கும்ப மேளாவில் 60 பேர் உயிரிழந்தனர்.. நான் எதாவது சொன்னேனா? திடீரென ஆவேசமடைந்த சித்தராமையா
பெங்களூர்: பெங்களூரில் நடந்த ஆர்சிபி அணி வெற்றி கொண்டாட்ட விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்திருக்க கூட்டாது என்று தெரிவித்த சித்தராமையா, இதுபோன்ற நிகழ்வுகள் பல இடங்களில் நடந்துள்ளன. உத்தர பிரதேச கும்பமேளாவில் 60 பேர் உயிரிழந்தனர். அதை பற்றி நான் எந்த விமர்சனமும் வைக்கவில்லை என்று பேசினார்.
18வது ஐபிஎல் சீசனில், பெங்களூர் அணி கோப்பையை வென்றது. 18 ஆண்டுகளில் முதல் முறையாக கோப்பையை ஆர்சிபி அணி வென்றுள்ளதால் இதனை கர்நாடக அரசு மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் வெற்றி விழாவாக கொண்டாட ஏற்பாடு செய்தது. மேலும் பெங்களூர் நகரில் வெற்றி பேரணி நடத்தவும் திட்டமிட்டது.

கட்டுக்கடங்காத கூட்டம்
ஆனால் பெங்களூர் நகரம் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரம் என்பதால் பேரணி நடத்தினால் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று கடைசி நேரத்தில் பேரணி ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை 5 மணியளவில் பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பெங்களூர் அணியின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் பங்கேற்றனர். இந்த விழாவை காண ஏராளமான ஆர்சிபி ரசிகர்கள் குவிந்தனர். கட்டுக்கடங்காமல் குவிந்த கூட்டத்தால் பெங்களூர் நகரம் திக்குமுக்காடியது. மைதனாத்தை சுற்றி முழுவதும் ரசிகர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்தனர். போலீசாராலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
11 பேர் உயிரிழப்பு
இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு நிலமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். ஆனால் ஸ்டேடியத்தின் 7வது கேட் பகுதியில் அதிகளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் ரசிகர்கள் பலர் சிக்கி காயமடைந்தனர். உடனடியாக அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை கூட வழங்க முடியாத நிலை இருந்தது. இவ்வாறாக கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூர் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் நடந்த இந்த துயர சம்பவம் கர்நாடகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கர்நாடக முதல்வர் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பிரதமர் மோடியும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.
ஆவேசமான சித்தராமையா
அப்போது பெங்களூரில் ஏற்பட்ட நெரிசல் குறித்து சித்தராமையா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது ஆவேசம் அடைந்தார். சித்தரமையா கூறுகையில், "இதுபோன்ற நிகழ்வுகள் பல இடங்க்ளில் நடந்துள்ளன. கும்பமேளாவில் 50 - 60 பேர் உயிரிழந்தனர். அதை பற்றி நான் எந்த விமர்சனமும் வைக்கவில்லை. ஒருவேளை காங்கிரஸ் விமர்சித்து இருந்தால் அது வேற விஷயம். நான் விமர்சித்தேனா? அல்லது கர்நாடக அரசு விமர்சித்ததா?" என்று திடீரென ஆவேசமாக பதில் அளித்தார்.
முன்னதாக அவர் கூறுகையில், சின்னசாமி மைதானத்தில் 35 ஆயிரம் பேர் மட்டுமே கூட முடியும். ஆனால், விதான் சவுதா முன்பு மட்டுமே சுமார் ஒரு லட்சம் ரசிகர்கள் குவிந்து இருந்தனர். இப்படியொரு சம்பவம் நடந்து இருக்க கூடாது. விசாரணை அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 15 நாட்களுக்குள் விசாரித்து அறிக்கை அளிக்க விசாரணை ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications