கேஸ் வாபஸ் பெற ரூ 50 ஆயிரம் டெபாசிட்! சாட்டை துரைமுருகன் போனை பாருங்க.. நடிகை விஜயலட்சுமி பரபரப்பு
பெங்களூர்: நாம் தமிழர் நிர்வாகி சாட்டை துரைமுருகனின் செல்போனை ஆராய்ந்தாலே சீமான் என்னுடன் பேசியது வெளிச்சத்துக்கு வரும் என நடிகை விஜயலட்சுமி பதிலடி கொடுத்துள்ளார்.
தன்னை திருமணம் செய்து கொண்டு தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு தன்னை சீமான் ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். அந்த புகாரை அவர் தன்னால் போராட முடியவில்லை என கூறி வாபஸ் பெற்றுவிட்டார்.

இருந்தாலும் சீமானுக்கு ஏற்கெனவே வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பிய நிலையில் தன் மனைவி கயல்விழியுடன் சீமான் ஆஜரானார். அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு விசாரணை நிறைவடைந்தது.
இதையடுத்து சீமான் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் 2 பெண்களால் நான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன். 13 ஆண்டுகளாக வழக்கு போட்டு என்னை வன்கொடுமை செய்தனர். என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய வீரலட்சுமி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
நான் விஜயலட்சுமியை திருமணம் செய்து கொண்டதாகத்தான் புகார் அளித்தார்கள். ஆனால் இப்போது ரூ 60 லட்சம் பணம், நகையை நான் பெற்றுக் கொண்டதாக சொல்கிறார் என சீமான் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடியாக விஜயலட்சுமி கூறுகையில் சீமான் மீது நான் கூறிய புகார்களை நிரூபிப்பேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பாலியல் புகார்களை வேண்டுமானால் என்னால் நிரூபிக்க முடியாமல் போகலாம். ஆனால் மற்ற விஷயங்களை எல்லாம் என்னால் நிரூபிக்க முடியும்.
வீரலட்சுமியின் வீட்டிலிருந்து நான் வெளியேறிய போது சாட்டை துரைமுருகனிடம் பேசினேன். அப்போது தம்பி சாட்டை துரைமுருகன்தான் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியனை அனுப்பி வைத்தார். நான் இரு நாட்கள் டைம் கேட்டேன். ஆனால் அவர் இரவோடு இரவாக போக வேண்டும் என கூறினார்.
புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டு அக்காவுடன் ஊருக்கு செல்லுமாறு அனுப்பி வைத்தவரே சாட்டை துரைமுருகன்தான். என் வங்கிக் கணக்கில் ரூ 50 ஆயிரம் போட்டிருந்தார்கள். என்னையும் அக்காவையும் பெங்களூருக்கு அனுப்பி வைத்ததே சாட்டை துரைமுருகன்தான். அவருடைய போனை ஆராய்ந்தாலே சீமான் என்னுடன் பேசியது தெரியும்.
நான் சாட்டையுடன் நடத்திய சாட்டுகளை எல்லாம் வைத்திருக்கிறேன், தேவைப்பட்டால் போலீஸிடம் காட்டுவேன். என் மீது சீமான் மான நஷ்ட ஈடு வழக்கு போடுவதாக சொல்கிறார். அப்படி போட்டாலும் நான் ஆதாரத்தை காட்டுவேன். என்னை பொய் சொல்லும்பெண்ணாக சித்தரித்தால் இந்த மோதல் முடிவுக்கே வராது என விஜயலட்சுமி கடுமையாக விமர்சித்திருந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications