விஜய் குடிச்ச அந்த ஒரு கிளாஸ் தண்ணீர்! ராமநாதபுரத்தின் தலைவிதியை மாற்றப் போகும் அந்த ஒரு திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் விஜய், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் முயற்சி எடுத்துள்ளார்.. தமிழ்நாட்டில் ராமநாதபுரம் போன்ற மாவட்டங்கள் எல்லாம் பெரிய அளவில் வறட்சியில் இருக்கின்றன. இந்தத் திட்டம் முழுமையாக வெற்றியடைந்தால், அந்த மாவட்ட மக்களுக்கு இது ஒரு பெரிய உதவியாக மாறும். முதாமைச்சர் விஜய் முழுமையாக, வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்டால் சென்னைக்கு இனிமேல் தண்ணீர் பஞ்சமே இருக்காது" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு.

செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் செயல்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகளை முதல்வர் விஜய் சமீபத்தில் ஆய்வு செய்தார். அங்கு சுத்திகரிக்கப்பட்ட கடல் நீரை வாங்கி குடித்தார். ஆலை செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். பணிகளை குறித்த காலக்கெடுவுக்குள் முடித்து, விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

Vijay drinks Glass of Water Ramanathapuram

விஜய் குடிச்ச அந்த ஒரு கிளாஸ் தண்ணீர்

முதல்வர் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை குறித்து, Filmify என்ற யூடியூப் சேனலுக்கு செய்யாறு பாலு, பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில் "தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா , ஒரு பள்ளிக்குச் சென்று ஆய்வு செய்கிறேன் என்று சொல்லி, அங்குள்ள ஒரு மாணவியிடம் "இன்னும் இங்கிலீஷ் தெரியலையா" என்று ஆச்சரியமாக பேசப்போய், இப்போது விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளார். "நானும் அரசு பள்ளியில்தான் படித்தேன்" என்றும் சொல்லி உள்ளார்.

ஆனால் அவர் படித்தது அரசு உதவி பெறும் ஒரு பெரிய பள்ளி என்பதற்கான ஆதாரங்களை இப்போது சோஷியல் மீடியாவில் பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.

அமைச்சர் கீர்த்தனா செய்த ஆய்வு

பொதுவாக, தொழில்துறை அமைச்சருக்கும் பள்ளி கல்வித்துறைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? கல்வி அமைச்சரேகூட ஒவ்வொரு பள்ளிக்கும் நேரடியாகச் செல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது.. அப்படியிருக்கும்போது, இவர்கள் சம்பந்தமில்லாத துறைகளில் சென்று கேள்விகள் கேட்பதும், அது வீடியோவாக வெளியாகி விமர்சனத்திற்குள்ளாவதும் தவறான ஒன்றுதான் என்று அமைச்சர் நிர்மல் குமாரே சொல்லி விட்டார்.

முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து, முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின் பேரில், "அமைச்சர்கள் தங்களுக்குச் சம்பந்தம் இல்லாத, துறை இல்லாத விஷயங்களில் போய் தலையிடாதீர்கள், அரசு ஊழியர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்" என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்... இது உண்மையிலேயே நல்ல விஷயம் தான்..

நிச்சயமாக நாம் ஒரு பள்ளிக்கு செல்வதாக இருந்தால், ஒரு ஐஏஎஸ் அதிகாரியிடமோ அல்லது DEO என்று சொல்லக்கூடிய மாவட்டக் கல்வி அலுவலரிடமோ அனுமதி கேட்டுவிட்டுத்தான் சென்றிருக்க வேண்டும்.

முதலமைச்சர் விஜய் ஆய்வு

அடுத்ததாக, முதலமைச்சர் விஜய் மகாபலிபுரம் அருகிலுள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, அங்குள்ள தண்ணீரைத் குடித்துப் பார்த்த வீடியோ வெளியானது.

ஆனால் அதற்கு 2 நாட்களுக்கு முன்பு, மு.க.ஸ்டாலின் அந்தத் திட்டத்தைத் திறந்து வைத்த பெயர் பலகையை யாரோ அழித்திருக்கிறார்கள் என்றும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. இது தொடர்பாக திமுக சார்பில் போராட்டம் நடத்த போவதாகச் செய்திகளில் வந்தது.

உண்மையிலேயே இந்த கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் என்பது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் காலத்தில் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். அதன்பிறகு ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தார், இன்னும் அது தொடர்பாக ஆராய்ச்சிகள்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கடல்நீர் குடிநீராகுமா?

சென்னை போன்ற ஒரு பெருநகரத்தில் கடந்த காலங்களில் கடுமையான தண்ணீர் பஞ்சம் இருந்திருக்கிறது. சமீபகாலமாகக் கடுமையான கோடைக்காலம் இருந்தும் கூட, இப்போது நகரில் பெரிய அளவில் தண்ணீர் பஞ்சமே கிடையாது. இந்தக் கடல்நீரைக் குடிநீராக மாற்றுகிற திட்டத்தை தற்போதைய முதலமைச்சர் விஜய் வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்டால், சென்னை மக்களுக்கு இனி குடிநீர் பஞ்சமே இருக்காது.

துபாய் போன்ற வெளிநாடுகளில் கடல்நீரைத்தான் குடிநீராகப் பயன்படுத்துகிறார்கள், அதை அவர்கள் வெற்றிகரமாகச் செய்தும் காட்டுகிறார்கள். அப்படி இருக்கும்போது அதை நம்மால் ஏன் செய்ய முடியாது? ஐஐடி பேராசிரியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு இந்தத் தண்ணீரைச் சீராக விநியோகம் செய்யலாம்.

சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் இல்லை

தமிழ்நாட்டில் ராமநாதபுரம் போன்ற மாவட்டங்கள் எல்லாம் பெரிய அளவில் வறட்சியில் இருக்கின்றன. இந்தத் திட்டம் முழுமையாக வெற்றியடைந்தால், அந்த மாவட்ட மக்களுக்கு இது ஒரு பெரிய உதவியாக மாறும்.

அதனால் "இதற்கு முன்பே நடைமுறையில் உள்ள திட்டத்தை, இப்போது போய் விஜய் ஆய்வு செய்கிறார், போட்டோ எடுத்துக் கொள்கிறார், சீன் போடுகிறார்" என்று விமர்சிப்பதில் அர்த்தமில்லை.. இந்தத் திட்டத்தை விஜய் முழுமையாக, வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்டால் சென்னைக்கு இனிமேல் தண்ணீர் பஞ்சமே இருக்காது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+