Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛ஹலோ மேம்'.. வாக்கிங் போன பெண்ணை அழைத்த பெங்களூர் இளைஞர்.. திரும்பியதும் முகம் சுளிக்க வைத்த செயல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் நாயை அழைத்து கொண்டு 33 வயது பெண் ஒருவர்‛வாக்கிங்' சென்றார். அப்போது, அவருக்கு பின்னால் வந்த இளைஞர் ‛ஹலோ மேம்' என அழைத்தார். அந்த பெண் திரும்பியதும் பொது இடத்தில் சுயஇன்பம் செய்து முகம் சுளிக்க வைத்தார். இதனால் ஷாக்கான அந்த பெண் வீட்டுக்கு ஓடினார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கி அந்த இளைஞரை தேடி வருகின்றனர்.

பெங்களூர் இந்திரா நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் 33 வயது இளம்பெண். இவர், தினமும் இந்திரா நகர் பகுதியில் தான் செல்லமாக வளர்த்து வரும் வளர்ப்பு நாயை அழைத்து கொண்டு ‛வாக்கிங்' செல்வது வழக்கம்.

a-33-year-old-woman-was-allegedly-sexually-harassed-by-the-man-who-exposed-himself-and-began-masturb

அதன்படி கடந்த 1ம் தேதி அந்த பெண் காலை 11.57 மணிக்கு அவர் ‛வாக்கிங்' சென்றார். அப்போது அவரை போல் இன்னும் சிலர் அங்கு இருந்தனர். அப்போது அவரை சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்து சென்றார்.

அந்த நபர் திடீரென்று, ‛ஹலோ மேம்'என்று கூறினார். இதனால் ‛வாக்கிங்' போன பெண் திரும்பி பார்த்தார். இந்த வேளையில் அந்த இளைஞர் செய்த செயல் முகம் சுளிக்க வைத்தது. அந்த பெண்ணை நோக்கி ஆபாசமாக சைகையை செய்த இளைஞர் பொது இடத்தில் சுயஇன்பம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனடியாக அங்கிருந்து தனது நாயை அழைத்து கொண்டு வீட்டுக்கு ஓடினார். அங்கு அவர் நடந்த சம்பவம் குறித்து தனது சகோதரிகள் மற்றும் நண்பர்களிடம் கூறினார். அவர்கள் போலீசில் புகாரளிக்கும்படி கூறினர். இதையடுத்து அந்த பெண் சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் பாலியல் தொல்லை என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

அந்த நபரின் பெயர், விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அவரை கண்டுபிடிக்கும் பணியை போலீசார் தொடங்கி உள்ளனர். பெங்களூரில் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வயது கொண்ட ஆண்களும், பெண்களும் தினமும் ‛வாக்கிங்' செல்வது வழக்கம். தற்போது ‛வாக்கிங்' போன பெண்ணிடம் இப்படி முகம் சுளிக்க வைக்கும் செயலை செய்த இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல், இன்னொரு சம்பவமும் பெங்களூரில் நடந்துள்து. அதாவது அசோக் நகரில் கிளினிக் நடத்தி வருபவர் டாக்டர் பிரவீன். இவருக்கு வயது 56. இவர் தோல் நோய் டாக்டராக உள்ளார். சமீபத்தில் அவரது கிளினிக்கிற்கு 21 வயது இளம்பெண் சென்றார். தோல் அலற்சியால் அவர் பாதிக்கப்பட்டு இருந்தார். அப்போது பரிசோதனை என்ற பெயரில் டாக்டர் பிரவீன், அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

கிளினிக்கில் உள்ள தனது அறையில் வைத்து பிரவீன், அந்த இளம்பெண்ணின் தொடக்கூடாத இடங்களை தொட்டார். கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றதோடு, ஹோட்டலுக்கு அழைத்தார். இதுதொடர்பாக இளம்பெண் அளித்த புகாரில் போலீசார் டாக்டர் பிரவீனை கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+