Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலங்கிய மோடி.. இதை மட்டும் காங்கிரஸ் பண்ணியிருந்தால் பாஜக அரண்டு இருக்கும்.. ச்சா மிஸ் பண்ணிட்டாங்களே!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் மாபெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. 128 இடங்களில் வெற்றியை நோக்கி காங்கிரஸ் கட்சி சென்று கொண்டு இருக்கிறது

கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்துவிட்டது. தற்போதைய தேர்தல் ஆணைய முடிவுகளின் படி காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை விட கூடுதலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆகையால் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை அமைக்கிறது.

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை 8 மணியில் இருந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.

இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 69 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 128 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மஜத மொத்தம் 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இந்த தேர்தலில் கடைசி கட்டத்தில் சொதப்பல் இருந்திருந்தால் பாஜக 140 இடங்களுக்கும் அதிகமாக கூட வென்று இருக்கும்.

இப்போது அவர்கள் பெற்றது பெரிய வெற்றி என்றாலும் கூட.. கடைசி கட்டத்தில் சில தவறுகளை செய்யாமல் இருந்தால் இன்னும் கூடுதலாக 10 - 15 இடங்களை வென்று இருக்கும்.

காங்கிரஸ் சொதப்பிய இடங்கள்: 1. பிரதமர் மோடியை கர்நாடக மக்கள் உயர்வான இடத்தில் வைத்துள்ளார்கள். அவரை நாக பாம்பு போன்றவர் என்று காங்கிரஸ் சீனியர் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைத்தார். இதை பாஜக கையில் எடுத்தது.

இது காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பின்னடைவை கொடுத்தது. அதன்பின் மேடைக்கு மேடை மோடி தன்னை முன்னிறுத்தி பேச தொடங்கினார். தன்னை காங்கிரஸ் 94 அவமானப்படுத்திவிட்டதாக மேடைக்கு மேடை கூறினார். இது பாஜகவிற்கு பெரிய மைலேஜை கொடுத்தது.

2. முக்கியமாக காங்கிரசை எதிர்க்கும் நகரத்து மக்கள் அதிக அளவில்.. பெங்களூர் உட்பட முக்கிய நகரங்களில் பாஜகவிற்கு ஆதரவாக மாறியது. அங்கே இருக்கும் 47 நகர சீட்களில் 24ல் பாஜக வென்று உள்ளது. அந்த அளவிற்கு மோடியின் பிரச்சாரம் பாஜகவிற்கு உதவியது.

Are these 5 mistakes that caused Congress more number of seats against BJP in Karnataka?

3. லிங்காயத்து முதல்வர் ஊழல்வாதி என்று சித்தராமையா அழைத்தார். ஷெட்டர், சவதி ஆகியோரால், தவறிய லிங்காயத்து ஓட்டுகளை இழுத்து பிடிக்க பாஜக இந்த விஷயத்தை பயன்படுத்தியது. லிங்காயத்துகளையே அசிங்கப்படுத்துவிட்டார் சித்தராமையா என்று பரப்பியது பாஜக.

சித்தராமையா வார்த்தையை விட்டது பாஜகவிற்கு ஆதரவாக திரும்பியது.

4. கடைசி கட்டத்தில் மோடி பெங்களூரில் வந்து பெரிய பிரச்சாரம் செய்தது போல காங்கிரஸ் செய்யவில்லை. ராகுலின் பெங்களூர் பிரச்சாரம் ஈடுபட்டாலும் பெங்களூர் தெற்கு போன்ற பகுதிகளில் பெரிய பாதிப்பை அது ஏற்படுத்தவில்லை.

5. இதெல்லாம் போக கடலோர மாவட்டங்களில் பாஜக 19 இடங்களில் 12ல் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 5ல் முன்னிலை பெற்றுள்ளது. இதற்கு காரணம் அங்கே உள்ள மதவாத அமைப்புகள்.

முக்கியமாக காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில், பஜ்ரங்தள் அமைப்பை தடை செய்வோம் என்று அறிவித்தது. கர்நாடகாவில் அனுமனை பஜ்ரங்கி என்று அழைப்பார்கள். எனவே, பஜ்ரங்தள் தடையை அனுமாருக்கு எதிரானதாக மாற்றியது பாஜக. எனவே காங்கிரஸ் பல்டியடித்தனர். கர்நாடகாவில் அனுமார் கோவில்களை கட்டுவோம் என்று டிகே சிவகுமாரே அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

அதுவரைக்கும் அபன்சிவ் மோடில் இருந்த காங்கிரஸ் கடைசி நேரத்தில் காங்கிரஸ் டிபன்சிவ் மோடுக்கு தள்ளப்பட்டதுதான் மிகப்பெரிய வெற்றியை ருசிக்க முடியாமல் போக காரணம்.

இந்த சறுக்கல்கள் இல்லையென்றால் காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக 140 இடங்களை கூட தேர்தலில் வென்று இருக்கும் என்று உட்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+