மங்காத்தா பாணியில் போலீஸ் செய்த காரியம்.. பெங்களூரில் 7 கோடி கொள்ளை வழக்கில் ட்விஸ்ட்.. பரபர தகவல்
பெங்களூர்: பெங்களூரில் ஏடிஎம் மையத்தில் நிரப்ப எடுத்து சென்ற 7.11 கோடி ரூபாய், பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், ஒரு போலீஸ்காரர் உள்பட3 பேரை போலீசார், சம்பவம் நடந்து 50 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் பணிகளை சி.எம்.எஸ். என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அந்த நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள், கடந்த 19 ஆம் தேதி ஜே.பி. நகரில் உள்ள வங்கியில் பல கோடி ரூபாய் பணத்தை வாங்கி கொண்டு, பாதுகாப்பு வாகனத்தில் ஏடிஎம் மையங்களில் நிரப்ப எடுத்துச் சென்றனர்.

8 தனிப்படைகள் அமைப்பு
அப்போது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எனக்கூறி, காரில் வந்த மர்ம நபர்கள், பணம் எடுத்து வந்த சி.எம்.எஸ். வாகனத்தை கடத்தினார்கள். பின்னர் ரூ.7.11 கோடியை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். பெங்களூரில் பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் நாட்டையே அதிர வைத்தது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சித்தாப்புரா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் 8 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் முதலில் தமிழ்நாட்டுக்கு செல்வது போல் காரில் சென்றும், ஒசூர் வழியாக பட்டரஹள்ளிக்கு பயணித்து, அங்கிருந்து ஆந்திர மாநிலத்திற்கு தப்பித்து சென்றிருந்தனர்.
ரூ.7.11 கோடி கொள்ளை
ஆனாலும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட செல்போன் சிக்னல்களையும் போலீசார் சேகரித்து, தப்பி ஓடியவர்களை தேடினர். அதன்படி, நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் திருப்பதியில் கொள்ளையர்கள் பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் சித்தூரில் வைத்து ஹேமந்த் மற்றும் சுனில் ஆகிய 2 பேரும் போலீசாரிடம் சிக்கினர். அதுபோல், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சென்ற 2 கொள்ளையர்களும் போலீசாரிடம் சிக்கினர். அதேபோல, ரூ.7.11 கோடி கொள்ளையில் கோவிந்தபுரா போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் அன்னப்ப நாயக் மற்றும் சி.எம்.எஸ். பாதுகாப்பு நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான சேவியர் ஆகிய 2 பேரும் சிக்கியுள்ளனர்.
ரூ.5.30 கோடி பறிமுதல்
இவர்களிடம் கொள்ளை தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் 6 பேரிடமிருந்து இதுவரை ரூ.5.30 கோடியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மீதமுள்ள ரூ.1.81 கோடியை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த பணம், இந்த கொள்ளையில் மூளையாக செயல்பட்ட ரவி மற்றும் இன்னொரு நபரிடம் இருப்பது பற்றிய தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து, அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ரவியின் மனைவியை பிடித்து போலீசார் விசாரித்து, அவரைப் பற்றிய தகவல்களை சேகரித்துள்ளனர். அதன்படி, ரவி ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். அதில் நஷ்டம் அடைந்ததால், அந்த தொழிலை அவர் கைவிட்டார்.
கொள்ளையை அறங்கேற்றியது எப்படி?
அதன்பிறகு, வேலைக்கு எங்கும் செல்லாமல் இருந்த ரவி பானசவாடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் மூலமாக இந்த கொள்ளையை அரங்கேற்றியதாக, அவரது மனைவியிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரவி மற்றும் இன்னொரு குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
அதே நேரத்தில் நேற்று முன்தினம் சிக்கியுள்ள போலீஸ்காரர் அன்னப்ப நாயக், சி.எம்.எஸ். முன்னாள் ஊழியரான சேவியர் ஆகியோர் சேர்ந்து ரூ.7.11 கோடியை கொள்ளையடிக்க பல்வேறு திட்டங்களை வகுத்ததும் தெரியவந்துள்ளது. சேவியர் சி.எம்.எஸ். நிறுவனத்தில் 2.5 மாதங்கள் மட்டுமே ஊழியராக பணியாற்றியிருந்தார். அதனால் அந்த நிறுவனம் எந்தெந்த வங்கிகளில் இருந்து பணத்தை வாங்கிச் சென்று ஏடிஎம் மையங்களில் நிரப்புகிறது உள்ளிட்ட தகவல்கள் அவருக்கு தெரிந்திருந்தது.
மங்காத்தா பாணியில்
அதுபோல், கொள்ளையடித்த பின்பு போலீசாரிடம் இருந்து சிக்காமல் இருக்க எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பது பற்றிய தகவல்களை அன்னப்ப நாயக் கொள்ளையர்களிடம் தெரிவித்திருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அன்னப்ப நாயக், சேவியர் உள்பட 6 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. கொள்ளையில் சம்பந்தப்பட்ட மற்றவர்களை பிடிக்கவும், மீதமுள்ள பணத்தை மீட்கவும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூரில் பட்டப்பகலில் நடந்த இந்த ஏடிஎம் கொள்ளை, 'மங்காத்தா' படத்தில் போலீஸாக இருக்கும் அர்ஜூனும், கொள்ளையை நிகழ்த்தும் அஜித்தும் திரைமறைவில் இணைந்து செயல்படுவதைப் போலவே நடந்ததாக கூறப்படுகிறது. பெங்களூரின் இந்த ஏடிஎம் கொள்ளை அனைவரையும் அதிர வைத்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications