பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஐஏ
பெங்களூர்: பெங்களூர் ராமேஸ்வரம் உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு விவகாரத்தில் முக்கிய குற்றவாளியை என்ஐஏ அதிகாரிகள் இப்போது கைது செய்துள்ளனர்.
இம்மாத தொடக்கத்தில் கர்நாடக தலைநகர் பெங்களூரில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் நடந்த இந்த குண்டுவெடிப்பு முதலில் விபத்தாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், அதன் பின்னரே இது குண்டுவெடிப்பு என்பது உறுதியானது.

தொடர்ந்து அங்கிருந்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். இந்தச் சூழலில் தான் இந்த வழக்கில் மிக முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
முதல் கைது: பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் குண்டு வைத்தாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரைத் தேசிய புலனாய்வு அமைப்பு இன்று கைது செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் முஸம்மில் ஷரீப் என அடையாளம் காணப்பட்டுள்ளது. என்ஐஏ அதிகாரிகள் கர்நாடகாவில் 12, தமிழ்நாட்டில் 5, உத்தரப்பிரதேசத்தில் ஒன்று என மொத்தம் 18 இடங்களில் ரெய்டு நடத்திய நிலையில், இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முசாவிர் ஷசீப் ஹுசைன் என்பவர் தான் இந்த குண்டுவெடிப்பை அரங்கேற்றியதாக என்ஐஏ அதிகாரிகள் கூறியுள்ளனர். அதேபோல இந்த வழக்கில் குற்றவாளியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் அப்துல் மதீன் தாஹாவும் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வருகிறார். இந்த இரு நபர்களும் தலைமறைவாக உள்ளனர். இப்போது கைது செய்யப்பட்ட முஸம்மில் ஷரீஃப், சம்பவத்தில் தொடர்புடைய நபர்களுக்குத் தேவையான logistical உதவிகளைச் செய்து இருக்கிறார்.
சோதனைக்குப் பின் கைது: கடந்த மார்ச் 17ஆம் தேதி புதன்கிழமை சந்தேகிக்கப்படும் இந்த மூன்று நபர்கள் உள்ளிட்ட சிலரது வீடுகள் மற்றும் கடைகளைக் குறிவைத்து சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனையில் பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் பெருந்தொகையும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தான் இப்போது என்ஐஏ அதிகாரிகள் முதல் கைதை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பெல்லாரியை சேர்ந்த ஒருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்ததாகத் தகவல் பரவியது. இருப்பினும், அந்தத் தகவலை என்ஐஏ அதிகாரிகள் மறுத்து இருந்தனர். இந்தச் சூழலில் தான் இப்போது இந்த முதல் கைது நடந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதில் இந்த சதிச் செயலின் மூளையாக இருந்தது யார் உள்ளிட்ட பல கூடுதல் தகவல்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன நடந்தது: பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் சுமார் 10 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கை முதலில் பெங்களூர் போலீஸ் விசாரித்த நிலையில், பின்னர் இது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. சிசிடிவி காட்சிகள் வைத்துப் பார்க்கும் போது தொப்பி, மாஸ்க் அணிந்து இருந்த அந்த நபர் வெறும் 9 நிமிடத்தில் குண்டை வைத்துவிட்டுக் கிளம்பியது தெரிய வந்தது.
அதன் பிறகு தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை வைத்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த நபர் தொடர்ந்து பொது பேருந்துகளில் பயணித்ததும் பல முறை தனது உடைகளையும் தோற்றத்தையும் மாற்றியதும் தெரிய வந்தது.
-
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார்












Click it and Unblock the Notifications