பாஜகவை பங்கம் செய்த டிகே சிவகுமார்.. கர்நாடக சட்டசபை வளாகத்தை கோமியத்தால் சுத்தம் செய்த காங்கிரஸ்
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினர் விதானசவுதா வளாகத்தை கோமியம் கொண்டு சுத்தம் செய்துள்ளனர் காங்கிரசார் .
கர்நாடக சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை காங்கிரஸ் கட்சி பதிவு செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.
அங்கு எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 66 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மஜத மொத்தம் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பாஜகவின் இந்த படுதோல்வி அதிமுகவிற்கு ஒரு எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது.அங்கே ஆளும் கட்சியாக இருந்தும் கூட, பிரதமர் தீவிர பிரச்சாரங்களை செய்தும் கூட பாஜக ஆட்சியை இழந்து உள்ளது.
முதல்வர் தேர்வு மோதல்: கர்நாடகாவின் முதல்வராக சித்தராமையா அந்த கட்சி சார்பாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். துணை முதல்வராக டிகே சிவக்குமார் தேர்வாகி இருக்கிறார். இவர்கள் கடந்த சனிக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டனர்.
அங்கே முதல்வரை தேர்வு செய்வதில் கடும் இழுபறி நிலவி வந்தது. முதல்வர் பதவிக்கு அங்கே சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையே போட்டி நிலவி வந்தது.
டிகே சிவக்குமார் அங்கே காங்கிரஸ் தலைவர், எதிர்காலத்தில் காங்கிரசின் தேசிய தலைவர்களில் ஒருவராக வருவார் என்று கருதப்படும் நபர், அதோடு முன்னாள் அமைச்சர், கடந்த முறை ஜேடிஎஸ் உடன் கூட்டணி ஆட்சி அமைக்க முக்கிய காரணம் டிகே சிவக்குமார்தான்.
அதோடு தொண்டர்கள் பலம் கொண்ட தலைவர். இன்னொரு பக்கம் சித்தராமையா முன்னாள் முதல்வர், எதிர்கட்சித் தலைவர், முன்னாள் அமைச்சர், காங்கிரஸ் கட்சியின் அடையாளம், முகம், நிர்வாகிகள் பொரும்பாலும் இவர் பக்கம்தான், அரசியல் ராஜதந்திரி.
இதனால் இவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்த நிலையில்தான் கடைசியில் அங்கே சித்தராமையா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
சுத்தம் செய்தனர்: இந்த நிலையில் இன்று கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினர் விதானசவுதா வளாகத்தை கோமியம் கொண்டு சுத்தம் செய்துள்ளனர் காங்கிரசார் .
சட்டசபை தேர்தல் நடப்பதற்கு முன் கடந்த ஜனவரி மாதம் பேட்டி அளித்த டிகே சிவக்குமார், இந்த பாஜக அரசாங்கத்திற்கு இன்னும் 40-45 நாட்கள் மட்டுமே உள்ளன. அதற்கு மேல் அவர்கள் ஆட்சியில் இருக்க மாட்டார்கள்.

உங்கள் கூடாரங்களைக் கட்டி நடையை கட்டுவதற்கான நேரம் இது. அவர்கள் போனதும் டெட்டால் மூலம் விதான சவுதாவை சுத்தம் செய்வோம். அதேபோல் கோமியத்தை வைத்து விதான் சவுதாவை சுத்திகரிக்க வேண்டும்,. விதான் சவுதாவை விட்டு.. இந்த பொல்லாத அரசு போக வேண்டும். அதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். தேர்தல் வரப்போகிறது.. உடனே அமைச்சர்களை மூட்டை கட்டச் சொல்லுங்கள், என்றார்.
அவர் அப்போது எடுத்த சபதத்தின் படியே தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினர் விதானசவுதா வளாகத்தை கோமியம் கொண்டு சுத்தம் செய்துள்ளனர் காங்கிரசார் . வளாக பகுதியில் கோமியத்தை தூவி காங்கிரஸ் கட்சியினர் நீண்ட நேரம் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
சிலர் அங்கே டெட்டால் தெளித்தும் சுத்தம் செய்தனர். கர்நாடக சட்டசபையில் இது போன்ற சுவாரசியமான சம்பவங்கள் நடப்பது வழக்கம். இதற்கு முன் எலுமிச்சை மந்திரித்து வைத்த சம்பவங்கள் கூட நடந்து உள்ளன.
அதேநேரம், இப்படி ஒரு சம்பவம் இதற்கு முன்பு நடந்ததில்லை. ஆனால் அதிரடி அரசியலுக்கு பெயர் பெற்ற டிகே சிவகுமாரை தலைவராக கொண்ட காங்கிரஸ் இப்படி ஒரு வேலையை பார்த்ததில் ஆச்சரியமும் இல்லை. தேர்தலுக்கு முன்பாக சிலிண்டரை வைத்து பூஜை செய்த வியூகத்தின் பின்னணியிலும் டிகே சிவகுமார் இருந்தார். சிலிண்டர் விலை உயர்வை மக்கள் மறக்கவிடாமல் செய்தது பாஜக தோல்விக்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications