திடீர்னு நடுங்கிய பெங்களூர்.. அலறிய மக்கள்.. வானிலிருந்து வந்த மர்ம சத்தம்.. ஒரே பரபரப்பு
பெங்களூருவில் இன்று பயங்கர சத்தம் வானத்தில் இருந்து கேட்டுள்ளது
பெங்களூரு: இன்று வானத்தில் இருந்து திடீரென பயங்கர சத்தமும், லேசான நில அதிர்வும் உணரப்பட்டதால் பெங்களூர் மக்கள் பீதியும் கலக்கமும் அடைந்தனர்.
கடந்த வருடம் மே மாதம் 20-ம் தேதி பெங்களூருவில் பயங்கர சத்தம் எழுந்தது.. அது என்ன சத்தம் என்று தெரியாத மக்கள், ஒருவேளை நில நடுக்கமாக இருக்குமோ என்று அளவுக்கு அதிகமாகவே பயந்துவிட்டனர்..
சுகோய் போர் விமானம் ஒன்று பறந்து சென்றதால் இப்படி சத்தம் கேட்டிருக்கும் என்று போலீசார் தரப்பில் அதற்கு விளக்கம் தரப்பட்டது.

என்ன சத்தம்?
இதற்கு பிறகு, 4 மாதங்களுக்கு முன்பு மறுபடியும் இதே பெங்களூருவில் மர்ம சத்தம் கேட்டது.. நகரின் பல்வேறு இடங்களில் டம், டம் என்ற சத்தத்தை மக்கள் உணர்ந்தனர்.. குறிப்பாக, கெங்கேரி, ராஜராஜேஸ்வரிநகர், விஜயநகர், ஜெயநகர், ஜே.பி.நகர், உத்தரஹள்ளி போன்ற இடங்களில் இந்த பயங்கர சத்தத்தை உணர்ந்துள்ளனர். இதற்கு சூப்பர் சோனிக் அதாவது அதிவேகமாக செல்லக்கூடிய போர் விமானம் ஒன்று பெங்களூரு நகரின் மேலே பறந்ததாகவும், அதுதான் அப்படி சத்தம் எழுப்பியதாகவும் விமான அதிகாரிகள் தரப்பில் விளக்கம் தரப்பட்டது.

பயங்கர சத்தம்
இன்றும் அதுபோலவே, ஒரு பயங்கர சத்தம் இதே பெங்களூரில் கேட்டுள்ளது.. ஹெம்மிகேபுரா, கென்கரி, ஞானபாரதி, ராஜேஸ்வரி நகர், கஜாலிபுரா போன்ற பகுதிகளில் இந்த சத்தத்தை மக்கள் கேட்டுள்ளனர்.. அந்த சத்தம் வானத்தில் இருந்து திடீரென வந்ததாம்.. பயங்கரமான சத்தமாக இருந்ததாம்.. அத்துடன் லேசான நில அதிர்வையும் உணர்ந்ததாக சொல்கிறார்கள்.

அறிக்கை
இன்று காலை 11.50 மணி முதல் 12.15 வரை அந்த சத்தம் கேட்டுக் கொண்டே இருந்துள்ளதாக கூறுகிறார்கள். இதனால் அவர்கள் அளவுக்கு அதிகமாக பயந்துவிட்டார்கள். உடனே வழக்கம்போல், சோஷியல் மீடியா பரபரப்பாகிவிட்டது.. "உங்களுக்கு கேட்டுச்சா சத்தம், எங்களுக்கு கேட்டது? அது என்னவா இருக்கும்? பயங்கரமான சத்தமா இருக்கே?" என்று பலரும் மாறி மாறி தங்கள் பயத்தை பீதிகளாக பதிவிட்டனர்.. இப்படிப்பட்ட சூழலில்தான், அம்மாநில தேசிய பேரிடர் கண்காணிப்பு மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டது..

நில அதிர்வா?
அந்த அறிக்கையில், ஹெம்மிகேபுரா, கென்கரி, ஞானபாரதி, ராஜேஸ்வரி நகர், கஜாலிபுரா போன்ற பகுதிகளில் மர்ம சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்கள் வந்தன.. ஆனால், தரவுகளை கொண்டு பார்க்கும்போது, அந்த இடத்தில் நில அதிர்வுக்கான எந்தவொரு தடயமும் இல்லை என்று விளக்கம் தந்திருந்தது. இந்த விளக்கத்தை பார்த்ததும், அந்த சத்தம் எங்கே இருந்து வந்திருக்கும் என்று பெங்களூர்வாசிகள் மேலும் குழம்பி போயுள்ளனர்.. இதுவரை அந்த சத்தத்திற்கான காரணமும் தெரியவில்லையாம்..!
-
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
பெங்களூருவுடன் ஒப்பிடுவது தவறு.. பரந்தூர் விமான நிலையம் குறித்து பூவுலகின் நண்பர்கள் கருத்து -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications