என்னது லிங்காயத்துக்களுக்கும் துணை முதல்வர் பதவி கிடையாதா? கடும் அதிருப்தியில் எம்பி பாட்டீல்
பெங்களூர்: கர்நாடகா காங்கிரஸ் அரசில் தலித்துக்கு துணை முதல்வர் பதவி தராவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் துணை முதல்வரும் முன்னாள் கர்நாடகா காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான ஜி.பரமேஸ்வரா எச்சரிக்கை விடுத்திருந்தார். அவரைத் தொடர்ந்து லிங்காயத் சமூகத்துக்கும் துணை முதல்வர் பதவி மறுப்பதா? என மற்றொரு மூத்த தலைவர் எம்பி பாட்டீல் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சியில் முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவக்குமார் ஆகியோர் நீண்ட இழுபறிக்குப் பின் தேர்வாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆளுநரை சந்தித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரினர். மாநில ஆளுநரும் ஆட்சி அமைக்க முறைப்படி அழைப்பு விடுத்தார். பெங்களூருவில் மே 20-ந் தேதி சித்தராமையா, டிகே சிவக்குமார் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த பங்கேற்பு விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.

கர்நாடகா காங்கிரஸ் அரசில் 3 துணை முதல்வர் பதவிகள் வழங்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் டெல்லியில் இடைவிடாது நடந்த ஆலோசனையில் டிகே சிவகுமாருக்கு மட்டுமே துணை முதல்வர் பதவி என இறுதி செய்யப்பட்டது. இதனால் துணை முதல்வர் பதவியை எதிர்பார்த்திருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வரா கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.
71 வயதாகும் ஜி.பரமேஸ்வரா, குமாரசாமி தலைமையிலான மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசில் துணை முதல்வராக இருந்தார். மேலும் கர்நாடகா காங்கிரஸ் கமிட்டித் தலைவராக 8 ஆண்டுகாலம் பதவி வகித்தவர். தமக்கு துணை முதல்வர் பதவி மறுக்கப்பட்டது தொடர்பாக ஜி.பரமேஸ்வர் கூறியிருப்பதாவது: டிகே சிவகுமார் தெரிவித்த கருத்து அவரது பார்வையில் சரியாக இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் மேலிடத்தின் கருத்து வேறானது. தலித்துகளின் எதிர்பார்ப்புகள் அடிப்படையில் காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுக்க வேண்டும். தலித்துகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாமல் போனால் இயற்கையாகவே எதிர்விளைவுகளை சந்தித்துதான் ஆகவும் வேண்டும். பின்னர் நடக்கப் போகும் நிகழ்வுகளுக்கு வருந்தி பயனில்லை. இப்போதே பிரச்சனையை சரி செய்து கொள்வதுதான் சரியாக இருக்கும். இல்லை எனில் கட்சிக்கு பிரச்சனைதான் வரும். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது அவர்களுக்கு புரியும். இவ்வாறு பரமேஸ்வரா கூறியிருந்தார்.
ஜி.பரமேஸ்வரின் இந்தப் பேட்டி பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் லிங்காயத் சமூகத்துக்கும் துணை முதல்வர் பதவி இல்லை என்பதால் அதனை எதிர்பார்த்த மூத்த தலைவர் எம்பி பாட்டீல் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக காங்கிரஸுக்கு வாக்களித்துள்ளனர். அதனால் துணை முதல்வர் பதவி மற்றும் 5 முக்கிய துறைகளுடன் அமைச்சர் பதவி தரப்பட வேண்டும் என முஸ்லிம் பிரதிநிதிகள் வலியுறுத்தி இருக்கின்றனர். காங்கிரஸில் மொத்தம் 9 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஆனால் முஸ்லிம்களுக்கும் துணை முதல்வர் பதவி மறுக்கப்பட்டுள்ளது.
சித்தராமையா முதல்வர்; தலித்- லிங்காயத்- முஸ்லிம் ஆகிய சமூகங்களுக்கு துணை முதல்வர் பதவி என்கிற பார்முலாதான் முன்னர் பேசுபொருளாக இருந்தது. தற்போது டிகே சிவகுமாருக்காக ஒரே ஒரு துணை முதல்வர் பதவி மட்டும் வழங்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்திருக்கிறது. இதுதான் இதர சமூகத்தினரை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது என்கின்றன கர்நாடகா தகவல்கள்.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications