40 நாடுகளின் விதைகள்.. 700 வெளிநாட்டு மரங்கள்.. 5 ஆண்டுகளில் குட்டி காட்டை உருவாக்கி.. அசத்திய நபர்
பெங்களூர்: கர்நாடகாவை சேர்ந்த அனில் பலஞ்சா எனும் நபர் ஒருவர் ஆசியாவின் பல பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட விதைகளை கொண்டு மிகவும் அரிதான 700 வெளிநாட்டு பழ மரங்களை வளர்த்து வருகிறார்.
கர்நாடக மாநிலத்தின் தட்சிண கன்னடம் பகுதியை சேர்ந்தவர் அனில் பலஞ்சா. இவரது தந்தை இயற்கை ஆர்வலராவார். மட்டுமல்லாது தனது தோட்டத்தில் ஏராளமான வித்தியாசமான மரங்களை வளர்த்து வந்திருக்கிறார். இந்தியாவின் பல்வேறு மூலைகளில் வளரும் மரங்களின் விதைகளை சேகரித்து தனது தோட்டத்தில் அதனை வளர்ந்து வந்திருக்கிறார். இதனை சிறு வயதிலிருந்து அனில் பலஞ்சா பார்த்து வந்திருக்கிறார்.
பின்னர் வளர்ந்து இவர் வேறு ஒரு வேலைக்கு சென்றிருக்கிறார். ஆனால் என்னதான் வெளியில் வேலை செய்தாலும் மனம் அதில் லயிக்கவில்லை. எனவே என்ன செய்யலாம் என்று யோசித்திருக்கிறார். இவர் பிறப்பிலேயே பெரும் பண்ணையார் என்பதால் தனது பூர்வீக 30 ஏக்கர் நிலத்தில் தனது தந்தையின் கனவை பின்தொடரலாம் என்று முடிவெடுத்திருக்கிறார். ஆனால் புதியதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்திருக்கிறார்.

யோசனை
இது குறித்து வெளிநாட்டில் இருக்கும் தன்னுடைய நண்பர்களிடம் கலந்தாலோசனை செய்கையில் அவர்கள் புது ஐடியாவை கொடுத்திருக்கிறார்கள். அதாவது, வெளிநாடுகளில் கிடைக்கும் பழங்களை உள்நாட்டிலேயே விளைவித்து அறுவடை செய்யலாம் என்பதுதான் அந்த ஐடியா. அட இது கூட நல்ல இருக்கே என நினைத்து ஐடியோ கொடுத்த நண்பர்களிடமே விதைகளை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டு பெற்றிருக்கிறார். இப்படியாக கடந்த 5 ஆண்டுகளாக சுற்றி சுற்றி விதைகளை சேகரித்துள்ளார். சேகரித்த விதைகளை தனது தோட்டத்தில் பயிரிட தொடங்கியுள்ளார்.

முயற்சி
ஆனால் எதிர்பார்த்ததை போல இந்த விதைகள் முளைக்கவில்லை. இதனால் இவர் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார். ஆரம்பத்தில் இருந்த உற்சாகம் தற்போது இல்லை. மீண்டும் நண்பர்களுடன் கலந்தாலோசனை செய்திருக்கிறார். அப்போதுதான் இவருடைய தந்தை மரங்களை வளர்க்கும் போது மேற்கொண்ட நடைமுறைகள் நினைவுக்கு வந்துள்ளன. அதேபோல மண்ணியல் குறித்தும் விரிவான ஆலோசனைகளை நிபுணர்களிடமிருந்து பெற்றிருக்கிறார். எனவே மீண்டும் முதலில் இருந்து தொடங்கியுள்ளார். வெளிநாடுகளிலிருந்து விதைகளை சேகரிப்பது, சேகரித்த விதைகளை பயிரிடுவது, அதனை கண்காணிப்பது, தேவையான உரங்களை போடுவது, புதிய உரங்களை பயன்படுத்துவது என பல முயற்சிகளுக்கு பின்னர் விதைகள் நன்றாக வளரத் தொடங்கியுள்ளன.

40 நாடுகள்
இது குறித்து அவர் கூறுகையில், செல்லப்பிராணிகளை பராமரிப்பதை போல இதனை பராமரிக்க வேண்டும். அப்போதுதான் சிறப்பாக வளரும். ஆனால் இதன் வளர்ச்சி நீண்ட நெடியதாக இருக்கும். எனவே இதனை சாத்தியமாக்க தொடர் முயற்சிகளும், பொறுமையும் அவசியம் என்று கூறியுள்ளார். இவர் எதிர்பார்த்ததை போல வெளிநாட்டு செடிகள் வளர்ந்து பருவமடைந்து பழங்களை கொடுக்க தொடங்கியுள்ளது. இவருக்கு ஆச்சரியமும், மகிழ்ச்சியும் தாங்கவில்லை. இந்த பழங்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இதனையடுத்து பர்மா, இந்தோனேசியா, தாய்லாந்து, நேபாளம், மலேசியா, கம்போடியா, வியட்நாம், பிரேசில் என சுமார் 40 நாடுகளிலிருந்து விதைகளை பெற்றிருக்கிறார்.

700 பழ வகைள்
இந்த விதைகளை பயிரிட்டதில் சில விதைகள் சிறப்பாக வளர்ந்திருக்கிறது. சிலவற்றிற்கு கூடுதல் கவனம் தேவைப்பட்டுள்ளது. சில விதைகள் எவ்வளவு முயன்றும் வளரவில்லை. ஆக இப்படியாக சுமார் 700 மரங்களை இவர் வளர்த்திருக்கிறார். இந்த மரங்களிலிருந்து அரிதான பழங்கள் கிடைத்திருக்கிறது. இந்த பழங்களுக்கு கிடைத்த வரவேற்பையடுத்து இதேபோன்ற பழங்களை உருவாக்க தனியாக தோட்டத்தை அமைத்து வருகிறார். இத்துடன் உள்ளூர் பழவகை மரங்களையும் பயிரிட்டு வருகிறார். இதனால் நல்ல லாபம் கிடைப்பதாகவும் கூறியுள்ளார். இனி வெளிநாட்டு பழங்களை சாப்பிட வெளிநாடுகளுக்கு போக வேண்டிய அவசியமில்லை. இவரது தோட்டத்திற்கு போனாலேயே போதுமானது என்று இவருடைய அக்கம் பக்கம் வீட்டினர் கூறியுள்ளனர்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications