பாலியல் தொழிலாளியுடன் உல்லாசம்.. ஆசையோடு போன என்ஜினீயர்! விபரீத முயற்சியால் மொத்த காசும் போச்சே
பெங்களூர்: கர்நாடகவில் பாலியல் தொழிலாளியுடன் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டு ரூ.48 ஆயிரத்தை இளைஞர் ஒருவர் இழந்திருக்கும் சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் தொழில்நுட்பங்கள் அதிக அளவில் வளர்ந்து வருகின்றன. ஆனால் அதே அளவுக்கு தொழில்நுட்பங்கள் மூலம் நடக்கும் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கின்றன. அப்படியொரு சம்பவத்தில்தான் பெங்களூரை சேர்ந்த 25 வயது இளைஞர் சிக்கியுள்ளார். இவர், பெங்களூரின் பிரபல ஐடி நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலை செய்து வருகிறார். குண்டலஹல்லி பகுதியில் வாடகைக்கு ரூம் எடுத்து வசித்து வரும் இவர், சில நாட்களுக்கு முன்னர் ஒரு ஆபாச விளம்பரத்தை பார்த்து, பாலியல் தொழிலாளியுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என அதில் இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்புகொண்டிருக்கிறார்.

ஆனால் அந்த பக்கம் யாரும் ஃபோனை எடுக்கவில்லை. அதற்கு பதிலாக இளைஞரின் வாட்ஸ்அப் கணக்கிற்கு ஒரு மெசேஜ் வந்திருக்கிறது. அதில், 2 மணி நேரம் உல்லாசமாக இருக்க ரூ.4000 வரை செலவாகும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதை நம்பி முதல்கட்டமாக ரூ.4000ஐ அனுப்பியுள்ளார் இளைஞர். பின்னர் சிறிது நேரம் கழித்து பாலியல் தொழிலாளியை சந்திக்கும் தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் வந்திருக்கின்றன. குறிப்பிட்ட நாளன்று லைவ் லொகேஷனும் வந்திருக்கிறது.
இளைஞர் அந்த இடத்திற்கு சென்றிருக்கிறார். ஆனால், எந்த வீடு என சரியாக தெரியாமல் குழம்பிப்போயிருக்கிறார். உடனே அவரது செல்போனுக்கு மற்றொரு மெசேஜ் வந்திருக்கிறது. அதில், பாலியல் தொழிலாளியின் பாதுகாப்புக்காக ரூ.11,000 செலுத்த வேண்டும் என்று கூறிப்பட்டிருக்கிறது. இளைஞர் அந்த தொகையை அனுப்பியுள்ளார். சிறிது நேரம் கழித்து ரூம் வாடகை உள்ளிட்ட மற்ற விவகாரங்களுக்கு ரூ.25,000 கட்ட சொல்லியிருக்கிறார்கள். இளைஞரும் மூன்றாவது முறையாக இந்த தொகையை அனுப்பியுள்ளார்.

இப்படியே ரூ.48,500 வரை கொடுத்திருக்கிறார். ஆனால் கடைசி வரை பாலியல் தொழிலாளியை பார்க்க முடியவில்லை. அதன் பின்னர்தான் தனக்கு விபூதி அடிக்கப்பட்டிருக்கிறது என்பதை இளைஞர் உணர்ந்திருக்கிறார். உடனடியாக இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறை தரப்பில், "இது போன்ற ஏமாற்று சம்பவங்கள் அடிக்கடி நடந்த வருகிறது. நாங்களும் முடிந்தவரை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். முகம் தெரிந்த, நன்கு பழகிய ஆட்களிடத்திலேயே பணம் கொடுக்கும் போது அது திரும்ப கிடைப்பதில்லை. இப்படி இருக்கையில், யார் என்றே தெரியாத நபர்களிடம் பணம் கொடுக்க இளைஞர் முன்வந்திருக்க கூடாது. சம்பந்தப்பட்ட கூகுள் பே நம்பர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்" என்று கூறப்பட்டிருக்கிறது.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications