Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛உல்லாசம்’.. அதுவும் கல்லூரி மாடியிலேயே! வெளியான வீடியோவால் மாணவி-மாணவன் எடுத்த விபரீத முடிவு! ஷாக்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவனும், மாணவியும் உல்லாசமாக இருந்த நிலையில் அதுதொடர்பான வீடியோ வலைதளங்களில் வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியும், மாணவனும் விபரீத முடிவை எடுத்துள்ளனர்.

இப்போது.. கல்லூரி காலத்தில் பலரும் காதலிக்க தொடங்கி விடுகின்றனர். சிலர் தங்களின் காதலன், காதலி மீதான அதீத நம்பிக்கையில் எல்லை மீறியும் நடந்து கொள்வதோடு தேவையில்லாத சிக்கலில் மாட்டி கொள்கின்றனர். அப்படியொரு சம்பவம் தான் தற்போது கர்நாடகா மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் நடந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:

கர்நாடகாவின் தாவணகெரே நகரில் தனியாருக்கு சொந்தமான கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் தான் 2 ம் ஆண்டு படித்து வரும் மாணவனுக்கும், மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் இருவருக்கும் காதலாக மாறியுள்ளது.

2 students die by suicide at Davangere in Karnataka after intimate videos released on Social Media

இதையடுத்து இருவரும் அடிக்கடி சந்தித்து காதலை வளர்த்துள்ளனர். விடுமுறை தினங்களில் செல்போனில் பேசவும் செய்துள்ளனர். இந்நிலையில் தான் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மாணவனும், மாணவியும் கல்லூரியில் உள்ள மொட்டை மாடிக்கு சென்றுள்ளனர். அங்கு யாருக்கும் தெரியாமல் இருவரும் நெருக்கமாகி உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதற்கிடையே தான் மாணவனும், மாணவியும் உல்லாசமாக இருக்கும் வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வெளியானது. அதாவது மாணவனும், மாணவியும் கல்லூரி மாடியில் சேர்ந்து இருந்ததை அருகே உள்ள கட்டடத்தில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து இருப்பதும், அந்த வீடியோ தான் வலைதளங்களில் பரவி வருவதும் தெரியவந்தது.

இதனை கல்லூரியில் உள்ள பிற மாணவ-மாணவிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனால் குறிப்பிட்ட அந்த மாணவனும், மாணவியும் மனம் உடைந்து போயினர். இதற்கிடையே அவமானத்தில் அந்த மாணவி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதுபற்றி அறிந்த மாணவனும் தற்கொலை செய்தார். இதுபற்றி அறிந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.

மேலும் மாணவனும், மாணவியும் சேர்ந்து இருந்த வீடியோ வெளியானதால் தான் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதை குடும்பத்தினரும் தெரிந்து கொண்டனர். இதையடுத்து குடும்பத்தினர் சார்பில் தனித்தனியாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடியோ எடுத்தது யார்?, சமூக வலைதளங்களில் பதிவிட்டது யார்? என்பது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தாவணகெரேயில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+