சக்சஸ்.. சக்சஸ்! அதற்குள் வேலையை தொடங்கியது ஆதித்யா எல்-1.. இஸ்ரோ வெளியிட்ட மாஸ் அறிவிப்பு
பெங்களூர்: சூரியனை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய ஆதித்யா எல் 1 விண்கலம் அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளது என இஸ்ரோ கூறியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்த வெற்றியை தொடர்ந்து பல்வேறு நாடுகள் இந்தியாவுடன் சேர்ந்து விண்வெளி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளன. இந்நிலையில் இந்தியாவுக்கு மற்றொரு மைல் கல்லாக அமைந்துள்ளது ஆதித்யா எல்1 எனும் திட்டம். அதாவது இந்த திட்டத்தின் மூலம் ஏவப்படும் விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும். காந்த புயல்களை முன்கூட்டியே கணிக்கவும், சூரியனின் பல்வேறு அடுக்குகளை ஆய்வு செய்யவும் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளும்.
இந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் கருவிகளுடன் ஆதித்யா எல்1 விண்கலம் PSLV-C57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து கடந்த 2ம் தேதி காலை 11.50 மணியளவில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. சூரியனை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பும் முதல் விண்கலம் இது என்பதால் உலக நாடுகளே இந்த மிஷன் மீது மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டிருந்தன. ஆதித்யா எல்1 விண்வெளியில் ஏவப்பட்ட நிலையில், அது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள எல்1 எனும் புள்ளியில் நிலைநிறுத்தப்படும்.
இந்த புள்ளிக்கு விண்கலம் சென்றடைய 125 நாட்கள் வரை ஆகும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த விண்கலம் கவண் கல் எறிதல் தொழில்நுட்பம் மூலம் எல் 1 புள்ளியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆதித்யா எல்1 புவி சுற்றுவட்டப் பாதையை 4வது முறையாக கடந்த 15ம் தேதி வெற்றிகரமாக உயர்த்தியுள்ளது இஸ்ரோ. இதன் மூலம் ஆதித்யா எல்1 குறைந்தபட்சமாக பூமிக்கு 256 கி.மீ தொலைவிலும், அதிகபட்சமாக 1,21,973 கி.மீ தொலைவிலும் சுற்றி வருகிறது. இது வரும் 19ம் தேதியன்று புவியின் ஈர்ப்பு விசையிலிருந்து லாக்ராஞ்சியன் புள்ளியை நோக்கி பயணிக்கும்.
இப்படி இருக்கையில் ஆதித்யா எல் 1 விண்கலம் அறிவியல் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளது என இஸ்ரோ கூறியுள்ளது. அதாவது இந்த விண்கலத்தில் சூப்ரா தெர்மல் & எனர்ஜிடிக் பார்ட்டிகல் ஸ்பெக்ட்ரோமீட்டர் (STEPS) கருவி பொருத்தப்பட்டிருக்கிறது. பூமியை சுற்றி இருக்கும் அதிவெப்ப மற்றும் ஆற்றல் அயனிகளை அளவிடுவதுதான் இதன் பணியாகும். பூமியை சுற்றி காந்த புலன் இருக்கிறது. இது மிகவும் ஆச்சரியமான ஒரு அம்சமாகும்.

சூரிய குடும்பத்தில் மொத்தம் 4 கோள்கள் தரை பரப்பை கொண்டிருக்கின்றன. மீதம் உள்ள 4 கோள்களும் வாயு கோள்களாகும். இப்படி தரை பரப்பு கொண்டிருக்கும் கோள்களில் புதன் மற்றும் பூமியில் மட்டும்தான் காந்த புலன்கள் இருக்கின்றன. புதன் கோளில் உயிர்கள் கிடையாது எனவே இங்கு காந்த புலன் இருந்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. ஆனால் பூமியில் காந்த புலன் இருப்பதற்கு சில பிரயோஜனங்கள் இருக்கின்றன.
அதாவது சூரியனிலிருந்து வரும் மின் காந்த அலைகள் பூமியை தாக்காமல் இந்த காந்த புலன்தான் காப்பாற்றுகிறது. அந்த வகையில் தற்போது புவி வட்டப்பாதையில் சேகரித்த தரவு, பூமியின் துகள்கள், காந்த புலன் பற்றிய பகுப்பாய்வை ஆதித்யா எல்1 தொடங்கியுள்ளது. இந்த பணியை STEPS கருவி மேற்கொண்டுள்ளது. அதேபோல இது அதிவெப்ப மற்றும் ஆற்றல் அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களை அளவிடத் தொடங்கியுள்ளது. ஆதித்யா எல்1 விண்கலம் நாளை சூரியனின் எல்1 புள்ளியை நோக்கி நகர இருக்கும் நிலையில் தற்போது இந்த ஆய்வை செய்திருப்பது, விண்கலன் முழு திறனில் இயங்கி வருகிறது என்பதற்கான அர்த்தம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications