தங்கமே, ஒரு முத்தம் கொடு பேபி.. பெண் ரவுடியிடம் வழிந்த இன்ஸ்பெக்டர்.. அப்பறம் என்னாச்சு தெரியுமா
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூருவில், ஒரு போலீஸ்காரர் தந்த பாலியல் கொடுமைதான் இணையத்தில் றெக்கை கட்டி பறக்கிறது.. அதுவும் முத்தம் கேட்டுள்ளார் போலீஸ்காரர்.. இத்தனைக்கும் அந்த பெண், ஒரு பிரபல ரவுடியாம்.. இந்த நியூஸ்தான் தற்போது காட்டுத்தீயாக பரவி வருகிறது.. போலீசார் இது தொடர்பான விசாரணையை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
யஷஸ்வினி கௌடா என்ற பெண் பெங்களூரை சேர்ந்தவர்.. அந்த பகுதியில் பிரபலமான ஒரு பெண் ரவுடியும்கூட.. இந்த பெண்ணுக்கு 45 வயதாகிறது..

இவர் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.. குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதம் கடத்தல் வழக்கு ஒன்றில் இவர் கைது செய்யப்பட்டார்.. இவர் பிரபல ரவுடி என்பதால், காவல் துறை அவரை ஒரு "குற்றவாளிப் பட்டியலில்" வைத்துள்ளனர்.. அதனால் இவரை "ரவுடி ஷீட்டர்" என்று அழைப்பார்களாம்..
பெங்களூர் இன்ஸ்பெக்டர்
இந்த ரவுடி பெண்ணுக்கும், இன்ஸ்பெக்டர் பாப்பண்ணாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.. இந்த பழக்கத்தை சாதகமாகப் பயன்படுத்தி இன்ஸ்பெக்டர் பாப்பண்ணா, யஷஸ்வினிக்கு வாட்ஸ்-அப் மூலம் தொடர்ந்து ஆபாசமான குறுந்தகவல்களை அனுப்பி வந்துள்ளார்..
பெண் ரவுடி யஷஸ்வினி கௌடாவிடம் மிகத் தரக்குறைவாக நடந்து கொண்டதாகவும் தெரிகிறது.. ஒருகட்டத்தில் பாப்பண்ணாவின் டார்ச்சர் அதிகரித்துவிடவும், அதற்கு மேல் பொறுக்க முடியாத பெண் ரவுடி, இது தொடர்பாக பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சீமந்த்குமார் சிங்கிடம் புகார் தந்துவிட்டார்.. அந்த புகார் மனுவில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாம்..
பெண் ரவுடி - முத்தம்
அத்துடன், இன்ஸ்பெக்டர் பாப்பண்ணா, ஆபாசமாக பேசிய ஆடியோ ஒன்றையும் பெண் ரவுடி போலீசில் ஆதாரமாக தந்துள்ளார்.. இந்த ஆடியோதான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது..
அதில் யஷஸ்வினியை அவர் "யஷ் நீ என் தங்கம்", "பேபி" என்று செல்லமாக அழைத்துப் பேசியுள்ளார்.. மேலும் ஒரு படி மேலே போய், "என் பெயரை பாப்பண்ணா என்று கூப்பிடாதே.. சுருக்கமாக பாப்பு என்று தான் கூப்பிட வேண்டும்" என்கிறார்..
அதற்கு யஷஸ்வினி, "நீங்கள் ஒரு இன்ஸ்பெக்டர், உங்களை எப்படி நான் பாப்பு என்று கூப்பிடுவேன்?" என்று கேட்டதற்கு, "என்னை இன்ஸ்பெக்டர் என்று சொன்னால் உன் வீட்டுக்கே வந்து உதைப்பேன்" என்று மிரட்டியதும் அந்த ஆடியோவில் தெளிவாக உள்ளது..
இதுமட்டுமின்றி, செல்போனில் பேசும்போது யஷஸ்வினியிடம் ஆபாசமாகப் பேசிய பாப்பண்ணா, அவரிடம் முத்தம் கொடுக்கும்படி கேட்டு நச்சரித்துள்ளார்.. இந்த விவகாரத்தை யாரிடமாவது சொன்னால் கூலிப்படையை ஏவி உன்னைக் கொலை செய்து விடுவேன் என்றும் அந்த அதிகாரி மிரட்டல் விடுத்ததாக யஷஸ்வினி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்..
பெங்களூரு அதிர்ச்சி சம்பவம்
இந்த புகாரோடு சேர்த்து தன்னிடம் உள்ள ஆபாச மெசேஜ்கள், போட்டோக்கள் உள்ளிட்டவைகளையும், போலீஸ் கமிஷனரிடம் அந்த பெண் ஒப்படைத்துள்ளார்.. இந்த விவகாரம் குறித்து ஜெயநகர் உதவி காவல் ஆணையர் தலைமையில் தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பாப்பண்ணா மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
ஆனால், இந்தச் சம்பவம் பெங்களூரு காவல்துறை வட்டாரத்தில் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.. ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் அதிகாரி, ரவுடி ஒருவருடன் இவ்வளவு நெருக்கமான மற்றும் ஆபாசமான தொடர்பில் இருந்தது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது..
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications