Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சோழ தேசத்தில் ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடி.. தொண்டர்கள், மக்கள் பூத்தூவி உற்சாக வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரத்தில், இன்று நடைபெறும் முதலாம் ராஜேந்திர சோழன் முப்பெரும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக கங்கைகொண்ட சோழபுரத்துக்கு தனி விமானம் மூலமாக வந்த பிரதமர் மோடி ரோடு ஷோவில் பங்கேற்றார். வழிநெடுகிலும் பாஜகவினர், அதிமுகவினர், தொண்டர்கள், பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். காரில் நின்றபடி பொதுமக்களுக்கு பிரதமர் மோடி கையசைத்து சென்றார்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக நேற்று தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். மாலத்தீவிலிருந்து தனி விமானம் மூலமாக தூத்துக்குடி வந்த அவர், ரூ.4,800 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதையடுத்து, தூத்துக்குடி விமான நிலையத்தில் புதியதாக கட்டப்பட்டிருந்த விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

PM Modi Road show Gangaikonda cholapuram

தொடர்ந்து, தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலமாக நேற்றிரவு திருச்சி வந்து, அங்குள்ள தனியார் ஓட்டலில் ஓய்வெடுத்தார். இன்று காலை திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் 11.50 மணியளவில் அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்துக்கு வந்தடைந்தார். சோழங்கத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுகவினர், பாஜகவினர், தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

பிரதமர் மோடி தமிழக பாரம்பரியப்படி வெள்ளை வேட்டி சட்டை அணிந்திருந்தார். தொடர்ந்து, ரோடு ஷோ மேற்கொண்ட பிரதமர் மோடி காரில் நின்றவாறு அங்கிருந்த மக்களைப் பார்த்து கையசைத்து சென்றார். வழிநெடுகிலும் கட்சித் தொண்டர்கள் மலர் தூவி பிரதமரை வரவேற்றனர். ரோடு ஷோவை தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்கு பிரதமர் மோடி வந்தடைந்தார்.

பெருவுடையார் கோயிலின் வாசலில் பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கோயிலுக்குள் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். தொடர்ந்து முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில் கட்டப்பட்ட ஆயிரமாவது ஆண்டு விளழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கவுள்ளார். நிறைவு விழாவில் சிறப்புரையாற்றி, ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தையும் வெளியிடவுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+