தான் கொல்லப்பட்டதாக நாடகமாடி ரூ.70 லட்சம் பறித்த பெண்.. பெங்களூரில் நடந்த நூதன மோசடி!

தான் இறந்ததாக நாடகமாடி, பெண் ஒருவர் பெங்களூர் தொழிலதிபரிடம் 70 லட்சம் பணம் பறித்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தான் இறந்ததாக நாடகமாடி, பெண் ஒருவர் பெங்களூர் தொழிலதிபரிடம் 70 லட்சம் பணம் பறித்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பெங்களூரை சேர்ந்தவர் ராணி. இவருக்கு மணிகண்டன் என்ற கணவரும் பிரீத்தி என்ற மகளும், பிரசாத் என்ற தம்பியும் இருக்கிறார்கள். இந்த நிலையில் ராணியும் பெங்களூரை சேர்ந்த கிருஷ்ணதாஸ் என்ற தொழிலதிபரும் நீண்ட நாட்களாக நட்பில் இருந்து வந்தனர்.

இவர்கள் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் உறவு வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இவர்கள் அடிக்கடி சந்தித்து வந்த நிகழ்வுகளும் நடந்துள்ளது.

பணம் கொடுப்பார்

பணம் கொடுப்பார்

ராணி அவ்வப்போது கிருஷ்ணதாஸிடம் பணம் பெரும் சம்பவங்களும் நடந்து இருக்கிறது. முதல் முறை கல்லூரி பீஸ் கட்ட 30 ஆயிரம் ரூபாய், பின் மருத்துவ செலவிற்கு 2.75 லட்சம் ரூபாய், அதன்பின் பியூட்டி பார்லர் வைக்க 3 லட்சம் ரூபாய் வாங்கி இருக்கிறார். மிகவும் பணக்காரரான கிருஷ்ணதாஸும் கேட்ட போதெல்லாம் பணம் எடுத்து கொடுத்துள்ளார்.

பணம் கொடுக்கவில்லை

பணம் கொடுக்கவில்லை

ஆனால் ராணி மீண்டும் மீண்டும் கிருஷ்ணதாஸிடம் பணம் கேட்டுள்ளார். இந்த முறை ஒரேயடியா 6 லட்சம் ரூபாய் பணம் கேட்டு இருக்கிறார். ஆனால் இந்த முறை கிருஷ்ணதாஸ் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதையடுத்து பணம் வேண்டாம், வீட்டிற்கு வாருங்கள் சந்திக்கலாம் என்று கூறியுள்ளார் ராணி.

போலீஸ் ரெய்டு

போலீஸ் ரெய்டு

இதையடுத்து ராணியின் வீட்டிற்கு கிருஷ்ணதாஸ் சென்று இருக்கிறார். அப்போது ராணியின் கணவர் மணிகண்டனும், தம்பி பிரசாத்தும் அங்கு போலீஸ் கெட்டப்பில் கதவை உடைத்துக் கொண்டு வந்துள்ளனர். பின் இவர்கள் இருவரும் முறையின்றி உறவு வைத்ததாக கூறி கைது செய்வது போல டூப் போலீஸ் நடித்துள்ளனர். கைது செய்ய கூடாது என்றால் ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறி, அதை கிருஷ்ணதாஸிடம் இருந்து வாங்கி சென்று இருக்கிறார்கள்.

மரணம் அடைந்தார்

மரணம் அடைந்தார்

சில நாட்களுக்கு பின் கிருஷ்ணதாஸுக்கு போன் செய்த டூப் போலீஸ் மீண்டும் போலீஸ் போல பேசி, ராணி இறந்துவிட்டார். அவரை யாரோ கொலை செய்து இருக்கிறார்கள். எங்களுக்கு உன் மீதுதான் சந்தேகம். உன்னை கைது செய்ய கூடாது என்றால் 30 லட்சம் வேண்டும் என்றுள்ளனர். இதனால் கிருஷ்ணதாஸ் தன்னுடைய நிலங்களை விற்று 20 லட்சம் ரூபாயை கொடுத்து இருக்கிறார்.

பணம் கேட்ட குடும்பம்

பணம் கேட்ட குடும்பம்

ஆனால் அந்த டூப் போலீஸ் விடாமல் மீண்டும் மீண்டும் அவர்களிடம் பணம் கேட்டு இருக்கிறார்கள். அதன்பின் ராணியின் மகள் பிரீத்தி, கிருஷ்ணதாஸுக்கு போன் செய்து, நீ போலீசுக்கு பணம் கொடுத்து அம்மாவின் கொலையை மறைத்தது தெரியும். அதனால் எனக்கு 20 லட்சம் பணம் கொடு, வெளியே சொல்ல மாட்டேன் என்று கேட்டுள்ளார்.

புகார் அளித்தார்

புகார் அளித்தார்

இப்படி தொடர்ச்சியாக பணம் கேட்கவே கிருஷ்ணதாஸுக்கு சந்தேகம் வந்துள்ளது. இதையடுத்து அவர் பெங்களூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த நேரம் பார்த்து கிருஷ்ணதாசுக்கு போன் செய்த ராணியின் கணவனும் தம்பியும் மீண்டும் 65 லட்சம் ரூபாய் கேட்டு இருக்கிறார்.

போலீசார் பிடித்தனர்

போலீசார் பிடித்தனர்

இதையடுத்து கிருஷ்ணதாசும் பணம் கொடுப்பதாக கூறி அவர்களை குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து இருக்கிறார். அந்த இடத்தில் மறைந்திருந்த போலீஸ் அவர்களை கைது செய்தனர். அதேபோல் ராணி, பீரித்தியையும் தேடி பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் பெங்களூரில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+