பெங்களூரில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 55% அதிகரிப்பு.. அதிர வைக்கும் டேட்டா!
பெங்களூர்: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கடந்த ஆண்டு 55 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாக போலீசார் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநில தலைநகரான பெங்களூர் நாட்டின் ஐடி தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. ஐடி நிறுவனங்கள் அதிகம் குவிந்துள்ள பெங்களூரில் படித்த இளைஞர்கள், இளம்பெண்கள் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள். நாடு முழுவதிலும் இருந்து பெங்களூரில் தங்கி பணியாற்றும் ஐடி துறை ஊழியர்கள் அதிக அளவில் உள்ளனர். இதனால், எப்போதும் படு பிசியாகவே பெங்களூர் காணப்படும்.

இந்த நிலையில், ஐடி தலைநகரான பெங்களூரை அதிர வைக்கும் தரவுகள் வெளியாகியுள்ளன. அதாவது, பெங்களூரில் ஆண்டுக்கு ஆண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றனவாம். கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 55 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது, இதுபோன்ற 1,135 பாலியல் குற்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக போலீசார் சேகரித்த புள்ளி விவர தகவல்கள் சொல்கின்றன.
1,135 வழக்குகள்: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து இருப்பது குறித்து பெங்களூர் நகர போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:- எப்.ஐ.ஆர் பதிவு செய்வதில் வந்துள்ள எளிதான நடைமுறை மற்றும் சொந்த பகை, சின்ன சின்ன விஷயங்கள் உள்ளிட்டவையும் காரணமாக உள்ளன. கொள்ளை, கொலை, வாகன திருட்டு உள்ளிட்ட குற்றங்களும் பெங்களூரில் அதிகரித்து உள்ளது.
கடந்த ஆண்டு பதிவான 1,135 பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்குகளில் 1004 வழக்குகளை போலீசார் கண்டறிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு 731 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், 688 வழக்குகள் அடையாளம் காணப்பட்டன. கடந்த ஆண்டில் மட்டும் ஐபிசி செக்ஷன் 376 கீழ் (ரேப்) 176 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இவை அனைத்தும் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புகார் அளிக்கின்றனர்: அலுவலகங்களில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த சூழலை ஏற்படுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம். இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளால் அதிக பெண்கள் புகார் அளிக்க முன்வருகிறார்கள். குடும்பத்தினர், நண்பர்கள், தெரிந்தவர்க்வர்களுக்குள் ஏற்படும் தகராறு ஆகியற்றாலும் பாலியல் புகார்கள் வருகின்றன.
உரிய நடவடிக்கை: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து இருப்பது குறித்து கூடுதல் துணை ஆணையர் ராமன் குப்தா கூறியதாவது:- பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து இருப்பதற்கான உண்மையான காரணத்தை நாம் கண்டறிய வேண்டியுள்ளது. எனினும், இதுபோன்ற பெண்களுக்கு எதிரான அநீதிகளை சகித்துக் கொள்ள முடியாது.
இதுபோன்ற குற்றங்களை ஆவணங்களில் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மகளிர் காவல்நிலையங்களுக்கும் சட்டம் ஒழுங்கு போலீசாருக்கும் நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். இதுபோன்ற குற்ற செயல்கள் தொடராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications