நாட்டில் ஒரே நாளில் 3 HMPV பாதிப்புகள்.. பெங்களூர், குஜராத்தில் குழந்தைகளுக்கு தொற்று உறுதி!
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் முதலில் 8 மாத குழந்தைக்கு ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது பரபரப்பைக் கிளப்பியது. இதற்கிடையே பெங்களூரில் மற்றொரு குழந்தைக்கும் மற்றும் அகமதாபாத்தில் ஒரு குழந்தைக்கும் இந்த வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் மூலம் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்பு இப்போது இந்தியாவிலும் நுழைந்துள்ளது. பெங்களூரில் 8 மாத குழந்தைக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்த முதல் ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களே நமக்கு பெரும் அதிர்ச்சியைக் கிளப்பி இருந்தது. இதிலிருந்து மீண்டு வருவதற்குள் இப்போது மீண்டும் மற்றொரு குழந்தைக்கும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 3 பாதிப்பு:
அதே பெங்களூரில் மூன்று மாத குழந்தைக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு மூச்சுக்குழாய் நிமோனியா பாதிப்பு இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் நல்ல நிலையிலேயே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மூன்றாவது பாதிப்பு குஜராத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் இரண்டு மாத குழந்தைக்கு வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இப்படி அடுத்தடுத்து 3 குழந்தைகளுக்கு ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இந்த 3 குழந்தைகளுமே வெளிநாட்டுப் பயணம் எதையும் மேற்கொள்ளவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை:
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "நாடு முழுக்க சுவாச நோய் பாதிப்பைக் கண்காணிக்க ஐசிஎம்ஆர் தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்து வருகிறது. அப்படி நடத்தப்பட்ட வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கையில் இரண்டு கேஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது.. HMPV ஏற்கனவே இந்தியா உட்படப் பல நாடுகளில் புழக்கத்தில் உள்ளது. HMPV உடன் தொடர்புடைய சுவாச நோய்களும் இதற்கு முன்பு பல நாடுகளில் பதிவாகியுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
HMPV என்பது ஒரு சுவாச வைரஸ் ஆகும். இது சளி, இருமல் போன்ற லேசான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. அதேநேரம் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு இது வேறு பல பாதிப்புகளையும் கூட ஏற்படுத்தும். சில அரிய சூழல்களில் மோசமான வைரஸ் பாதிப்பு நிமோனியாவை கூட ஏற்படுத்தலாம், இதனால் நாள்பட்ட சுவாச பாதிப்பும் ஏற்படும். பொதுவாகக் குளிர்காலத்தில் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படும்.
அவசர ஆலோசனை:
முன்னதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை தான் ஹெச்எம்பிவி உள்ளிட்ட சுவாச வைரஸ்களைக் கண்காணித்து வருவதாக மத்திய அரசு அறிவித்தது. உலக சுகாதார அமைப்பு, தேசிய நோய் கட்டுப்பாடு மையம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பிற சுகாதார அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கடந்த சனிக்கிழமை தான் விரிவான ஆலோசனைக் கூட்டம் ஒன்றும் நடந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கியம்:
நாம் இன்னொரு விஷயத்தையும் இதில் கவனிக்க வேண்டும். அதாவது இந்த ஹெச்எம்பிவி வைரசில் பல திரிபுகள் உள்ளன.. அதில் சீனாவில் இப்போது ஒரு குறிப்பிட்ட திரிபு தான் வேமகாக பரவி வருகிறது. அது என்ன திரிபு என்பதைச் சீனா அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், அதே திரிபு தான் நமது நாட்டிலும் ஏற்பட்டுள்ளது என்பதை நம்மால் சொல்ல முடியாது. இது வழக்கமான மற்ற திரிபுகளாக இருக்க வாய்ப்புகள் அதிகம். இதனால் நாம் அச்சப்படத் தேவையில்லை
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications