முன்னாள் காதலனால்.. கண், மார்பு எல்லா இடத்திலும் காயம்.. பிரபல தமிழ் நடிகைக்கு நடந்த அதிபயங்கரம்

உடல் முழுக்க காயங்களுடன் பிரபல நடிகை அனிகா விக்ரமன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: உடல் முழுக்க காயங்களுடன் பிரபல நடிகை அனிகா விக்ரமன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது முன்னாள் காதலனால் இப்படி தாக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.

தனது காயங்களின் புகைப்படங்களையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள அனிகா விக்ரமன், தனது முன்னாள் காதலன் அனூப் பிள்ளை தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விஷமக்காரன், எங்க பாட்டன் சொத்து உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளவர் நடிகை அனிகா விக்ரமன். இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பிறந்தவர்.

மலையாளம்

மலையாளம்

இவருக்கு கல்லூரி படிப்பிற்கு பின்னர் நடிக்கும் ஆர்வம் வந்திருக்கிறது. இந்த ஆர்வம் காரணமாக கே என்னும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து எங்க பாட்டன் பார்த்தியா, விஷமக்காரன் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது மலையாள படங்களில் அனிகா விக்ரமன் அதிகமாக நடித்து வருகிறார்.

சித்ரவதை

சித்ரவதை

இவர் சமூக வலைதளத்தில் காயத்துடன் புகைப்படத்தை பதிவிட்டு தனது காதலன் மீது பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "நான் அனூப் பிள்ளை என்ற நபரை காதலித்தேன். ஆனால் அவர் என்னை பல வருடங்களாக மனதளவிலும், உடலளவிலும் சித்ரவதை செய்து வந்தார். முதலில் சென்னையில் வைத்து என்னை தாக்கினார். ஆனால் அதன்பின்னர் காலில் விழுந்து அழுததால் அதனை பெரிது படுத்தாமல் விட்டுவிட்டேன்.

விலக முயற்சித்தேன்

விலக முயற்சித்தேன்

தொடர்ந்து இரண்டாவது முறையாக என்னை துன்புறுத்தியதால் பெங்களூரு போலீசில் புகார் அளித்தேன். ஆனால் அவர் காவல்துறையினரிடம் பணம் கொடுத்து என்னை சிக்கவைத்தார். மேலும் போலீசார் தன்னுடன் இருப்பதாக நினைத்து தொடர்ந்து கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தார். இதன்பின்னர் கடந்த சில ஆண்டுகளாக அனூப்பால் நான் ஏமாற்றப்பட்டு வருவதை அறிந்தேன். அதனால் அவரை விட்டு விலக முடிவு செய்தேன். ஆனால் அவர் என்னை விட்டு விலக தயாராக இல்லை.

மொபைல் உடைப்பு

மொபைல் உடைப்பு

நான் படப்பிடிற்கே சென்றுவிடக்கூடாது என்று விரும்பிய அவர், அதற்காக என் மொபைலை உடைத்தார். அதேநேரம் என் வாட்ஸ்அப்பை எனக்கு தெரியாமல் லேப்டாப்பில் இணைத்து பார்த்துக் கொண்டிருந்தார். மிரட்டலுக்கு அஞ்சாத நிலையில், உச்சகட்டமாக என்னையும், எனது குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக மிரட்டுகிறார்.

உடலில் காயங்கள்

உடலில் காயங்கள்

தற்போது அனூப் நியூயார்க்கில் தலைமறைவாக உள்ளார். அவரது சித்திரவதையால் ஏற்பட்ட காயங்கள் இப்போது கொஞ்சம் சரியாகிவிட்டது. நானும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறேன். அடுத்த வாரம் முதல் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்து கொள்வேன்" இவ்வாறு நடிகை அனிகா விக்ரமன் தெரிவித்துள்ளார். உடல் முழுக்க காயங்களுடன் பிரபல நடிகை அனிகா விக்ரமன் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+