''ஏன் லேட்டுன்னு தாங்க கேட்டேன்; மூக்குல ஒரு குத்து விட்டாரு''.... ஜோமாடோ ஊழியர் மீது பெண் புகார்!
பெங்களுரு: பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் ஜோமாடோ ஊழியர் தன்னை தாக்கியதாகவும், தனது மூக்கு உடைந்து விட்டதாகவும் பரபரப்பு வீடியோ வெளியிட்டார்.
இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வகையில் நடவடிக்கை எடுப்போம் என்பதை தெரிவித்து கொள்கிறோம் என்று ஜோமாடோ நிறுவனம் அந்த பெண்ணிடம் கூறியுள்ளது,

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் ஹிதேஷா சந்திரனி. இவர் நேற்று சமூக வலைத் தளத்தில் மூக்கில் ரத்தம் சொட்டச், சொட்ட ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தான் ஜோமாடோவில் ஒரு உணவு ஆர்டர் செய்ததாகவும், அந்த உணவை சுமார் 1 மணி நேரம் தாமதமாக ஜோமாடோ ஊழியர் கொண்டு வந்ததாகவும், எதற்கு தாமதம் என்று கேட்டபோது அந்த ஊழியர் தன்னை தாக்கியதாகவும், தனது மூக்கின் எலும்பு தாக்கியதாகவும் தனக்கு ஆதரவு கொடும்படியும் கேட்டிருந்தார்.
பெண்ணின் இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வீடியோவுக்கு கீழே ஜோமாடோ நிறுவனத்தையும், ஊழியர்களையும் கண்டித்து பலரும் டுவிட் போட்டிருந்தனர். இதனை தொடர்ந்து ஹிதேஷா சந்திரனியின் வீடியோவை இணைத்து அவருக்கு ரீடுவிட் செய்து பதிவிட்ட ஜோமாடோ, ''எங்களுடன் பேசியதற்கு நன்றி ஹிதேஷா. இதுபோன்ற சம்பவங்கள் எங்கள் நிறுவனம் செய்யும் அணுகுமுறை அல்ல என்பதை உங்களுக்கு உறுதி அளிக்கிறோம்.
எங்கள் நிறுவனத்தின் உள்ளூர் பிரதிநிதி விரைவில் உங்களை சந்தித்து போலீஸ் விசாரணை தொடர்பான விவரங்களுக்கு உதவுவார். இந்த சம்பவத்தால் நாங்கள் எவ்வளவு வருந்தினோம் என்பதை வார்த்தையால் விவரிக்க முடியாது. இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வகையில் நடவடிக்கை எடுப்போம் என்பதை தெரிவித்து கொள்கிறோம் என்று ஜோமாடோ நிறுவனம் கூறியுள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications