தடை செய்யப்பட்ட அமைப்பு தான் ஆர்எஸ்எஸ்.. வரலாற்றை கிளறி பாஜகவை தாக்கிய காங்கிரஸ் சித்தராமையா
பெங்களூர்: ‛‛பயத்தை ஏற்படுத்துவோரை பயங்கரவாதி எனக்கூறும் நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பை பார்த்து நான் பயப்படுவதாக பாஜகவின் எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான சதானந்த கவுடா கூறியுள்ளார். இது 100 சதவீதம் உண்மை. மகாத்மா காந்தி படுகொலைக்கு பிறகு ஆர்எஸ்எஸ் அமைப்பை வல்லபாய் படேல் தடை செய்திருந்தார் என்பதை அவர் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்'' என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தாராமையா விமர்சனம் செய்துள்ளார்.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக சித்தராமையா செயல்பட்டு வருகிறார்.
அடுத்த ஆண்டு மே மாதம் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தற்போதே பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியினர் தேர்தல் பணியை துவக்கி உள்ளனர்.

ஆரியர்களா, திராவிடர்களா?
இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையா, ‛‛ஆர்எஸ்எஸ்காரர்களுக்கு பூர்வீகம் இந்தியாவா?. ஆரியர்கள் இந்த நாட்டை சேர்ந்தவர்களா?'' என கேள்வி எழுப்பி இருந்ததோடு, ‛‛திராவிடர்கள் தான் இந்த நாட்டின் பூர்வக்குடிகள்'' என கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை, ‛‛முதலில் சித்தாராமையா ஆரியரா? அல்லது திராவிடரா? என்பதை அறிவிக்க வேண்டும்'' என கூறினார்.

ஆர்எஸ்எஸ் பலவீனமான அமைப்பா?
இதன் தொடர்ச்சியாக சித்தராமையா மீண்டும் டுவிட்டரில், ‛‛ஆர்எஸ்எஸ்.அமைப்பில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே முக்கிய பதவியில் இருப்பது ஏன்?. இந்துக்களாக இருந்தாலும் தலித் உள்பட பிற்படுத்தப்பட்டோருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?'' என கேள்வி எழுப்பி இருந்தார். இதையடுத்து சித்தராமையாவை பாஜகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கிடையே, ‛‛நான் கேட்ட கேள்விக்கு ஆர்எஸ்எஸ், பாஜக தரப்பில் இருந்து பதில் வரவில்லை. மாறாக தனிப்பட்ட முறையில் என்னை விமர்சிக்கின்றனர்'' என குறிப்பிட்டு இருந்ததோடு, ‛‛இந்த சிறிய கேள்விக்கு கூட பதிலளிக்க முடியாத 97 ஆண்டு வரலாறு கொண்ட ஆர்எஸ்எஸ் ஒரு பலவீனமான அமைப்பா?'' என வினா எழுப்பினார்.

ஆர்எஸ்எஸ்ஸை பார்த்தால் பயம்
இந்நிலையில் சித்தாராமையாவின் இந்த வினாவுக்கு கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா பதிலளித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ரெயில்வே, புள்ளியியல் துறைகளை நிர்வகித்த சதானந்த கவுடா, சித்தராமையைா விமர்சனம் செய்துள்ளார். ‛‛ஆர்எஸ்எஸ் அமைப்பை பார்த்து சித்தராமையா பயப்படுகிறார். இதனால் தான் தேவையில்லாத கருத்துகளை கூறி வருகிறார்'' என தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை
இதற்கு சித்தாராமையா கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛ஆர்எஸ்எஸ் அமைப்பை பார்த்து நான் பயப்படுவதாக முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். இது நூற்றுக்கு நூறு உண்மை. மதசார்பின்மை, அகிம்சை, நல்லெண்ணம் கொண்ட ஒவ்வொரு இந்தியனும் ஆர்எஸ்எஸ் அமைப்பை பார்த்து பயப்படுகின்றனர். பயத்தை ஏற்படுத்துவோரை பொதுவாக பயங்கரவாதிகள் என கூறுவோம். தற்போது ஆர்எஸ்எஸ்ஸை பார்த்து நான் பயப்படுவதாக சதானந்தகவுடா கூறியதற்கான பதிலை அவரிடம் தான் கேட்டறிய வேண்டும். மகாத்மா காந்தி படுகொலைக்கு பிறகு இந்தியாவின் முதல் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் படேல் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்தார் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

அச்சமின்றி அன்பு செலுத்த முடியுமா?
மேலும் இந்தியாவில் பெரும்பான்மை இந்துக்களாக தலித், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் உள்ளனர். இவர்களை அந்நியப்படுத்தும் ஆர்எஸ்எஸ் அமைப்பு கண்டு நிச்சயமாக நான் பயப்படுகிறேன். சீர்த்திருத்தம் என்ற பெயரில் சமூகநிதியை நிலைநாட்டும் இடஒதுக்கீடு, அதுதொடர்பான சட்டங்களை எதிர்க்கம் ஆர்எஸ்எஸ் மீது அச்சமின்றி அன்பு செலுத்த முடியுமா?. தங்களின் குழந்தைகளுக்கு வெளிநாட்டில் கல்வி கொடுத்துவிட்டு நாட்டில் உள்ள தலித், பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் குழந்தைகளை பிரச்சனைகளில் இறக்கி சிறைக்கும் அனுப்பும் செயலை சாதாரணமாக ஆர்எஸ்எஸ் அமைப்பு செய்கிறது. எந்தவொரு நபர், அமைப்பின் சித்தாந்தம் என்பது பிறரிடம் மரியாதையை பெறும் வகையில் இருக்க வேண்டும். பயத்தை காட்டுவது போல் இருக்க கூடாது'' என கடுமையாக சாடியுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி!












Click it and Unblock the Notifications