ஸ்லீப்பர் பஸ்சில் 20 பேர் கருகி பலி.. கர்நாடகா பஸ் விபத்து எப்படி நடந்தது? தப்பிய டிரைவர் - கிளீனர் சொன்ன ஷாக் தகவல்
பெங்களூர்: கர்நாடகாவில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் ஸ்லீப்பர் வசதி கொண்ட தனியார் பஸ் தீப்பிடித்து எரிந்தது. இதில் 20 பயணிகள் தீயில் கருகி இறந்தனர். இதில் உயிர் பிழைத்த தனியார் பஸ் டிரைவர், கிளீனர் ஆகியோர் விபத்து பற்றிய திடுக்கிட வைக்கும் தகவலை தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் இருந்து தனியாருக்கு சொந்தமான பஸ் நேற்று இரவு உத்தர பிரதேச மாநிலம் கோகர்ணாவுக்கு புறப்பட்டது. இந்த பஸ் ஸ்லீப்பர் வசதி கொண்டது. பஸ்சில் மொத்தம் 15 பெண்கள், 14 ஆண்கள் என்று மொத்தம் 32 பேர் பயணித்தனர்.

கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் தாலுகா கோர்லாத் கிராஸில் தனியாருக்கு சொந்தமான சொகுசு பஸ் இன்று அதிகாலை 3 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அதிகாலை நேரம் என்பதால் பஸ்சில் பயணிகள் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். ப்போது தான் துயர சம்பவம் நடந்தது.
கோர்லாத் கிராஸில் பஸ் சென்று கொண்டிருந்தபோது லாரி ஒன்று ஹிரியூரில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. திடீரென்று அந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. சாலை தடுப்புகளை உடைத்து சாலையின் மறுபக்கம் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது மோதியது.
இதில் பஸ் உடனடியாக தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள், போலீசார் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் 20 பேர் பலியாகினர். மேலும் பலர் தீக்காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் லாரி டிரைவர், கிளீனர் ஆகியோரும் பலியாகி உள்ளனர். இருந்தாலும் அதிர்ஷ்டவசமாக பஸ் டிரைவர், கிளீனர் உயிர் தப்பி உள்ளனர்.
ஆனாலும் பஸ் டிரைவர், கிளீனர் ஆகியோர் காயமடைந்துள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சையில் .ள்னர். இந்நிலையில் தான் பஸ் டிரைவர் ரபீக் விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது பற்றி கண்ணீருடன் கூறியதாவது: ‛‛சாலையில் எங்களின் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி எதிரே வந்து கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பை தாண்டி வந்து மோதியது. லாரி அதிவேகத்தில் வந்தது.
அந்த சமயத்தில் நான் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் தான் பஸ்சை ஓட்டினேன். பஸ்சுக்கு முன்பு லாரி வந்ததால் நான் அதனை கவனித்தேன். இதனால் பஸ்சின் வேகத்தை குறைத்து விபத்தில் சிக்காமல் இருக்க முயற்சித்தேன்.. ஆனாலும் என்னால் முடியவில்லை. பஸ்சில் லாரி மோதியது மட்டும் தான் எனக்கு தெரியும். அதன்பிறகு என்ன நடந்தது? என்பது எனக்கு தெரியவில்லை. எப்படி நான் உயிர் பிழைத்தேன் என்பதும் தெரியவில்லை'' என்றார்.
அதேபோல் பஸ் கிளீனர் முகமது சாதிக் கூறுகையில், ‛‛விபத்து நடந்தபோது நான் பஸ்சின் முன்புறம் இருந்தேன். நாங்கள் பஸ்சின் வேகத்தை குறைத்து விபத்தை தடுக்கமுயன்றோம். ஆனால் முடியவில்லை. எங்களின் பஸ் அருகே சென்ற இன்னொரு வாகனத்தின் மீதும் மோதியது. அந்த வாகனம் என்னவென்று தெரியவில்லை'' என்றார்.
-
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications