ஊழல் புகாரில் சிக்கிய பாஜக எம்எல்ஏவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு தந்த பாஜக! உற்று பார்த்த பொதுமக்கள்
கர்நாடகாவில் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள விருபாக்ஷப்பாவுக்கு பாஜகவினர் பெரிய வரவேற்பு கொடுத்தனர்
பெங்களூர்: கர்நாடகாவில் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள விருபாக்ஷப்பா ஜாமீன் கிடைத்த பிறகு இன்று அவர் தனது சொந்த ஊருக்குத் திரும்பினார். அங்கு ஊர் மக்கள் அவருக்கு மிகப் பெரிய வரவேற்பு கொடுத்தனர். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
கர்நாடகாவில் பொதுவாகப் பல வாரியங்கள், அரசு நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் ஆளும் தரப்பைச் சேர்ந்த தலைவர்களே இருப்பார்கள். அமைச்சர் பதவி கிடைக்காதவர்களுக்கு இதுபோன்ற பொறுப்புகள் வழங்கப்படும்.
அதன்படி மைசூரு சாண்டல் சோப் உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட் நிறுவனத்தின் (கேஎஸ்டிஎல்) தலைவராக மதல் விருபாக்ஷப்பா நியமிக்கப்பட்டார்.

மகன் கைது
இவர் கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதியின் பாஜக எம்எல்ஏ ஆவர். இவரது மகன் பிரசாந்த் மதல், பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் தலைமை கணக்காளராக உள்ளார். இதற்கிடையே கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட் நிறுவனத்தின் டெண்டர் வழங்க விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மதல் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கினார். அப்போது லோக்ஆயுக்தா போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

தலைமறைவான பாஜக எம்எல்ஏ
மேலும், அவரது வீடு மற்றும் அலுவலகத்திலும் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் ரூ.1.70 கோடி அலுவலகத்தில் இருந்தும், ரூ.6 கோடி வீட்டில் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக ரூ.7.70 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை விருபாக்ஷப்பா முழுமையாக மறுத்துள்ளார். தனக்கு எதிராகச் சிலர் சதி செய்வதாகக் குறிப்பிட்ட அவர், கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் தலைவர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்தார்.

மிகப் பெரிய வரவேற்பு
இந்த விவகாரத்தில் விருபாக்ஷப்பா கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. இதையடுத்து அவர் முன்ஜாமீன் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.. அவரது முன்ஜாமீன் மனுவை விசாரித்த கர்நாடக ஐகோர்ட் அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது. இதையடுத்து தனது மகன் கைது செய்யப்பட்டதில் இருந்து 5 நாட்கள் தலைமறைவாக இருந்த விருபக்ஷப்பா, இன்று தனது சொந்த ஊருக்குத் திரும்பினார். அப்போது அவருக்கு அங்கு ஊர் மக்கள் மிக பெரிய வரவேற்பு கொடுத்தனர். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

விருபக்ஷப்பா
அதில் எம்.எல்.ஏ-வின் காருக்கை சுற்றிக் கொண்ட பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவரை வரவேற்க மிகப் பெரிய கூட்டம் சேர்ந்துள்ளது. அங்குக் கூடியிருந்த பொதுமக்களைப் பார்த்து விருபக்ஷப்பா சிரித்துக் கொண்டே கை அசைத்தார். முன்னதாக மகன் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில், விருபாக்ஷப்பா முதன்மை குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். கேஎஸ்டிஎல் நிறுவனத்துக்கு மூலப்பொருட்கள் சப்ளை செய்ய லஞ்சம் பெற்றதாக அவரது மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக தேர்தல்
கர்நாடகாவில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே பசவராஜ் பொம்மை அரசு மீது பல்வேறு ஊழல் புகார்கள் இருந்தன. இந்தச் சூழலில் இப்போது ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவரின் மகனே கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்த விவகாரத்தை இப்போது காங்கிரசார் கையில் எடுத்துள்ளனர். கர்நாடக பாஜக தலைவர்கள் இதுபோல ஏகப்பட்ட ஊழல் செய்துள்ளதாக அவர்கள் சாடி வருகின்றனர்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications