மாணவி லாவண்யா நினைவிருக்கா? “ரூ.25லட்சம் கொடு!” பாதிரியாரை மிரட்டிய விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி கைது
பள்ளி வார்டன் மதம் மாற கட்டாயப்படுத்தியதால் தற்கொலைக்கு முயன்றதாக மாணவி கூறியதை போல் இருந்தது அந்த வீடியோவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பலரும் பகிர்ந்து கண்டனம் தெரிவித்தனர்.
அரியலூர்: மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்திற்கு கட்டாய மதமாற்றமே காரணம் என்று கூறி வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் அரியலூர் மாவட்ட செயலாளர் முத்துவேல், பள்ளி தாளாளரிடம் பணம் கேட்டு மிரட்டியதற்காக கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் அமைந்து இருக்கும் சேக்ரட் ஹார்ட் என்ற தனியார் பள்ளியில் அரியலூரை சேர்ந்த மாணவி கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் அவர் கடந்த 2022 ம் ஆண்டு ஜனவரி மாதம் திடீரென தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்டாய மதமாற்றமே மாணவியின் தற்கொலைக்கான காரணம் என்று பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் குற்றம்சாட்டின.

விஎச்பி மாவட்ட செயலாளர்
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணையும் நடைபெற்றது. அதேபோல் தேசிய குழந்தைகள் ஆணையமும் தஞ்சாவூருக்கு நேரில் சென்று விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்தது. அந்த சமயத்தில் பிரபலமானவர் விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் முத்துவேல்.

பரபரப்பு வீடியோ
இவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவி அனுமதிக்கப்பட்டு இருந்தபோது அவரிடம் விசாரிப்பதாக கூறி அவர் பேசுவதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். பள்ளி வார்டன் மதம் மாற கட்டாயப்படுத்தியதன் காரணமாகவே தற்கொலைக்கு முயன்றதாக மாணவி கூறியதை போல் இருந்தது அந்த வீடியோ.

அண்ணாமலை கண்டனம்
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து கண்டனம் தெரிவித்து இருந்தனர். பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில்தான் வீடியோ எடுத்த விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி முத்துவேலின் செல்போனை விசாரணைக்காக எடுத்து காவல்துறை ஆய்வு செய்தது.

பொய்யான புகார்
அதில் இருந்து மாணவி தொடர்பான 4 வீடியோக்களை பார்த்த போலீசார், அதன் அடிப்படையில் விசாரித்தபோது தற்கொலைக்கு கட்டாய மதம் மாற்றம்தான் காரணம் என்று பரப்பட்ட தகவல் வதந்தி என்பதை உறுதி செய்தது. இந்த நிலையில்தான் ஓராண்டு கழித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி முத்துவேல்.

பங்குதந்தை புகார்
அரியலூரில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தின் பங்குதந்தையும், ஆர்.சி. பள்ளிகளின் தாளாளருமான டோமினிக் சாவியோ, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட செயலாளர் முத்துவேல் தனது நண்பர் மூலமாக தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக அரியலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார்.

பணம் கேட்டு மிரட்டல்
தன்னிடம் பணிபுரிந்த விக்னேஷ் என்பவர் முத்துவேலின் நண்பர் என்றும் அவரது தூண்டுதலின்படி, விக்னேஷ் தன்னை மிரட்டி ரூ.25 லட்சம் பணம் கேட்பதாக புகாரளித்து இருக்கிறார். ரூ.25 லட்சம் பணம் தராவிட்டால் லாவண்யா தற்கொலையுடன் தொடர்புபடுத்தி அவதூறு பரப்புவதாகவும், கற்பழிப்பு குற்றங்களை சுமத்துவேன் என்று மிரட்டினார் என்று கூறி உள்ளார்.

கைது செய்த போலீஸ்
இதை வைத்து 2 மதத்தினர் இடையே விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி முத்துவேல் பிரச்சனையை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டி இருக்கிறார். அதன் அடிப்படையில் முத்துவேல் மீது மதக்கலவரத்தை தூண்டுதல், ஆபாசமான பேசுதல், பணம் கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.
-
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications