சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை குறைவு.. மோடியின் வார்த்தையால் மாறிய மார்க்கெட்
பெங்களூர்: அந்திய செலவாணி பயன்பாட்டை குறைக்க பொதுமக்கள் சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்த கர்நாடகாவில் அனைத்து சமையல் எண்ணெய் பிராண்டுகளின் விலையும் கிடுகிடுவென குறைந்துள்ளது. லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை குறைந்துள்ளது. அதேவேளையில் அரிசி விலை தாறுமாறாக ஏறியுள்ளது.
பிரதமர் மோடி ஹைதாராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு பல்வேறு முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளார். நம் நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பில் வைத்து கொள்ளும் வகையில் சில முக்கிய விஷயங்களை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதாவது மேற்காசிய போர் சூழல் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. கேஸ் சப்ளையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை உலக அளவில் விலை உயர்ந்துள்ளது.
மோடி வைத்த கோரிக்கை
இந்நிலையில் தான் பிரதமர் மோடி ''பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவதற்காகச் செலவிடப்படும் அந்நியச் செலாவணியை பெட்ரோல் மற்றும் டீசலைச் சேமிப்பதன் மூலம் அதை மிச்சப்படுத்துவது நம் எல்லோரது பொறுப்பாகும். இதனால் எரிபொருள் பயன்பாட்டை குறைத்து கொள்ள வேண்டும். பெட்ரோல், டீசல் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் பொதுபோக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்ற வாய்ப்பு வழங்க வேண்டும்.
தங்கம் - சமையல் எண்ணெய்
அதேபோல அடுத்த ஓராண்டு காலத்துக்கு திருமணம் உள்ளிட்டவற்றுக்கு தங்கம் வாங்குவதையும் மக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். தங்கத்தை அதிகளவில் இறக்குமதி செய்வதால் அதிலும் நாம் அந்நிய செலவாணியை அதிகம் செலவிடுகிறோம். உரம் வாங்குவதை பாதியாக குறைத்து இயற்கை முறை விவசாயத்துக்கும் மாற வேண்டும். இதே நிலைதான் சமையல் எண்ணெய்க்கும் உள்ளது. அதன் பயன்பாட்டை நாம் குறைத்துக் கொள்ள வேண்டி உள்ளது. இது நமது குடும்பம் ஆரோக்கிய ரீதியாவும், தேசத்துக்கு பொருளாதார ரீதியாகவும் நலன் சேர்க்கும்'' என்றார்.
அந்நிய செலவாணி என்பது என்ன?
ஒரு நாட்டுக்கு அந்நிய செலாவணி என்பது மிகவும் முக்கியம். ஏனென்றால் இது இருந்தால் மட்டுமே இன்னொரு நாட்டுடன் வர்த்தகம், முதலீடு உள்பட பலவற்றில் முதலீடு செய்ய முடியும். புரியும்படி கூற வேண்டும் என்றால் உள்நாட்டு கரன்சியை வெளிநாட்டு கரன்சிக்கு ஏற்ப மாற்றி கொடுக்கும் செயல்முறையாகும்.
அந்நிய செலவாணி இருந்தால் மட்டுமே நாம் பிற நாடுகளிடம் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய முடியும். இதனால் தான் தற்போது அந்நிய செலவாணி கையிருப்பை காக்க பொதுமக்கள் உதவ வேண்டும் என்று மோடி கூறியுள்ளார்.
சமையல் எண்ணெய் விலை சரிவு
சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதை தொடர்ந்து கர்நாடகாவில் சமையல் எண்ணெய் விலைகள் கிடுகிடுவென குறைய தொடங்கி உள்ளனர். அதன்படி பெரும்பாலான சமையல் எண்ணெய் பிராண்டுகளின் விலைகள் லிட்டருக்கு ரூ. 3 முதல் ரூ. 5 வரை குறைந்துள்ளன. அதேபோல் சில்லறை மற்றும் பாக்கெட் எண்ணெய் விலைகள் மட்டுமல்லாமல், பெரிய டின் அளவிலான சமையல் எண்ணெய் விலைகளும் சுமார் ரூ. 30 முதல் ரூ. 40 வரை மலிவாகியுள்ளன.
பாமாயில் விலை லிட்டருக்கு ரூ.143ல் இருந்து ரூ.141 ஆக குறைந்துள்ளது. லிட்டருக்கு ரூ.170க்கு விற்பனையான சன்ப்யூர் எண்ணெய் தற்போது ரூ.167 க்கு விற்பனையாகிறது. கடலை எண்ணெய் விலையும் லிட்டருக்கு ரூ. 190-லிருந்து ரூ. 185-ஆகக் குறைந்துள்ளது. இதனால இல்லத்தரசிகர்கள் ஹேப்பியாகி உள்ளனர்.
அரிசி விலை கிடுகிடு உயர்வு
அதேவேளையில் அதிகப்படியான ஏற்றுமதி மற்றும் பழைய இருப்பு அரிசியின் விநியோக குறைப்பு உள்ளிட்டாவற்றால் கர்நாடகாவில் அரிசி விலைகள் அதிகரித்துள்ளது. அனைத்து வகையான அரிசிகளின் விலைகளும் சுமார் 10 சதவீதம் உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பாஸ்மதி மற்றும் சீரகச் சம்பா அரிசி விலைகள் - கடுமையாக உயர்ந்துள்ளன. இது இல்லத்தரசிகளை கவலையடைய செய்துள்ளது.
அரிசி விலை உயர்வு பற்றி வர்த்தகர்கள் கூறுகையில், ''கர்நாடகாவில் இருந்து பிற நாடுகளுக்கு அதிகமாக அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.இதனால் கையிருப்பு குறைகிறது. இதனால் அரிசி விலை அதிகரித்துள்ளது. பாஸ்மதி மற்றும் சீரகச் சம்பா போன்ற உயர்தர அரிசி வகைகளில் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. பாஸ்மதி அரிசியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 90-லிருந்து ரூ. 115-ஆக உயர்ந்துள்ளது. சீரகச் சம்பா அரிசியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 180-லிருந்து ரூ. 220-ஆகப் பெரும் ஏற்றத்தைச் சந்தித்துள்ளது.
பொதுவாகப் பயன்படுத்தப்படும் அரிசி வகைகளின் விலையும் உயர்ந்துள்ளது. சோனா மசூரி அரிசியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 40-லிருந்து ரூ. 45-ஆகவும், புல்லட் அரிசியின் விலை ரூ. 65-லிருந்து ரூ. 75-ஆகவும் உயர்ந்துள்ளது. வரும் வாரங்களில் அரிசி வரத்து, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தேவை ஆகியவற்றைப் பொறுத்து விலை இருக்கும்'' என்றனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications