ஹிஜாப் வழக்கு: இன்று தீர்ப்பு! பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! 144 தடை உத்தரவு அமல்
பெங்களூரு: ஹிஜாப் விவகாரத்தில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ள நிலையில், கர்நாடகாவில் பல மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என சில பியு கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குப் படிக்கும் மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
இந்த விவகாரம் அப்படியே அண்டை மாவட்டங்களுக்கும் பரவியது. கர்நாடகாவில் பல மாவட்டங்களில் முஸ்லீம் மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வரக் கூடாது எனக் கல்வி நிறுவனங்கள் தெரிவித்தனர்.

ஹிஜாப் விவகாரம்
சில நாட்களிலேயே இந்தச் சம்பவம் அங்கு விஸ்வரூபம் எடுத்தது. மாணவிகள் ஹிஜாப் உடை அணிந்து வர சில இந்துத்துவ மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கல்வி நிறுவனங்களுக்குக் காவி நிற துண்டும், சில பெண்கள் காவி நிற ஷாலும் அணிந்து வந்தனர். சில கல்லூரிகளில் இரு தரப்பு மாணவர்களும் மாறி மாறி கோஷங்களையும் எழுப்பினர். கல்லூரிகளில் மிகவும் பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில், சில நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது.

நாளை தீர்ப்பு
இதையடுத்து முஸ்லீம் மாணவிகள் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு தொடரப்பட்டது. கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், ஜெஎம் காஸி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்தது. இந்தச் சூழலில் ஹிஜாப் விவகாரத்தில் இன்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது. இதன் காரணமாக அங்குப் பல மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

விடுமுறை
பெங்களூரில் ஒரு வாரம் போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே உடுப்பி, தக்ஷிண கன்னடா உள்ளிட்ட பல மாவட்டத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. கலபுர்கி மாவட்டத்தில் நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று இரவு 8 மணி முதல் மார்ச் 19 காலை 6 மணி வரை 144 தடை விதிக்கப்படுவதாக மாஜிஸ்திரேட் யஷ்வந்த் வி குருகர் அறிவித்துள்ளார்.

144 தடை உத்தரவு
அதேபோல ஹிஜாப் போராட்டம் தீவிரமாக நடந்த மாவட்டங்களில் ஒன்றான ஷிவமொகாவிலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் மார்ச் 21ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கேஎஸ்ஆர்பி, மாவட்ட ஆயுதப் படை, ஆர்.ஏ.எஃப் படையினரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஷிவமொக்கா எஸ்.பி., பி.எம்.லட்சுமி பிரசாத் தெரிவித்தார்.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications