"விசாலாம் தர முடியாது".. அயோத்தி ராமர் சிலை வடித்த சிற்பிக்கே இந்த நிலையா? வேலையை காட்டிய அமெரிக்கா
பெங்களூர்: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி மாதம் நடந்தது. சிரித்த முகத்துடன் கூடிய 5 வயது பால ராமர் சிலை கோவில் நிறுவப்பட்டது. இந்த சிலையை கர்நாடகாவை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கி பெருமை பெற்றார். இந்நிலையில் தான் அமெரிக்கா செல்ல அருண் யோகிராஜ்க்கு அந்நாட்டு அரசு விசா வழங்க மறுப்பு தெரிவித்துள்ள திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
500 ஆண்டு போராட்டத்துக்கு பிறகு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பிரதமர் மோடி பங்கேற்று கோவில் கருவறையில் நிறுவப்பட்ட 5 வயது பால ராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்தார்.

ராமர் கோவில் கருவறையில் 5 வயது பால ராமர் சிலை சிரித்த முகத்துடன் இருக்கிறார். கடந்த ஜனவரி 23ம் தேதி முதல் அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் ஏராளமானவர்கள் கோவிலில் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
அயோத்தி ராமர் கோவில் சிலையை செதுக்கிய சிற்பியின் பெயர் அருண் யோகிராஜ். இவர் கர்நாடகாவின் மைசூரை சேர்ந்தவர். இவர் தான் சிரித்த முகத்துடன் கூடிய பால ராமர் சிலையை வடிவமைத்தார். இந்த சிலை பக்தர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது. குறிப்பாக அந்த சிலையின் கண்கள் அனைவரையும் சிலிர்க்க வைக்கிறது.
இந்தியாவின் சிறப்பான சிற்பி என ஏற்கனவே அருண் யோகிராஜ் பெயர் பெற்றுள்ள நிலையில் ராமர் சிலையை உருவாக்கியதன் மூலம் உலகளவில் புகழ் பெற்றுள்ளார். இத்தகைய சூழலில் தான் தற்போது அயோத்தி கோவிலுக்கு ராமர் சிலையை வடிவமைத்து கொடுத்த அருண் யோகிராஜூக்கு அமெரிக்கா செல்ல விசா மறுக்கப்பட்டுள்ளது.
அதாவது அமெரிக்காவில் ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 1ம் தேதி வரை அக்காக உலக கன்னட மாநாடு (AKKA World Kannada Conference) நடைபெற உள்ளது. அமெரிக்காவின் விர்ஜினியாவில் உள்ள கிரேட்டர் ரிச்மண்ட் கன்வென்ஷன் மையத்தில் இந்த மாநாடு என்பது நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சிற்பி அருண் யோகிராஜை பாராட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநாட்டில் பங்கேற்க வரும்படி அருண் யோகிராஜூக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அருண் யோகிராஜ் தனது மனைவி விஜிதா மற்றும் குடும்பத்துடன் அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தார். விசாவுக்கு விண்ணப்பம் செய்திருந்தார். இந்நிலையில் தான் அருண் யோகிராஜ் மற்றும் அவரது குடும்பத்துக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்துள்ளது. இருப்பினும் விசா வழங்க மறுத்ததற்கான சரியான காரணம் எதையும் அமெரிக்கா தெரிவிக்கவில்லை.
அயோத்தி ராமர் கோவிலுக்கான பால ராமர் சிலையை செய்து நிறுவிய பிறகு அருண் யோகிராஜ் வெளிநாடு எங்கேயும் செல்லாமல் இருந்தார். தற்போது நீண்டகாலத்துக்கு பிறகு அமெரிக்கா செல்ல முடிவு செய்தார். ஆனால் அமெரிக்கா சார்பில் அவருக்கு விசா வழங்க மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications