’ஜாதி’ பாசம்? டிகே சிவகுமார் முதல்வராக மஜத 19 எம்எல்ஏக்கள் ஆதரவு- குமாரசாமி திடீர் அறிவிப்பு!
பெங்களூர்: கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் முதல்வராவதற்கு மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் 19 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தருவார்கள் என அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி திடீரென அறிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. அப்போதே முதல்வர் பதவி யாருக்கு என்பதில் பெரும் மல்லுக்கட்டு நடந்தது. ஒருவழியாக முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டிகே சிவகுமாரும் பதவியேற்றனர்.

முதல்வராக சித்தராமையா இரண்டரை ஆண்டுகளும் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு டிகே சிவகுமார் முதல்வராகவும் பதவி வகிக்க டெல்லி மேலிடத்தின் முன்பாக இருவரும் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கர்நாடகா முதல்வர் பதவி குறித்து கர்நாடகா அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் ஆளுக்கு ஒரு கருத்தை முன்வைத்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சித்தராமையா கோஷ்டி: கர்நாடகா முதல்வராக தாமே 5 ஆண்டுகள் தொடருவேன் என சித்தராமையா கூறியிருந்தார். ஆனால் பின்னர் தமது கருத்தை ஊடகங்கள் திரித்து எழுதிவிட்டன என்றார். அதேநேரத்தில் தலித் தலைவரான பரமேஸ்வர் வீட்டில் மெகா விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது சித்தராமையா ஆதரவு கோஷ்டி. தமக்கு பின்னர் தலித் முதல்வர் என்ற முழக்கத்துடன் பரமேஸ்வரை முதல்வராக சித்தராமையா சதி செய்கிறார் எனவும் கூறப்பட்டது. பரமேஸ்வர் ஆதரவாளர்களும் பகிரங்கமாக, அடுத்த முதல்வர் அவர்தான் என முழக்கமிட்டனர். ஆனால் டெல்லி காங்கிரஸ் மேலிடமோ முதல்வர் பதவி குறித்து யாரும் எந்த கருத்தும் தெரிவிக்க கூடாது என தடைவிதித்தது. இந்த தடையை மீறித்தான் காங்கிரஸ் தலைவர்கள் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
டிகேஎஸ் ஆதரவாளர்கள்: இன்னொரு பக்கம், துணை முதல்வர் டிகே சிவகுமாரின் ஆதரவாளர்கள் அடுத்த முதல்வர் குறித்து பேசி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் இந்த அடிதடியால் எப்படியும் ஆட்சி கவிழ்ந்துவிடும்; லோக்சபா தேர்தலின் போது கர்நாடகா சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறும் எனவும் பாஜக கனவு கண்டு வருகிறது.
குமாரசாமி திடீர் ஆதரவு: இதனிடையே புதிய திருப்பமாக, டிகே சிவகுமார் முதல்வராக பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறுகையில், டிகே சிவகுமார் முதல்வராக தமது கட்சியின் 19 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தருவார்கள் என தெரிவித்துள்ளார். குமாரசாமியும் டிகே சிவகுமாரும் ஒக்கலிகா ஜாதியை சேர்ந்தவர்கள். இதனாலேயே 'ஒக்கலிகா' முதல்வர் என்ற கோஷத்தின் அடிப்படையில் டிகே சிவகுமாருக்கு குமாரசாமி ஆதரவு தெரிவிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
-
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை












Click it and Unblock the Notifications