"பிச்சை எடுக்கிறேன்.. நான் இறந்துவிட்டால்.." நடிகை விஜயலட்சுமி பரபரப்பு பேட்டி.. திரையுலகம் ஷாக்
நடிகை விஜயலட்சுமி கண்ணீர் மல்க பேட்டி தந்துள்ளார்
பெங்களூரு: ''நான் பிச்சைக்காரியாக இருக்கிறேன்.. எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.. நான் இறந்தால் இந்த கர்நாடகாவிலேயே சமாதி எழுப்புங்கள்" என்று நடிகை விஜயலட்சுமி பரபரப்பான பேட்டி தந்துள்ளார்.
பிரபல நடிகை விஜயலட்சுமி தமிழ், கன்னட படங்களில் நடித்துள்ளார்.. பெங்களூருவில் வசித்து வந்தார்.. தற்போது சென்னையில் வசித்து வந்தார்.. அடிக்கடி தனக்கு பண பிரச்சனை உள்ளதாக சொல்லி வீடியோ போடுவார்.
அதேபோல உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும், பண உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை வைப்பார்.. இப்படித்தான் 2 வருடங்களுக்கு முன்பு இவரது அம்மா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்..

பண உதவி
அப்போது பண உதவி கேட்டிருந்தார்.. அதேபோல, விஜயலட்சுமியும் இதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.. மருத்துவ செலவுக்குக்கூட பணம் இல்லாமல் தவிக்கிறோம் என்று அவரது சகோதரி உஷா தேவி தெரிவித்திருந்தார். இந்த வீடியோக்கள் காரணமாக, சில திரைப்பிரபலங்கள் விஜயலட்சுமிக்கு உதவி செய்தனர்..

ரஜினி ஆறுதல்
பண கஷ்டத்தில் இருப்பதால், ஒவ்வொரு நிமிஷமும் நரகத்தில் இருக்கிறேன் என்ற விஜயலட்சுமி பேசியதுடன், ரஜினிகாந்த் தனக்கு உதவ வேண்டும் என்று ஒரு வீடியோவில் கூறியிருந்தார்... ரஜினியும் தன்னிடம் பேசி ஆறுதல் சொன்னதாக விஜயலட்சுமியே கூறியிருந்தார்.. இதற்கு பிறகு சீமான் விவகாரம் பெரிதாக வெடித்தது.. சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி நிறைய வீடியோக்களை வெளியிட்டு, அது சோஷியல் மீடியாவில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது..

ஸ்டாலின்
தன் விவகாரம் தொடர்பாக உரிய நியாயம் தேவை என்று முதல்வர் ஸ்டாலின் வரை கோரிக்கை விடுத்திருந்தார் விஜயலட்சுமி.. அதேபோல இவர் வீட்டை காலி செய்ய சொல்லிவிட்டதாக கூறி மற்றொரு பிரச்சனை வெடித்தது.. தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக இன்னொரு செய்தியும் வெடித்தது.. இப்படி விஜயலட்சுமி குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி கொண்டே இருக்கும் நிலையில், மீண்டும் ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது..

கலைஞர்கள்
நடிகை விஜயலட்சுமி, கர்நாடக சினிமா வர்த்தக சபையில் செய்தியாளர்களை சந்தித்து ஒரு பேட்டி தந்திருந்தார்.. அப்போது அவர் சொன்னதாவது: என் அம்மா இறந்தவுடன் எனக்கு எதுவும் தோன்றவில்லை... பாமா, ஹரிஷ் போன்றோர் எனக்கு உதவி செய்தார்கள்.. கதறி அழுவதை தவிர எனக்கு வேறு எதுவுமே தெரியவில்லை... கலைஞர்கள் எல்லாம் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

பிச்சைக்காரி
நடிகர்கள் சிவராஜ்குமார், யஷ் ஆகியோரிடம் பேசி உள்ளேன்... கர்நாடகாவில் நான் இன்னமும் பிச்சைக்காரி தான்... எல்லாவற்றுக்கும் நான் பிச்சை தான் எடுத்து கொண்டிருக்கிறேன்... எனக்கென யாரும் இல்லை... நான் அனாதையாகி விட்டேன்... நான் இறந்தால் இந்த கர்நாடகாவிலேயே சமாதி எழுப்புங்கள்" என்று உருக்கமாக கூறினார்... விஜயலட்சுமியின் இந்த பேட்டிதான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வீடுகூட இல்லாமல் கஷ்டப்படறேன், எனக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் இருக்கிறது, நடிகர்கள் உதவ வேண்டும் என்று ஏற்கனவே ஒருமுறை விஜயலட்சுமி கோரிக்கை வைத்திருந்தார்..

உழைப்பு
அதேபோல, உடல்நலம் சரியில்லை என்று தெரிந்தும் சில நடிகர்கள் தனக்கு உதவவில்லை என்று குறைகூறியிருந்தார்.. அதற்கு, பிரபல நடிகர் சிவராஜ் குமார், "விஜயலட்சுமி தொடர்ந்து உதவிகள் செய்து கொண்டே இருக்க முடியாது... உடலில் குறையுள்ளவர்கள் கடினமாக உழைத்து தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள். அப்படியிருக்கும் போது, நல்ல கை , கால், மனநலம் ஆகியவை நன்றாக இருக்கும் இவரால் அவரை பார்த்துக் கொள்ள முடியாதா" என்று கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications