வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
பெங்களூர்: நாடு முழுவதும் வெப்பஅலை வீசி வரும் நிலையில் வெயிலை பொருட்படுத்தாமல் முதியவர் ஒருவர் ‛‛நான் மாற்றத்துக்காக ஓட்டுபோடுவேன். வெறுப்பை பரப்புவோருக்கு அல்ல'' என்ற பதாகையுடன் சாலையில் சுற்றி வரும் முதியவரின் வீடியோ இணையதளத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்தது. அன்றைய தினம் மொத்தம் 102 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளும் அடங்கும்.

இதையடுத்து நாளை 2வது கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மொத்தம் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் கருப்பு நிற பேண்ட், கோட், தொப்பி அணிந்துள்ள முதியவர் கையில் பதாகையை வைத்து கொண்டு நடைபாதை, சிக்னல் மற்றும் ரோடுகளில் வலம் வருகிறார். அவர் வைத்துள்ள பதாகையில் ‛‛I'll Vote For Change Not For Hate'' என எழுதப்பட்டுள்ளது. அதாவது நான் மாற்றத்துக்கான ஓட்டளிக்க இருக்கிறேன். வெறுப்பை பரப்புவோருக்கு ஓட்டளிக்கமாட்டேன் என்பது தான் அதன் அர்த்தம்.
மேலும் மாற்றத்துக்காக ஓட்டளிக்க வலியுறுத்தி பிரசாரம் செய்துள்ளதால் அவர் காங்கிரஸ் அல்லது ‛இந்தியா' கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்திருப்பதையும், அவர் பாஜகவுக்கு ஓட்டளிக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தியதும் தெரியவந்துள்ளது. இந்த வீடியோ இணையதளத்தில் பேசும் பொருளான நிலையில் அவர் யார்? என்பது பற்றி பலரும் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளன.
அதன்படி வீடியோவை பார்த்தால் அதில் கன்னட எழுத்துகள் உள்ளன. மேலும் அந்த முதியவர் கர்நாடகா சட்டசபை கட்டடமான விதானசவுதா முன்பு நடந்து செல்வதும் வீடியோவில் உள்ளது. இதன்மூலம் அந்த முதியவர் பெங்களூரில் தான் இந்த பிரசாரத்தை மேற்கொண்டதை நம்மால் உறுதி செய்ய முடியும். இருப்பினும் அந்த முதியவரின் பெயர் என்ன? அவரது சொந்த ஊர் என்ன? என்பது பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
கர்நாடகாவை பொறுத்தவரை மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் பெங்களூரில் உள்ள 3 லோக்சபா தொகுதிகள் உள்பட 14 தொகுதிகளுக்கு நாளை முதற்கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு மே 7 ம் தேதி 2வது கட்டமாக மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications