தமிழர்கள் குண்டு வைத்ததாக கூறிய ஷோபா உட்பட.. கர்நாடகாவிற்கு 4 மத்திய அமைச்சர்கள்.. முழு லிஸ்ட்
பெங்களூர்: லோக்சபா தேர்தலில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை அமைத்திருக்கிறது. இந்நிலையில், கர்நாடகாவிலிருந்து 4 எம்பிக்கள் மத்திய அமைச்சரவைக்கு தேர்வாகியுள்ளனர்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், பாஜக தலைமை தாங்கும் என்டிஏ கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. எனவே, ஆதரவு எம்பிக்களின் பட்டியலை கொடுத்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் உரிமை கோரினார். குடியரசுத் தலைவரும் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ள நிலையில், இன்று மாலை நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார்.

நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் தலைவர் என்கிற பெருமையுடன் மோடி பதவியேற்கிறார். அதேபோல 30 எம்பிக்கள் மத்திய அமைச்சர்களாக இன்று தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் கர்நாடகா மாநிலத்திலிருந்து 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நிர்மலா சீதாராமன்: மோடி 2.O ஆட்சியில் நிர்மலா சீதாராமன் மத்திய நிதியமைச்சராக பதவி பகித்து வந்தார். ஆனால் இவர் மீது ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாகவும், நிதி மறுக்கப்படுவதற்கு இவர் கூறிய காரணங்களும் இந்த விமர்சனங்களுக்கு முக்கிய காரணமாகும்.
அதேபோல சில நேரங்களில் இவரின் துடுக்கான பேச்சுகளாலும் சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "வெள்ளம் வந்தால், வீடு இடிந்து விழுந்தால் ₹500, ₹1000 எனத் தருகிறார்கள். இத்தகைய நடவடிக்கையால் நாடு முன்னேறாது. எப்போது பார்த்தாலும் இன்னொருவர் போடும் பிச்சையில் நாம் வாழத் தேவையில்லை" என்று நிவாரணத்தை இழிவுப்படுத்தியிருந்தார்.
தற்போது பாஜக தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில் இந்த முறை இவருக்கு நிதி அமைச்சகத்தை ஒதுக்குவது சந்தேகம்தான் என பலர் கூறியுள்ளனர். இவர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்பியாகவில்லை. தற்போது வரை ராஜ்யசபா எம்பியாக நீடித்து வருகிறார்.
பிரகலாத் ஜோஷி: மோடி 2.O ஆட்சியில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்தவர்தான் பிரகலாத் ஜோஷி. இவர் சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கர்நாடகாவின் தார்வாட் தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறார். கடந்த 2004ம் ஆண்டிலிருந்து இந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்திருக்கிறார்.
எனவே இந்த முறையும் இவருக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பழையபடி நாடாளுமன்ற விவகாரத்துறை ஒதுக்கப்படுமா? என்பது சந்தேகம்தான்.
எச்.டி.குமாரசாமி: கர்நாடக மாநிலத்தில் 18வது முதலமைச்சராக குமாரசாமி பதவி வகித்திருக்கிறார். இவர் கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தியிருக்கிறார். 2014ம் ஆண்டு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், கடந்த 2018ம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சியமைத்தார்.
குமாரசாமியின் கட்சி குறைந்த இடங்களை வென்றிருந்தாலும், இவரது தயவு இருந்தால்தான் ஆட்சியில் காங்கிரஸ் இருக்க முடியும் என்பதால், இவரை முதலமைச்சராக்கியது காங்கிரஸ். ஆனால் 2019ல் இவரது கட்சியின் 3 எம்எல்ஏக்கள் உட்பட 16 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவியதால் ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் பாஜக ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து 2023 தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. அதன் பின்னர் குமாரசாமி பாஜக வசம் சாய தொடங்கினார்.
ஷோபா கரந்தலாஜே: இவரும் மோடியின் 2.O ஆட்சியில் மத்திய இணையமைச்சராக இருந்திருக்கிறார். லோக்சபா தேர்தலில் பெங்களூர் வடக்கு தொகுதியில் போட்டியிட்ட இவர், காங்கிரஸ் வேட்பாளரை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறார். ஏற்கெனவே மத்திய இணையமைச்சராக இருந்ததால் இந்த முறையும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் பெங்களூரில் ராமேஸ்வரம் கஃபேவில் குண்டு வெடிப்பு நடந்தது. இது குறித்து இவர் கூறியிருந்த கருத்து கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. இந்த குண்டு வெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதாக இவர் கூறியிருந்தார். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் வந்து எங்கள் (கர்நாடகா) ஓட்டலில் வெடிகுண்டுகளை வைக்கிறார்கள் என்று கூறி இருந்தார். இது குறித்து கண்டனங்கள் வலுத்த நிலையில் தனது கருத்துக்கு அவர் மன்னிப்பு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சைக்கிள் ஓட்டறதெல்லாம் ஓ.கே.. வாயை திறந்து பேசுங்க விஜய்.. அண்ணாமலை அட்வைஸ் -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு












Click it and Unblock the Notifications