சுற்றி நின்று ஜெய் ஸ்ரீராம் கோஷம்.. கையில் குழந்தையுடன்.. பதிலுக்கு அல்லாஹு அக்பர் சொன்ன பெண்.. பரபர
பெங்களூர்: கர்நாடகாவில் ஜெய் ஸ்ரீராம் கோஷங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக நேற்று ஷிவமோகாவில் சிவப்ப நாயக்கா பகுதியில் ஒரு பெண் அல்லாஹு அக்பர் கோஷத்தை எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் மேற்கொள்ளப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழாவைக் கொண்டாடும் வகையில் நேற்று நாடு முழுக்க பல்வேறு கொண்டாட்டங்கள் அரங்கேற்றப்பட்டன. முக்கியமாக பாஜக ஆளும் மாநிலங்களில் விடுமுறை கூட விடப்பட்டு கொண்டாட்டங்கள் அரங்கேறின.

பாஜக ஆளும், ஆண்ட, பாஜக வலுவாக இருக்கும் மாநிலங்களில் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அதன்படி கர்நாடகாவில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கே பல இடங்களில் விழா குழுவினர் கூடி ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் எழுப்பினர்.
கோஷம் பிரச்சனை; முக்கியமான சாலை சந்திப்புகளில் இந்த கோஷத்தை எழுப்பி மக்களுக்கு இனிப்புகளை கொடுத்தனர். இந்த நிலையில் அங்கே குழந்தையுடன் வந்த இஸ்லாமிய பெண் ஒருவர் பைக்கில் அந்த இடத்திற்கு வந்தார். பர்தா அணிந்து இருந்த அந்த பெண்.. கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டதைக் கேட்டதும் அவர் பதிலுக்கு அல்லாஹு அஃபர் என்று கோஷம் எழுப்பினார். கொண்டாட்டம் செய்தவர்களை பார்த்து முகத்துக்கு முகம்.. கொஞ்சம் கூட அச்சமின்றி அவர் கோஷம் எழுப்பினார்.
கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கத்துடன் அந்த பெண் அப்படி கோஷம் எழுப்பியதாக கூறி அந்த குழுவினர் அந்த பெண்ணை சூழ்ந்து கேள்வி எழுப்ப தொடங்கினர். நீ ஏன் பதிலுக்கு கோஷம் எழுப்புகிறாய் என்று சண்டைக்கு செல்ல தொடங்கினர்.
. This video is from Shivamogga Karnataka, Hindu mob chanted ‘#JaiShriRam' to harass burqa-clad Muslim woman but she replied with Allahu Akbar! on the day of #RamMandirPranPrathistha ! pic.twitter.com/EUvK8OIjge
— Samiullah Khan (@_SamiullahKhan) January 22, 2024
இதனால் அங்கே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தலையிட்டு அந்த பெண்ணை விசாரணைக்காக காவலில் எடுத்தனர். சிவமொக்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.கே. இது பற்றி கூறுகையில், அந்த பெண் மனநிலை சரியில்லாதவர் என்றும், சில மாதங்களாக சிகிச்சையில் இருந்ததாகவும் அந்த பெண்ணின் தந்தை தெரிவித்தார். நாங்கள் மருத்துவ ஆவணங்களை சரிபார்க்க முடிவு செய்துள்ளோம்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறோம் என்று அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ராமர் கோவில் பூஜை: நேற்று அயோத்தி ராமர் கோவில் பூஜை விமர்சையாக நடைபெற்றது. கோவில் கும்பாபிஷேகம் பிரதமர் மோடி , உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் முன்னிலையில் நடைபெற்றது. இவர்கள் முன்னிலையில் அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவுக்கான சடங்கு சம்பிரதாயங்கள் அடங்கிய பூர்வாங்க பூஜைகள் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது.
இன்று கோவில் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டு உள்ளது. ரீ ராம் ஜென்மபூமி தீர்த்தத்தின்படி, ராமர் கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட கோயிலாகும், ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. இது மொத்தம் 392 தூண்களையும் 44 கதவுகளையும் கொண்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவிலுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் யானைகள், சிங்கங்கள், ஹனுமான் மற்றும் 'கருடா' போன்ற சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் ராஜஸ்தானின் பன்சி பஹர்பூர் பகுதியில் இருந்து பெறப்பட்ட மணற்கல்லைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications