கொரோனா தாக்கப்பட்ட குழந்தைக்கு.. ஏற்பட்ட விசித்திர உடல் பாதிப்பு.. மருத்துவர்களை குழப்பிய சம்பவம்!
பெங்களூர்: பெங்களூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்றுக்கு உடலில் விசித்திரமான பாதிப்பு ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்துவிட்டது. தினசரி பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது. இப்போது பெரிய அளவில் கொரோனா கேஸ்கள் ஏற்படவில்லை என்றாலும் கூட குழந்தைகள் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.
குழந்தைகளுக்கு இதுவரை இந்தியாவில் வேக்சின் போடப்படவில்லை. இதனால் குழந்தைகள் இடையே, 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு இடையில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

கொரோனா பரவல்
இந்த நிலையில்தான் பெங்களூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்றுக்கு உடலில் விசித்திரமான பாதிப்பு ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூர் ஜேபி நகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்த ஒரு வயதே ஆன வைஷ்னவி என்ற குழந்தைக்கு திடீரென வலிப்பு ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

ஹிஸ்டரி
இந்த குழந்தையின் உடல்நிலையை சோதனை செய்த மருத்துவர்கள் குழந்தைக்கு தற்காலிமாக பாதி பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். உடலின் வலது பக்கம் மட்டும் பக்கவாதம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மூளையில் பக்க வாதத்திற்கு அறிகுறிகளும் இருந்துள்ளன. இந்த குழந்தையின் உடலில் கொரோனா ஆண்டிபாடி இருந்துள்ளது.

ஆண்டிபாடி
இரண்டு மாதங்களுக்கு முன் இந்த குழந்தையின் பெற்றோருக்கு கொரோனா வந்து சென்றது. அப்போது குழந்தைக்கும் கொரோனா வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த குழந்தைக்கு அப்போது கொரோனா சோதனை செய்யப்படவில்லை. ஆனால் குழந்தையின் உடலில் ஆண்டிபாடி இருந்ததால் குழந்தைக்கு கொரோனா வந்துவிட்டது சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பக்கவாதம்
இந்த நிலையில்தான் அந்த குழந்தைக்கு தற்போது பாதி பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த குழந்தைக்கு Hemiconvulsion-Hemiplegia-Epilepsy (HHE) syndrome என்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது விசித்திரமான உடல் பாதிப்புகளில் ஒன்றாகும். இதனால் உடலில் பாகங்களில் வலிப்பு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

எப்படி?
பொதுவாக கொரோனா காரணமாக பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உடலில் பல இடங்களில் வீக்கங்கள், திசு வீக்கங்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக சில குழந்தைகளுக்கு சிறிய அளவிலான பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல்தான் இந்த குழந்தைக்கும் இந்த பக்கவாத பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிப்பு
ஆனாலும் கிட்டத்தட்ட 2 மாதத்திற்கு பின் குழந்தைக்கு இப்படி பக்கவாதம் ஏற்பட்டு இருப்பது மருத்துவர்களை குழப்பி உள்ளது. கொரோனாவிற்கு பின்பான உடல் பாதிப்புகளில் குழந்தைகளுக்கு பக்கவாதமும் ஒரு இணை பாதிப்பாக இருக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பக்கவாதம் காரணமாக பாதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை முன்னேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications