கோட்டைவிட்ட ரஷ்யா! தோற்ற லூனா 25 விண்கலம்! இந்தியாவின் சந்திரயான்-3 சாதித்தது எப்படி? சுவாரசியம்
பெங்களூர்: நிலவின் தென்துருவத்தை ஆராய இந்தியாவுடன், ரஷ்யா போட்டியிட்டது. இத்தகைய சூழலில் ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கிய நிலையில் இந்தியாவின் சந்திரயான் 3யின் விக்ரம் லேண்டர் இன்று வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி சாதித்துள்ளது. இந்நிலையில் தான் ரஷ்யா எப்படி கோட்டை விட்டது என்பதும், இந்தியா எப்படி சாதித்தது என்பது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலக நாடுகள் கடந்த 1960ம் ஆண்டில் இருந்து நிலவு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. நிலவை குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள ஒவ்வொரு நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவில் விண்கலத்தை தரையிறக்கி உள்ளன.

இதற்கு ஒருபடி மேலே போய் அமெரிக்கா நிலவிற்கு மனிதர்களை தரையிறக்கி மீண்டும் பூமிக்கு அழைத்து வந்துள்ளது. இதன்மூலம் நிலவு குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் தான் முன்னணியில் உள்ளன.
இருப்பினும் இந்த நாடுகள் நிலவின் தென்துருவத்தை கண்டுகொள்ளவில்லை. ஏனென்றால் நிலவின் தென்துருவத்தின் பெரும்பாலான பகுதிகள் சூரியஒளி படாமல் இருள் சூழ்ந்து இருக்கும். மேலும் சமதளமான இடத்தை கண்டுபிடித்து விண்கலன்களை அங்கு தரையிறக்குவது என்பது பெரும் சவாலாகும். கரணம் தப்பினால் மரணம் என்ற பழமொழிக்கு ஏற்ப நிலவின் தென்துருவத்தில் ஆய்வுக்கு அனுப்பும் கலன்கள் சிறு தவறை எதிர்கொண்டாலும் ஒட்டுமொத்த திட்டமும் தோல்வியை சந்திக்கும்.
இது தான் இந்தியாவின் சந்திரயான் 2 திட்டத்துக்கு நிகழ்ந்தது. நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க சென்ற சந்திரயான் 2 திட்டத்தின் விக்ரம் லேண்டர் எதிர்பாராத விதமாக நிலவின் தென்துருவத்தில் சாப்ட் லேண்டிங் ஆகாமல் பொத்தென விழுந்து நொறுங்கியது. இருப்பினும் சந்திரயான் 2 திட்டத்தின் ஆர்ப்பிட்டர் என்பது நிலவின் சுற்றுவட்டபாதையில் சுற்றி வருகிறது.
இத்தகைய சூழலில் தான் சந்திரயான் 2 திட்டத்தில் கற்ற பாடங்களின் அடிப்படையில் விக்ரம் லேண்டர் மேம்படுத்தப்பட்டு சந்திரயான் 3 திட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி இன்று மாலை 6.04 மணிக்கு சந்திரயான் 3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் சாப்ட் லேண்டிங் முறையில் திட்டமிட்டப்படி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி உள்ளது. இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு இந்தியா என்றும், நிலவில் தடம்பதித்த 4வது நாடு இந்தியா என்ற பெருமையும் கிடைத்துள்ளது.
இந்நிலையில் தான் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் முதல் நாடு என்ற பெருமையை பெறும் வகையில் சந்திரயான் 3க்கு போட்டியாக ரஷ்யா சார்பில் லூனா 25 என்ற விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 10ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம் நேரடியாக நிலவை நோக்கி பயணித்தது. இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்துக்கு முன்பாக ஆகஸ்ட் 21ம் தேதியே இந்த விண்கலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த சனிக்கிழமை லூனா 25 விண்கலத்திற்கு நிலவின் சுற்றுவட்டபாதையை குறைக்கும் பணி தீவிரமாக நடந்தது. நிலவின் இறுதிக்கட்ட சுற்றுவட்டாபாதையை ரஷ்யா விஞ்ஞானிகள் குறைத்தனர். அப்போது திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கட்டுப்பாட்டை இழந்த லூனா 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது.
இத்தகைய சூழலில் தான் இந்தியா சந்திரயான் - 3 தி்ட்டம் மூலம் விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கி உள்ள நிலையில் ரஷ்யா எங்கு சறுக்கியது? இந்தியா எப்படி சாதித்தது? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது ரஷ்யாவை பொறுத்தமட்டில் கடந்த 1967 ல் நிலவில் விண்கலத்தை தரையிறக்கியது. அதன்பிறகு நிலவு குறித்த ஆய்வுகளை அந்த நாடு மேற்கொள்ளவில்லை. இது அந்த நாட்டுக்கு பெரும் பின்னடைவாக கூறப்படுகிறது.
ஆனால் இந்தியா அப்படியில்லை. கடந்த 23 ஆண்டுகளாக தொடர்ந்து சந்திரயான் திட்டம் மூலம் நிலவு குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறது. முதல் முதலாக கடந்த 2008 ல் சந்திரயான் விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. இது அங்கு நீர் மூலக்கூறுகள் இருப்பதை கண்டறிந்தது. அதன்பிறகு சந்திரயான் 2 திட்டம் 2019ல் செயல்படுத்தப்பட்டது. இதன்மூலம் ஆர்ப்பிட்டர் நிலவின் சுற்றுவட்டாபாதையில் வலம் வந்தது. இந்த ஆர்ப்பிட்டர் நிலவின் தென்துருவ பகுதிகளை தொடர்ந்து 4 ஆண்டுகளாக ஆய்வு செய்து பல்வேறு முக்கிய தகவல்களை அனுப்பி வைத்தது.
இதனை ஆய்வு செய்யும் சந்திரயான் 2 திட்டத்தில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியதற்கான காரணத்தை கண்டறிந்து அதனை மேம்படுத்தியும் இந்தியா சாதித்துள்ளது. இவ்வாறு தொடர் முயற்சியால் இந்தியா நிலவின் தென்துருவத்தில் கால்பதித்துள்ளது.
அதோடு ரஷ்யா என்பது நேரடியாக நிலவுக்கு லூனா 25 விண்கலத்தை அனுப்பியபோது நேரடியாக அது நிலவுக்கு சென்றது. இது இன்னொரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நிலவின் தென்துருவத்தில் புவிஈர்ப்பு விசை என்பது இடத்துக்கு இடம் மாறுபடும். இதனை உன்னிப்பாக கவனிப்பது மிகவும் முக்கியமாகும்.
இதனை இந்தியா முறையாக செய்தது. அதோடு நிலவு ஆராய்ச்சியில் அவசரத்தை இந்தியா காட்டவில்லை. 43 நாள் பயணத்துக்கு பிறகே இந்தியாவின் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் தரையிறங்கியது. ஆனால் ரஷ்யா இந்த லூனா 25 திட்டத்தில் அவசரம் காட்டியது. வெறும் 15 நாட்களுக்குள் நிலவின் தென்துருவத்தில் லூனா 25 விண்கலத்தை ஆய்வு செய்ய தரையிறக்க முயன்று சிக்கலை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications