பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பளார்னு என் கன்னத்தில் விழுந்த அறை போல இருக்கிறது.. பிரகாஷ் ராஜ்

தன்னுடைய தேர்தல் தோல்வி குறித்து பிரகாஷ்ராஜ் ட்வீட் செய்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Elections 2019: படுதோல்வியைத் தழுவிய ஐக்கிய ஜனதா தளம்- வீடியோ

    பெங்களூரு: "யார் என்னை எவ்வளவு கேலி செய்தாலும் சரி, என் நிலையில் இருந்து நான் மாற போவதில்லை" என்று பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

    காலை முதல் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடந்துவருகிறது. இதில், தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி இப்போதைக்கு முன்னிலையில் உள்ளது. ஒருசில இடங்களில் பாஜக வெற்றி பெற்றுவிட்டதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துவருகிறது.

    நடந்து முடிந்த தேர்தலில் பெங்களூரூ மத்திய நாடாளுமன்றத் தொகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் சுயேச்சையாக போட்டியிட்டார்.

     பிரச்சாரத்தில் விமர்சனம்

    பிரச்சாரத்தில் விமர்சனம்

    பிரச்சாரங்களின்போது பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தார். இவரது சில கருத்துகள், சர்ச்சையையும், காரசார வாதத்தையும் எழுப்பி சென்றது. இது பரபரப்பையும் ஏற்படுத்தியது.

    தோல்வி முகம்

    இந்நிலையில், இறுதி முடிவுகள் அறிவிக்கும் முன்னரே தனது தோல்வியை பிரகாஷ்ராஜ் ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து தனது தனது ட்விட்டர் பதிவிட்டுள்ளார். அதில் தனது தோல்வியை அவர் தெளிவாக ஒப்புக் கொண்டுள்ளார்.

    முகத்தில் அறை

    "இது என் முகத்தில் பளார் என்று விழுந்த அறை. இன்னும் பெரிய விமர்சனங்கள், கேலி கிண்டல்கள், என்மேல் வைக்கப்படும். ஆனால் நான் என் நிலையிலிருந்து மாறப்போவதில்லை. மதச்சார்பற்ற இந்தியாவுக்கான எனது போராட்டம் இனியும் தொடரும்.

     கடினமான பயணம்

    கடினமான பயணம்

    நீண்டதூரம் செல்லவேண்டிய கடினமான பயணம் தொடங்கியிருக்கிறது. இதுவரை எனக்கு உறுதுணையாக நின்ற அனைவருக்கும் நன்றி. ஜெய்ஹிந்த்'' என்று பதிவிட்டுள்ளார்.

    English summary
    Actor Prakashraj set to lose in Bangalore central and he has tweeted about his lost
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X