இளம்பெண் பின்னால் இருக்க.. பைக் ஓட்டியபடி ரேபிடோ ஓட்டுநரின் கை எங்க இருக்கு பாருங்க? அடச்சீ
பெங்களூர்: பெங்களூரில் பிஜியில் தங்கி உள்ள இளம்பெண் ரேபிடோ பைக் டாக்ஸியில் பயணித்தார். பைக்கில் பின்இருக்கையில் இளம்பெண் அமர்ந்திருந்தார். அப்போது ரேபிடோ ஓட்டியவர் அந்த இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். பெங்களூருவுக்கு புதிது என்பதால் அந்த இளம்பெண் அமைதியாக இருந்தோடு, அவரது செயலை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.
பெங்களூரில் கர்நாடகா மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் ஏராளமான பணியாற்றி வருகின்றனர். இதனால் சாலைகளில் கடும் பேக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பஸ்களில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால் அதிக நேரம் எடுக்கும். இதனால் பலரும் ‛ரேபிடோ' பைக் டாக்ஸி வசதியை பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தான் கடந்த 6ம் தேதி இளம்பெண் ஒருவர் ‛ரேபிடோ' பைக்கில் பயணித்தார். அப்போது பைக் ஓட்டிய நபர் அந்த இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக தொடக்கூடாத இடங்களை தொட்டுள்ளார். இளம்பெண் கண்டித்து பைக்கை நிறுத்தும்படி கூறியும் அவர் நிறுத்தாமல் சென்றுள்ளார்.
இந்த முகம் சுளிக்க வைக்கும் சம்பவத்தை அந்த இளம்பெண் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை தொடர்பான வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் அந்த பெண் கூறியுள்ளதாவது: ‛‛இன்று (06.11.2025) பெங்களூரில் நான் ஒருபோதும் நினைத்து பார்க்காத விஷயத்தை எதிர்கொண்டேன். சர்ச் ஸ்ட்ரீட்டில் இருந்து ராபிடோ மூலமாக எனது பிஜிக்கு திரும்பினேன். அப்போது ரேபிடோ ஓட்டுபவர் என் காலில் கையை வைத்து அழுத்தினார். இதனை வீடியோவாக எடுத்துள்ளேன்.
மேலும் வாகனத்தை நிறுத்தும்படி கூறினேன். அவர் நிறுத்தவில்லை. நான் பெங்களூருவுக்கு புதியவள். இதனால் நான் எங்கு இருக்கிறேன் என்பது எனக்கு தெரியாது. எனவே பயத்துடன் நான் தங்கியிருக்கும் இடத்துக்கு வந்தேன். அதன்பிறகு கண்ணீருடன் நடந்து சென்றேன். அப்போது அங்கு இருந்த அன்பான மனிதர் என்னை கவனித்தார். என்ன நடந்தது? என்ற கேட்டார்.
நடந்த சம்பவத்தை அவரிடம் கூறினேன். அப்போது அவர் ரேபிடோ ஓட்டியவரை கண்டித்தார். இதையடுத்து என்னிடம் மன்னிப்பு கேட்டதோடு, இனி இப்படி செய்யமாட்டேன் என்று கூறினார். ஆனால் அங்கிருந்து செல்லும்போது விரலை காட்டி மிரட்டும் படி சைகை செய்தார். இது என்னை பாதுகாப்பற்றதாக உணர வைத்துள்ளது.
நான் இதை ஏன் பகிர்கிறேன் என்றால் எந்த பெண்ணும் இதுபோன்ற நிலையை சந்திக்க கூடாது. டாக்ஸி அல்லது பைக் டாக்ஸியில் இதுபோன்ற பிரச்சனையை எதிர்கொள்ள கூடாது. இப்படி நடப்பது இது முதல் முறையல்ல. ஆனால் நான் இன்று பாதுகாப்பற்றதாக உணர்ந்தேன். இதனால் என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. தயவு செய்து விழிப்புணர்வுடன் இருங்கள். இதுபோன்ற சம்பவங்களில் அமைதியாக இருக்காதீர்கள்'' என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது. பலரும் அந்த ரேபிடோ பைக் ஓட்டுநரை கடுமையாக திட்டி தீர்க்கின்றனர். மேலும் ரேபிடோ அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியில் இருந்து நீக்க வேண்டும். அதேபோல் போலீசார் அந்த நபரை கைது செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications