கல்யாண ஆசையில் நடிகை ரம்யா! மாப்பிள்ளை எப்படி வேண்டும் தெரியுமா? பிரசாரத்தில் அவரே சொன்ன ஆசை! ஆஹா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நடிகையாக இருந்து அரசியலில் நுழைந்து காங்கிரஸ் கட்சியில் எம்பியாக மாறியவர் ரம்யா. தற்போது கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக செயல்பட்டு வரும் நிலையில் திருமணம் பற்றி கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது. அதற்கு நடிகை ரம்யா கூறிய பதில் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ், கன்னடா உள்ளிட்ட பல மொழிகளில் நடிகை ரம்யா. கர்நாடகாவை சேர்ந்த இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மேலும் கடந்த 2013ல் நடந்த மண்டியா நாடாளுமன்ற தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் ரம்யா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு 2014ல் நடந்த நாடாளுன்ற தேர்தலில் நடிகை ரம்யா அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

 Actress turned politician Ramya wants to marry gowda boy as groom

இதையடுத்து அவர் மண்டியாவில் இருந்து டெல்லிக்கு நகர்ந்தார். காங்கிரஸ் கட்சியின் ஐடி விங்க் தலைவராக செயல்பட்டார். அதன்பிறகு அவர் அப்பதவியில் இருந்து விலகிய நிலையில் தற்போது மீண்டும் அரசியலுக்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அதாவது கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக நடிகை ரம்யா அறிவிக்கப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக நடிகை ரம்யா நேற்று முதல் முதலாக பிரசாரத்தை தொடங்கினார். அவரது சொந்த மாவட்டமான மண்டியாவில் நடந்த பிரியங்கா காந்தியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று நடிகை ரம்யா தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இந்த வேளையில் ரம்யா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்களின் வெவ்வேறு கேள்விகளுக்கு ரம்யா பதிலளித்தார். பத்திரிகையாளர் சந்திப்பில் ரம்யா கூறியதாவது:

நான் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக உள்ளேன். இன்று தான் முதல் முதலாக பிரசாரத்தை தொடங்கி உள்ளேன். பிரசாரம் செய்யும் இடங்களுக்கான லிஸ்ட் இப்போது தான் தயரானது. வரும் நாட்களில் மைசூர், வருணா, நஞ்சன்கூடு, உப்பள்ளி, பிஜாப்பூர், பெங்களூர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன். காங்கிரஸ் சார்பில் மண்டியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. நான் போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. நான் மண்டியா மக்களை விட்டு எங்கும் செல்லவில்லை. நான் எப்போதும் மண்டியாவைச் சேர்ந்தவன். கவுடத்தி (ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்த ஆண் கவுடா, பெண் கவுடத்தி) பட்டத்தை யாராலும் பறிக்க முடியாது. எனது அம்மா மண்டியாவை சேர்ந்தவர். தந்தை இங்கே தான் இறந்தார்.

 Actress turned politician Ramya wants to marry gowda boy as groom

மண்டியா மக்கள் என்னை எம்பியாக்கி ஆதரவளித்தனர். அவர்களை மறக்க மாட்டேன். மண்டியாவில் எனது குடும்பம் போன்றது. மண்டியாவில் சொந்த வீடு கட்ட வேண்டும் என நினைத்துள்ளேன். ​​கோபால்பூரில் என் தாத்தா கட்டிய வீடு இருக்கிறது. ஆனாலும் நான் சொந்த வீடு கட்ட வேண்டும் என விரும்புகிறேன். இன்றோ, நாளையோ அது எப்போது சாத்தியமாகும் என்பது தெரியவில்லை.'' என்றார்.

இந்த வேளையில் ரம்யாவின் திருமணம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது நடிகை ரம்யா, ‛‛நான் திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன். முதலில் எனக்கு ஒரு பையனை மாப்பிள்ளையாக தேடித்தாருங்கள். குறிப்பாக கவுடா பையனை பார்த்தால் கூறுங்கள். எனக்குப் பிடித்த நபரை நான் எங்கும் காணவில்லை. அவரை நீங்களே தேடுங்கள். இதற்காக சுயவரம் நடத்தினாலும் சரிதான்'' என கூறி சிரித்தார்.

கவுடா என்பது ஒக்கலிகர் சமுதாயத்தை குறிக்கும். இதன்மூலம் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவரை மாப்பிள்ளையாக தேடும்படி நடிகை ரம்யா கூறியுள்ளார். இந்த சமுதாய மக்கள் மண்டியா, மைசூர், ஹாசன், ராமநகர் உள்ளிட்ட பழைய மைசூர் பகுதிகளில் அதிகமாக வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+