்ற திராவிடர் கழகத்தினர்.
தொடர்ந்து எருமை மாடுகளை ஒதுக்க கூடாது சமமாக கருத வேண்டும், மதிப்போம் மதிப்போம் எருமை மாட்டையும் மதிப்போம், சம உரிமை சம உரிமை எருமை மாட்டுக்கும் சம உரிமை என்ற முழக்கத்தோடு எருமை மாடுகளுக்கு அலங்காரம் செய்து பொங்கல் ஊட்டி மகிழ்ந்தனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பாராட்டுதலை பெற்றுள்ளது.
முன்னதாக எருமை மாட்டை வைத்து மாட்டுப் பொங்கல் கொண்டாட வேண்டுமென திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியிருந்தார். ஆரிய போதனையால், காளை மாடு, பசு மாடு ஆகியவற்றை மட்டும் மாட்டுப் பொங்கலில் சிறப்புச் செய்து கொண்டாடுவது- எருமை மாடு என்ன குற்றம் செய்தது? வடநாட்டில் இன்றும்கூட பல மாநிலங்களில் எருமை தானே ஏர் பூட்டப்பட்டு உழவுப் பணிக்கு உதவுகின்றது! பின் ஏன் அதற்கு ஏதும் செய்யாது அரண்? கருப்பு! கருப்பு!! புராணக் கதைப் புளுகுப்படி அது எமன் ஏறும் வாகனமாம்!
வர்ண தருமம் அதில்கூட! கருப்பைக் கண்டால் அவ்வளவு எரிச்சல்! திரு.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். திராவிட நாகரிக ஆய்வுப் பெருமகனார். 'எருமை' எப்படி நமது பண்டைய இலக்கியங்களில் சிறப்புப் பெற்று, பின்னர் கருப்பு நிற வெறுப்பே முதன்மையாகி உழைக்கும் அதனை ஒதுக்கிவிட்ட கொடுமை அரங்கேற்றப்பட்டது பற்றி, விளக்கமாக எழுதியுள்ளார்! மாட்டுப் பொங்கலன்று எருமை மாட்டுக்கும் சிறப்பு செய்வீர்!
பொங்கல் விழாவான திராவிடர் திருவிழாவில் மாட்டுப் பொங்கல் கொண்டாடும்போது, எங்கெங்கெல்லாம் வாய்ப்பு உள்ளதோ, அங்கெல்லாம் எருமைகளையும் குளிப்பாட்டி மாலையிட்டு, காளை, பசுமாட்டின் பக்கத்திலேயே நிறுத்திக் கொண்டாடி, பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் பணியினைச் சிறப்புடன் நடத்திட முயலுங்கள்! சிறுசிறு நிகழ்வுகளைக் கூட பகுத்தறிவாளர்கள், மனிதநேயர்கள் ''அனைவருக்கும் அனைத்தும்'' உரியோர் என்பதற்கு இம்மாதிரி பண்பாட்டுப் புரட்சிகளை மேலும் சிறப்புடன் நடத்தி, வழிகாட்டிட முன்வரவேண்டும்" என கூறியிருந்தார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications