அண்ணாமலை கையில் முக்கிய பொறுப்பை கொடுத்த ஜேபி நட்டா.. கர்நாடக தேர்தலுக்கான இணை பொறுப்பாளராக நியமனம்!
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜக மேலிட இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூர்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜக மேலிட இணை பொறுப்பாளராக அண்ணாமலையை நியமித்துள்ளார் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா.
கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதத்திற்கு முன்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் தற்போது அம்மாநில அரசியலில் தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கர்நாடகா மாநிலத்திற்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது பாஜக தலைமை. பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகா தேர்தல்
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. வரும் மே மாதத்தோடு கர்நாடகாவில் பாஜக அரசின் பதவிகாலம் முடிவுக்கு வருகிறது. இதனால், வரும் ஏப்ரல் - மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

2024க்கு முன்னோட்டம்
கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதத்திற்கு முன்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் தற்போது அம்மாநில அரசியலில் தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரஸ், பாஜக, மஜத என அரசியல் கட்சிகள், கட்சிப் பணிகளிலும், தேர்தல் பணிகளிலும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த சட்டமன்றத் தேர்தல் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக தென் மாநிலங்களில் கருதப்படும் என்பதால், கட்சிகள் இதில் முனைப்பு காட்டி வருகின்றன.

பொறுப்பாளர்கள் நியமனம்
இந்நிலையில், கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக மேலிட இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார். மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்ணாமலைக்கு முக்கிய பொறுப்பு
2020ல் பாஜகவில் சேர்ந்த அண்ணாமலைக்கு 2021ல் தமிழ்நாடு பாஜக தலைவர் பொறுப்பு கிடைத்தது. இந்நிலையில், 2023 கர்நாடகா சட்டமன்ற தேர்தல் இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணாமலை சுமார் 9 ஆண்டு காலம் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றியவர், எனவே, அண்ணாமலைக்கு கர்நாடகாவில் ஓரளவுக்கு செல்வாக்கு இருப்பதால் அவருக்கு அங்கு தேர்தல் இணை பொறுப்பாளராக முக்கிய பதவி கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
பாஜக, ஆர்எஸ்எஸ் பெயர்கள் இல்லாத புதிய அரசியல் முகமூடி! அண்ணாமலை பிளான் பி! மாணிக்கம் தாகூர் சூசகம் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!










Click it and Unblock the Notifications