மூளைச்சாவு அடைந்த மணப்பெண்.. உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்!. கர்நாடகாவில் நெகிழ்ச்சி!
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் திருமணத்தின் போது மணப்பெண் மயங்கி விழுந்து மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகளை பெற்றோர் தானமாக கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீனிவாசபுரத்தில் கொடிசேராவு கிராமத்தைச் சேர்ந்தவர் சைத்ரா (26). இவர் எம்எஸ் சி படித்துள்ளார். ஆசிரியர் பயிற்சியை முடித்துள்ளார். இவரது பெற்றோர் ராமப்பா மற்றும் ஆச்சம்மாள் இவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்தனர்.
அதன்படி பெங்களூர் நகர்ப்புற மாவட்டத்தைச் சேர்ந்த ஹாஸ்கோட்டைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் சைத்ராவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

திருமண ஏற்பாடுகள்
கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி ஸ்ரீ பால ஆஞ்சநேய சுவாமி கோயிலில் திருமணம் நடத்தி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதற்கு முதல் நாள் பெண் அழைப்பின் போது அரசியல்வாதிகள், கிராமத்தினர், உறவினர்கள் என நிறைய பேர் கலந்து கொண்டனர். உறவினர்கள் எல்லாரும் கல்யாண வீட்டில் சிரித்து பேசி மகிழ்ந்து வந்தார்கள்.

சைத்ராவும் கார்த்திக்கும்
சைத்ராவும் கார்த்திக்குடன் சகஜமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது இரவு 9 மணிக்கு சைத்ரா திடீரென கீழே விழுந்தார். மயக்கமடைந்த அவரை திடீரென ஸ்ரீனிவாசபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள கொடுக்கும் சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை.

அறிவுரை
எனவே வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து அவரை வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சைத்ரா மயக்கம தெளிந்து மீண்டு வரவே இல்லை. இதையடுத்து அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

உடல் உறுப்புகள்
இதையடுத்து சைத்ராவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன் வந்தனர். கொடிசேராவில் சைத்ராவுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் கூறுகையில் சைத்ராவின் மரணம் துரதிருஷ்டவசமானது.
Recommended Video

உடல் உறுப்புகள் தானம்
ஆனால் சைத்ராவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன் வந்தது முன்னுதாரணமான விஷயம். அவரால் நிறைய பேருக்கு வாழ்க்கை கிடைத்துள்ளது. அவர் எப்போதும் நினைவில் இருப்பார். பல உயிர்களை காப்பாற்ற சைத்ரா இறைவனிடம் சேர்ந்துவிட்டார் என்றார்.












Click it and Unblock the Notifications