Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாந்து பார்க்க வைத்த அரியலூர்.. சட்டுனு கொள்ளிடம் ஆற்றின் நடுவில் இறங்கிய ஹெலிகாப்டர்.. என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

அரியலூர்: பாகிஸ்தான் - இந்தியா போர் பதற்றம் மெல்ல தணிந்து கொண்டிருக்கிறது.. இப்படிப்பட்ட சூழலில், அரியலூர் மாவட்டத்தில், கொள்ளிடம் பகுதியில், இன்று காலை 10 மணிக்கு ஹெலிகாப்டர் ஒன்றை பார்த்து அப்பகுதி மக்கள் லேசான கலக்கம் அடைந்துவிட்டார்கள். அந்த ஹெலிகாப்டர் தொடர்பான வீடியோவும் இணையத்தில் தற்போது வெளியாகியிருக்கிறது. என்ன நடந்தது கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில்?

ஜம்மு- காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் அதிர்வலை இன்னமும் அடங்கவில்லை.. அங்குள்ள பைஸ்ரன் பள்ளத்தாக்கு பகுதியிலேயே தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக அன்று தகவல் வெளியானதுமே, சம்பந்தப்பட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

Ariyalur Helicopter Kollidam River

விமானப்படை வீரர்கள்

ஆனால், அந்த பகுதிக்கு வாகனங்கள் எளிதில் செல்ல முடியாது என்பதால், முழுக்க முழுக்க விமானப்படை வீரர்களே தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டார்கள். இதற்காக பல்வேறு பகுதியிலிருந்தும் விமானப்படை வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டனர்.

அதன்படி, கோவை சூலூர் விமானப்படை பயிற்சி மையத்திலுள்ள வீரர்களும் அனுப்பி வைக்கப்பட முடிவாகி, இதற்காக 30 வீரர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு, மலைப்பாங்கான இடங்களில் ஹெலிகாப்டரில் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபடுவதற்கான பயிற்சியும் தரப்பட்டது.

இதனிடையே 10 நாட்களுக்கு முன்பு, எந்தவித முன்னறிவிப்புமின்றி 3 ஹெலிகாப்டர்களில் 30க்கும் மேற்பட்ட விமானப்படை ஜவான்கள் என்று சொல்லக்கூடிய வீரர்கள், சேலம் மல்லூர் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஹெலிபேடு இறங்குதளத்தில் வந்திறங்கி, தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டனர்.

கோவை, சேலம்

அதாவது, தீவிரவாதிகள் தேடுதல் வேட்டைக்காக இவர்களுக்கு எப்போதும் வேண்டுமானாலும் அழைப்பு வர வாய்ப்புள்ள நிலையில், இப்படியான ஒத்திகைகள் கோவை, சேலம் பகுதிகளில் நடத்தப்பட்டது. இந்த ஒத்திகைகள் நடத்தப்பட்டபோதே, அந்தந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இப்படிப்பட்ட சூழலில், இன்று காலை அரியலூரில் அழகிய மணவாளன் கிராமத்திலும் ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கியிருக்கிறது. திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அழகிய மணவாளன் கிராமத்தில் கொள்ளிடம் ஆறு அமைந்துள்ளது. இதன் ஒரு பகுதி அரியலூர் மாவட்டமும் மற்றொரு பகுதி தஞ்சை மாவட்டத்தையும் உள்ளடக்கியது.

இன்று காலை 10 மணி அளவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டுள்ளது.. இதில் விமானிகள் பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தூத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

2022 ஹெலிகாப்டர் சம்பவம்

எனினும், கொள்ளிடம் ஆற்றில் இன்று காலை திடீரென ஹெலிகாப்டரை பார்த்ததுமே, அந்த பகுதி மக்களில் சிலர் லேசான கலக்கம் அடைந்தனர்.. இதற்கு வேறு ஒரு காரணமும் உள்ளது..

கடந்த 2022-ல் அரியலூர் மாவட்டத்தின் செந்துறை அருகே உள்ள காட்டுப் பகுதியில் பயங்கரமான வெடி சத்தம் கேட்டது. செந்துறை அருகிலுள்ள குழுமூர் காட்டில் ராணுவ ஹெலிகாப்டர் சிதறி விழுந்ததால்தான், அந்த சத்தம் கேட்டது என்று சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாய் செய்தி பரவியது. அத்துடன், ஹெலிகாப்டர் ஒன்று வெடித்து தீயில் எரிந்து கிடந்தது போன்ற சில போட்டோக்களும் இணையத்தில் பரவி பீதியை கிளப்பியிருந்தது.

நிம்மதி பெருமூச்சு

இதையடுத்து, அதிகாரிகள் விரைந்து வந்து, சமூகவலைதளத்தில் பரவியதுபோல் அங்கு ஹெலிகாப்டர் ஏதும் விபத்துக்குள்ளாகவில்லை, சோஷியல் மீடியாவில் பரவியது போலியான ஹெலிகாப்டர் படம் என்றும் விளக்கம் தந்திருந்தனர். இதற்கு பிறகே அரியலூர் மக்கள் நிம்மதியடைந்தனர்.
அதனால்தான் , இன்று காலை கொள்ளிடம் ஆற்றில் ஹெலிகாப்டரை திடீரென பார்த்ததும் சிலருக்கு லேசான கலக்கம் வந்துள்ளது. விமானிகள் அங்கு தற்போது பயிற்சியை மேற்கொண்டு வரும்நிலையில், ஆற்றின் நடுவில் இறங்கிய அந்த ஹெலிகாப்டரை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+